ஜனநாயக உணர்வும் உள்ளவர்கள் வரவேற்பார்கள்!

ஜம்மு-காஷ்மீரத் துக்கான சிறப்பு அந்தஸ்து அகற்றப்படும் என்கிற நிலைப்பாடு தேர்தல் வாக்குறுதியாக பாஜக.,வால் இன்று நேற்றல்ல, 1980-இல் அந்தக்கட்சி தொடங்கப்பட்டபோதே  கூறப்பட்டது.  எந்தவொரு கட்சியும் தனது கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதற்காகத்தான் ஆட்சிக்கு வருகிறது என்பதை உணர்ந்தால், நரேந்திர மோடி அரசின் இந்த முடிவில்  தவறுகாண முடியாது.

கடந்த 70 ஆண்டுகாலமாக 370, 35 (ஏ) சட்டப் பிரிவு ஜம்மு-காஷ்மீரத்தின் அமைதிக்கோ, வளர்ச்சிக்கோ எந்த விதத்திலும்  உதவவில்லை எனும் நிலையில், அவை மறு பரிசீலனை செய்யப்படுவதிலும், அகற்றப்படுவதிலும் தவறில்லை. எந்தவொரு சட்டமும் காலமாற்றத்துக்கும், தேவைக்கும் ஏற்ப திருத்தப்படுவது தவிர்க்க முடியாதது.

காஷ்மீர் பள்ளத்தாக்கின் சந்தர்ப்பவாத அரசியல் குடும்பங்களான அப்துல்லாக்களும், முஃப்திகளும், பிரிவினைவாதத் தலைவர்களும் சொகுசுவாழ்க்கை வாழ்வதற்கு, இந்தியாவின் ஏனைய பகுதியில் வாழ்பவர்களின் வரி வருவாய் பயன்படுகிறது என்பதை எத்தனை காலம்தான் சகித்துக்கொண்டிருப்பது? தங்களது குழந்தைகளை லண்டனிலும், நியூயார்க்கிலும் படிப்பதற்கு அனுப்பிவிட்டு, காஷ்மீர் பள்ளத்தாக்கிலுள்ள அப்பாவி இளைஞர்கள் கல்லெறிந்து போராட்டம் நடத்தவும், கல்வியைப் புறக்கணிக்கவும் அரசியல்வாதிகளும், பிரிவினைவாதிகளும் தூண்டிவிடுவதற்கு என்றைக்காவது ஒருநாள், யாராவது முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும். பிரதமர் நரேந்திர மோடி அரசு அதைத்தான் செய்திருக்கிறது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், காஷ்மீர் பள்ளத்தாக்கு என்பது ஒரு சிறிய பகுதிதானே தவிர, மொத்த மாநிலமும்  அல்ல. 22 மாவட்டங்களைக் கொண்ட ஜம்மு-காஷ்மீரத்தில் காஷ்மீர் பள்ளத்தாக்கு என்கிற பகுதி  மூன்றரை மாவட்டங்களை மட்டுமே கொண்டுள்ளது.  ஆனால், 35 (ஏ) சட்டப்பிரிவின்படி நிரந்தரக் குடிமக்களாக அவர்கள் கருதப்பட்டு அந்த பகுதியில் அவர்கள் மட்டுமே அசையா சொத்து வைத்திருக்க முடியும், அரசு வேலைவாய்ப்புப் பெறமுடியும், கல்லூரியில் படிக்க முடியும் என்று  சொன்னால்,  அது  எந்த விதத்தில் நியாயம்?

காஷ்மீரிகளை  இந்திய ராணுவத்தில் சேர்த்துக்கொள்வது அடிப்படை உரிமையாக இருக்கவேண்டும் என்று காஷ்மீர் ஒப்பந்தத்தின் போது பிடிவாதம் பிடித்த ஷேக் அப்துல்லா, ஜம்மு-காஷ்மீர் காவல் துறையில் காஷ்மீரிகள் அல்லாதவர்களுக்கு இடம்கிடையாது என்று தடுத்தகதை எத்தனை பேருக்குத் தெரியும்?

2002-இல் சட்டப்பிரிவு 370-ஐ பயன்படுத்தி ஃபரூக் அப்துல்லா மாநில அரசமைப்புச் சட்டத்தில் ஒருதிருத்தம் கொண்டுவந்தார். அதன்படி 2026 வரை ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் எந்தவிதத் தொகுதி சீரமைப்புக்கும் தடை விதிக்கப்பட்டது. அதனால், 87 உறுப்பினர்கள் கொண்ட ஜம்மு-காஷ்மீர் அவையில் வெறும் மூன்றரை மாவட்டங்கள் மட்டுமே உள்ள காஷ்மீர் பள்ளத்தாக்கைச் சேர்ந்த 46 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். ஜனநாயகத்தைக் கேலிப்பொருளாக்கி, தங்களது ஆட்சி அதிகாரத்தை நிலைநாட்டிக் கொண்டிருந்த அப்துல்லாக் களுக்கும், முஃப்திகளுக்கும்  இப்போதைய முடிவு, முடிவுகட்டும்.

ஜவாஹர்லால் நேரு என்கிற தனிமனிதரின் பிடிவாதத்தால்தான் 370, 35(ஏ) சட்டப் பிரிவுகள் அரசியல் சாசனத்தில் இணைக்கப்பட்டன. அன்றைய அரசியல் சாசன வரைவுக்குழுவின் தலைவரும் சட்ட அமைச்சருமாக இருந்த பாபா சாகேப் அம்பேத்கர் இந்தப் பிரிவுகளை அரசியல் சாசனத்தில் இணைக்க மறுத்தார். அன்றைய உள்துறை அமைச்சர் சர்தார் வல்லப பாய் படேல், அந்தக் கோரிக்கையை நிராகரித்தார். பிரதமராக இருந்த பண்டித ஜவாஹர்லால் நேரு, அல்லாடி கிருஷ்ணசாமி ஐயங்காரின் உதவியுடன் காஷ்மீர் ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ளவும், 370, 35 (ஏ) சட்டப்பிரிவுகளை அரசியல் சாசனத்தில் இணைக்கவும்  வற்புறுத்தி வெற்றிகண்டார் என்பது வரலாறு.

நீங்கள் உங்கள் எல்லைகளை இந்தியா பாதுகாக்க வேண்டும் என்கிறீர்கள். உங்கள் பகுதிகளில் நாங்கள் சாலைகளை அமைக்க வேண்டும் என்கிறீர்கள். உங்களுக்கு உணவுப் பொருள்களை வழங்க வேண்டும் என்கிறீர்கள். இந்தியாவின் ஏனைய மாநிலங்களுக்கு நிகரான அந்தஸ்தை காஷ்மீர் பெறவேண்டும் என்கிறீர்கள். அதே நேரத்தில், இந்திய அரசுக்கு உங்கள் பகுதியில் எந்தவித அதிகாரமும் இருக்கக்கூடாது, இந்திய மக்களுக்கு காஷ்மீரில் எந்த உரிமையும் இருக்கக்கூடாது என்று வற்புறுத்துகிறீர்கள். இதற்கு நான் ஒத்துக்கொண்டால், இந்தியாவுக்கு துரோகம் இழைத்தவனாக நான் கருதப்படுவேன். இந்தியாவின் சட்ட அமைச்சர் என்கிற முறையில் அதை நான் ஒருபோதும் செய்ய மாட்டேன் என்று ஷேக் அப்துல்லாவின் முகத்துக்கு நேரே சொன்னவர் பாபா சாகேப் அம்பேத்கர் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

காஷ்மீர் பள்ளத்தாக்கில் குடியேற்றம் ஏற்பட்டு அந்தஇனம் அழிந்து விடும் என்று முதலைக் கண்ணீர் வடிப்பவர்கள், காஷ்மீரில் உள்ள முஸ்லிம்களைப் போலவே சமஉரிமை பெற்ற மண்ணின் மைந்தர்களான காஷ்மீரி பண்டிட்டுகள் ஈவிரக்கம் இல்லாமல் கொல்லப்பட்டும்,  அடித்து விரட்டப்பட்டும் உடைமைகள் அனைத்தும் கபளீகரம் செய்யப்பட்ட போது எங்கே போயிருந்தார்கள்? சட்டப்பிரிவு 370-இன் அடிப்படையில் சம உரிமை பெற்றவர்கள்தானே காஷ்மீரி பண்டிட்டுகளும்?

இனப்படுகொலை என்பது மதம் சார்ந்ததல்ல, மனிதம் சார்ந்தது.  அரசியல் சாசனமும், சட்டமும் ஒருமைப்படுத்து வதற்கும், மேம்படுத்துவதற்கும் தானே தவிர, பிரிவினைவாதத்தை அனுமதிப்பதற்காக அல்ல. இதை உணர்ந்து கொண்டால், காஷ்மீரின் தனி அந்தஸ்துக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கும் பிரதமர் நரேந்திர மோடி அரசின் முடிவை நாட்டுப்பற்றும், ஜனநாயக உணர்வும் உள்ளவர்கள் வரவேற்பார்கள்!

நன்றி தினமணி

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

செங்கோல் என்ன செய்யும்?

செங்கோல் என்ன செய்யும்? கொடுங்கோன்மை' என்ற சொல்லுக்கு மாற்றாக 'செங்கோன்மை' என்ற சொல்லை ...

ஆனந்த் பவனில் ‘வாக்கிங் ஸ்டிக ...

ஆனந்த் பவனில் ‘வாக்கிங் ஸ்டிக்’காக இருந்ததை வெளிக்கொண்டு வந்துள்ளோம் புதிய பார்லிமென்டில் நிறுவப்பட உள்ள செங்கோல் பிரதமர் நரேந்திர ...

மோடி கைபட்டால் குற்றம், கால்பட் ...

மோடி கைபட்டால் குற்றம், கால்பட்டால் குற்றம் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டங்களில் ஒன்று ...

கர்நாடக தேர்தல் முடிவு தேசத்தி ...

கர்நாடக தேர்தல் முடிவு தேசத்தின் மனோநிலை ஆகாது நடந்து முடிந்த கர்நாடக மாநில சட்டமன்ற   தேர்தலில் காங்கிரஸ் ...

ரூ.1.31 லட்சம் கோடி: திமுகவின் சொத் ...

ரூ.1.31 லட்சம் கோடி: திமுகவின் சொத்து பட்டியலை வெளியிட்டார் அண்ணாமலை! தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை இன்று ஆளும் தி.மு.க., ...

நமது ஆட்சிமுறையும் சுவாமி விவே ...

நமது ஆட்சிமுறையும் சுவாமி விவேகானந்தரால் ஈர்க்கப்பட்டதுதான் ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சா, மாதா ஸ்ரீ சாரதா தேவி ...

மருத்துவ செய்திகள்

எள்ளுச் செடியின் மருத்துவக் குணம்

கண்ணில் எப்பொழுதும் எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும். அப்பொழுது எள்ளுப் பூவைக் கொண்டுவந்து, ...

வயிற்றுவலி குணமாக

நற்சீரகம் 100 கிராம், ஓமம் 100 கிராம் இரண்டையும் இளம் வறுப்பாய் வறுத்து ...

நீரிழிவுநோய் உள்ளவர்களுக்கான உணவுமுறை

நீரிழிவுநோய்க் கட்டுப்பாட்டில் உணவுமுறை ஒரு முக்கியப்பங்கு வகிக்கிறது. அதனால் நீரிழிவுநோய் உள்ளவர்கள் சரியான, ...