அடேய் அசோகர் என்ன மொழி பேசினாரு?

அடேய் அசோகர் என்ன மொழி பேசினாரு?

பாலி மொழி.

அப்போ தமிழ் அழிஞ்சுதா?

இல்லண்ணே.

புத்ததுறவியும் சமண துறவியும் என்ன மொழி பேசினாங்க?

அவங்க வடக்க இருந்து வந்தாங்க அவங்க மொழிதான் தெரியும், இங்க தமிழ்படிச்சி வளர்த்தாங்க‌.

ஆக அவங்க மொழியும் இங்க சொல்லி கொடுத்தாங்களா இல்லியா?

சொல்லி கொடுத்தாங்க ஆனா தமிழ் வாழ்ந்திச்சி.

வாழ்ந்திச்சில்ல.

ஆமா, அழியல‌.

ஆதிசங்கரர் காலத்துல சமஸ்கிருதம் எப்படி இருந்து?

பெருசா இருந்துச்சு. இங்க அந்த சமஸ்கிருதம் படிச்சித்தான் பாரதம், ராமாயணம் எல்லாம் தமிழுக்கு கொண்டுவந்தாங்க‌.

தமிழ் அழிச்சிச்சா?

இல்லண்ணே நல்லா வளர்ந்திச்சி.

அடுத்தால யார் வந்தா?

நாயக்க மன்னர் கூட்டம்.

நாயக்க மன்னர் என்ன ஆட்சி மொழி பேசினார்கள்?

தெலுங்கு.

அப்பொழுது தமிழ் அழிந்ததா?

இல்லண்ணே, குற்றால குறவஞ்சி எல்லாம் அப்பொழுதுதான் எழுதுனாங்களாம், அரசர் நிறைய சன்மானம் கொடுத்தாராம்.

சரி அடுத்தால ஆளவந்தது யாரு?

சுல்தான்கள்.

அவர்கள் ஆட்சி மொழி என்ன?

உருது மொழி.

அதுல தமிழ் அழிஞ்சுதா?

இல்லே.

அடுத்து ஆண்டது யாரு?

ஆற்காடு நவாபு.

அவர் என்ன பேசினார்?

உருது.

அவருக்கு கீழ இருந்த பாளையக்காரன் என்ன பேசினான்?

தெலுங்கு.

சரி அப்பொழுதும் தமிழ் அழிஞ்சுதா?

இல்லண்ணே.

சரி அடுத்தால யாரு வந்தா?

வெள்ளைக்காரன்.

அப்பவும் தமிழ் அழிஞ்சிட்டா?

இல்லண்ணே நிறைய புஸ்தகம் தமிழ்ல வந்து, பைபிள் கூட வந்துச்சி.

சொல்லுடா இவ்வளவு காலம் தமிழ் எப்படி நின்னுச்சி?

அண்ணேஆதீனம், மடம், சைவ சித்தாந்த கழகம், கோவில் எல்லாம் தமிழ காப்பாத்திச்சி, U. V.சாமிநாத அய்யரு (Thamizh Thaathaa) பனை ஓலையில இருந்து தமிழ அச்சுக்கு கொண்டு வந்தாரு.

ஆக 800 வருசமா அந்நிய நாட்டுகாரன் மொழிதான் ஆட்சி மொழி அப்படித்தானே?

ஆமாண்ணே.

ஆனா தமிழ் அழியல‌?

ஆமாண்ணே.

இப்போ சொல்லுடா, அப்பொல்லாம் திராவிட கழகம் இருந்திச்சா?

இல்லண்ணே அப்படி பெயர் கூட கிடையாது.

பெரியார் இருந்தாரா?

அவரோட முப்பாட்டனுக்கும் கொள்ளுதாத்தா எங்கேயோ வயல்ல உழுதிட்டு இருந்தாரு.

அண்ணா, கலைஞர்?

அண்ணே பெரியார் முப்பாட்டனே தெரியல இவங்கள பற்றி கேட்டா எப்படிண்ணே.

மவனே, 800 வருஷமா தமிழ் எப்படி இருந்திச்சி?

ரொம்ப நல்லா இருந்திச்சி.

எப்போ இப்படி நாசமா கெட்டு போச்சி?

திராவிட கழகம் வந்தபின்னாடி கெட்டு போச்சி.

ஆக தமிழ் எப்போ அழிய ஆரம்பிச்சி?

அது கோவில் மடம் ஆதினம் சிந்தாந்த கழகம்னு இந்து பாரம்பரியமா இருக்கும் போது அழியலண்ணே, அத வச்சி அரசியல் பண்ணும் போதுதான் அழிய ஆரம்பிச்சிருக்கு.

மவனே இனி என்னைக்காவது பெரியார் திராவிட கும்பல் எல்லாம் தமிழை காப்பாத்திச்சி வளர்த்துச்சின்னு பேசு, அப்புறம் இருக்கு உனக்கு.

ஆக பலநூறு வருஷமா அழியாத தமிழ் இனியாடா அழியும்? முதல்ல திக திமுககாரன்கிட்ட இருந்து தமிழ காப்பாத்துங்கடா, அது தானா வளரும்., இந்தி என்ன மேண்டரின் வந்தா கூட அத அழிக்க முடியாது..”

பின்குறிப்பு:
—————
யோசியுங்கள் திராவிடம் இல்லாத இலங்கை மலேசியா சிங்கப்பூர்
ஜப்பான் இந்தோனேசியா போன்றநாடுகளில் தூயதமிழ் பேசுகின்றார்களே எப்படி?

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

மருத்துவ செய்திகள்

காக்கை வலிப்பு குணமாக

சிவப்பு சித்ர மூல வேர்ப்பட்டையை நன்கு உலர்த்தி பொடித்து தேன் அல்லது பாலில் ...

எலும்பு நைவு (OSTEOPOROSIS)

உடல் உழைப்பு குறைந்துபோய், தசைகளுக்கான உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுகள் போன்றவற்றை மேற்கொள்ள நேரமேயில்லாமல் ...

பாகற்காயின் மருத்துவக் குணம்

பாகற்காய் எளிதில் செரிமானமாகும். மலத்தைத் தூண்டும். பசியைத் தூண்டும். இருமல், வயிற்று உப்புசம், ...