கூட்டணி கட்சிகளுக்கு, தி.மு.க 315 கோடி ரூபாய் கொடுத்ததா?

அமலாக்கத்துறை அலசுகிறது! கதிகலங்கிபோய் உள்ளது தி.மு.க!!

நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலின்போது கூட்டணி அமைத்து போட்டியிடுவதற்காக திமுக தன் 3 கூட்டணி கட்சிகளுக்கு மட்டும் 40 கோடி ரூபாய் லஞ்சமாக (நன்கொடை என்ற பெயரில்) கொடுத்துள்ளது. இது வங்கி பரிவர்தனை மூலம் வழங்கப்பட்டுள்ள தொகை.

பாராளுமன்ற தேர்தலில் திமுக செலவு செய்த தொகையின் விவரங்களை கடந்த மாதம் (ஆகஸ்ட்) 27-ஆம் தலைமைத் தேர்தல் ஆணையத்தில் அந்த கட்சி தாக்கல் செய்தது. இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தில், 79 கோடியே 26 லட்சத்து 10 ஆயிரத்து 482 ரூபாய் செலவு செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டு உள்ளது.

இதில் 40 கோடி ரூபாய், கூட்டணி கட்சிகளான இந்திய கம்யூனிஸ்ட், மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் ஈஸ்வரன் தலைமையிலான கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகியவற்றிற்கு நன்கொடையாக வழங்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டு உள்ளது.

அதாவது இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 15 கோடி ரூபாயும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 10 கோடி ரூபாயும், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு 15 கோடி ரூபாயும் வழங்கப்பட்டுள்ளது.

இது தமிழர்கள் மத்தியில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.

கம்யூனிஸ்ட் கட்சிகள் உண்டியல் குலுக்கி, பிச்சைக்காரர்களைகூட விட்டு வைக்காமல் வசூல் செய்வதை காலங்காலமாக செய்து வருகின்றன. மேலும் கம்யூனிஸ்ட் கட்சியினர், தாங்கள்தான் ஏழைகள், தொழிலாளர்கள், ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகள் என்று அப்பாவி மக்களை நம்ப வைத்து வந்தனர். ஏழைகளின் கட்சி என்று வெளியுலகிற்கு காட்டி கபட நாடகம் நடத்தி வந்தவர்களின் முகத்திரை இப்போது கிழிந்துள்ளது.

ஆனால் ஒரு பாராளுமன்ற தேர்தலில் மட்டும் இவர்கள் 25 கோடி ரூபாய் சம்பாதித்து உள்ளனர். இது வெளிச்சத்து வந்த தொகை மட்டுமே. திமுக சார்பில் கணக்கில் காட்டப்பட்ட தொகை என்பதால், இது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அது மட்டுமல்ல கறுப்பு பணமாக எவ்வளவு தொகை கைமாறியது என்பது இன்னும் வெளியாகவில்லை.

தமிழகத்தைப் பொறுத்தவரை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைவிட, மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிதான் பெரியது. தொகுதி பங்கீட்டில் எப்போதுமே அதிகமான இடங்கள் மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்குத்தான் ஒதுக்கப்படும்.

அப்படி இருக்கும்போது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 15 கோடி ரூபாயும், மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 10 கோடியும் ரூபாயும் கொடுக்க வாய்ப்பில்லை.

எனவே கணக்கில் வராமல் கறுப்பு பணமாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களுக்கு 15 கோடி ரூபாயும், மாக்சிஸ்ட் கட்சி தலைவர்களுக்கு 20 கோடி ரூபாய் கொடுத்திருக்க வேண்டும்.

மிகச் சிறிய கட்சியான ஈஸ்வரனின் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, ஒரே ஒரு தொகுதியில்தான் போட்டியிட்டது. அந்த கட்சிக்கு வங்கி பரிவர்த்தனை மூலம், 15 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. அப்படியானால் கணக்கில் காட்டாத கறுப்பு பணமாக எத்தனை கோடி கொடுக்கப்பட்டது? என்பது அடுத்த கேள்வி.

ஒரு தொகுதியில் போட்டியிட்ட கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கே 15 கோடி ரூபாயும் கொடுத்த நிலையில், 2 தொகுதிகளில் போட்டியிட்ட மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 10 கோடி ரூபாய் கொடுத்ததை எப்படி அந்த கட்சி ஏற்றுக்கொள்ளும்? எனவே எத்தனை கோடி ரூபாய் கறுப்பு பணமாக மாக்சிஸ்ட் கம்யூனிஸட் கட்சி தலைவர்கள் பெற்றனர் என்பது அடுத்த முக்கிய கேள்வி.

இதைவிட முக்கியமாக, புதுவை உள்பட 10 இடங்களில் காங்கிரஸ் கட்சி போட்டியிட்டுள்ளது. கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு ஒரு சீட்டுக்கு கொடுக்கப்பட்ட 15 கோடி ரூபாயை வைத்து கணக்கிட்டால் கூட, காங்கிரஸ் கட்சிக்கு 150 கோடி ரூபாய் கொடுத்திருக்க வேண்டும். அவ்வளவும் கணக்கில் வராத கறுப்பயணமாகத்தானே இருக்க முடியும்?

இதேபோல, 2 தொகுதிகளில் போட்டியிட்ட திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு குறைந்த பட்சம் 30 கோடி ரூபாய் கொடுத்திருக்க வேண்டும். மதிமுகவுக்கு 30 கோடி ரூபாய் கொடுத்திருக்க வேண்டும்.

இது தவிர, முஸ்லிம் லீக் கட்சிக்கு 15 கோடி ரூபாய், இந்திய ஜனநாயக கட்சிக்கு 15 கோடி ரூபாய் என்று குறைந்த பட்சம், சுமார் 315 கோடி ரூபாய்க்கு மேல் கறுப்பு பணம் பட்டுவாடா செய்யப்பட்டிருக்க வேண்டும். இவை திமுக சார்பில்தான் பட்டுவாடா செய்யப்பட்டிருக்க வேண்டும்.

இது ஒருபுறம் இருக்க, ஒரு பாராளுமன்ற தொகுதிக்கு அதிக பட்சமாக 70 லட்சம் ரூபாய்தான் செலவு செய்ய தேர்தல் கமிஷன் அனுமதி அளித்துள்ளது. ஆனால் ஒரு தொகுதியில் போட்டியிட்ட கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு அதிகாரப்பூர்வமாகவே திமுக 15 கோடி ரூபாய் கொடுத்துள்ளது.

அப்படியானால், 70 லட்சம் போக மீதமுள்ள 14 கோடியே 30 லட்சம் ரூபாய் எப்படி தேர்தல் செலவில் வரும்? (2019 பாராளுமன்ற தேர்தல் செலவு என்றுதான் திமுக பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது) தேர்தல் கூட்டணிக்காக கொடுக்கப்பட்ட லஞ்சம் என்றுதானே எடுத்துக்கொள்ள முடியும்.

இது கொங்கு நாடு மக்கள் முன்னேற்ற கட்சி தலைவர் ஈஸ்வரனுக்கு மட்டும் சிக்கல் அல்ல, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.

இதே போல, 2 தொகுதிகளில் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட்டு கட்சி வாங்கிய 15 கோடியில் 2 தொகுதிகளின் தேர்தல் செலவு போக மீதியுள்ள 13 கோடியே 60 லட்சம் ரூபாய்க்கு என்ன கணக்கு சொல்ல முடியும்?

மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வாங்கிய 10 கோடி ரூபாயில், 8 கோடியே, 60 லட்சம் ரூபாய்க்கு என்ன கணக்கு எழுத முடியும்?

இதுவும் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு மட்டுமல்ல, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.

இப்போது இந்த பிரச்சினையை அமலாக்கத் துறை கையில் எடுத்துள்ளது. முதல் கட்டமாக தேர்தல் கமிஷனில் தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில் காட்டியுள்ள கணக்கின் அடிப்படையில் அலச தொடங்கியுள்ளது.

மேலும், கறுப்பு பணமாக திருமாவளவன், வைகோ மற்றும் கம்யூனிஸ்ட் தலைவர்கள் யார் யார் எத்தனை கோடி ரூபாய் பெற்றனர் என்பது பற்றிய தகவல்களை சேகரித்து வருகிறது.

விரைவில் இதுதொடர்பாக விசாரணை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதனால் திமுக கூடாரம் கதிகலங்கி போய் உள்ளது. குற்றம் நிரூபிக்கப்படும் பட்சத்தில் திமுக கட்சியையே இழுத்து மூட வேண்டியது வரும் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தமிழர்களின் நலன் காக்கும் பிரத� ...

தமிழர்களின் நலன் காக்கும் பிரதமர் மோடி: நயினார் : தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் அறிக்கை: ...

ஆதாரங்களுடன் வெளிநாடு செல்லும� ...

ஆதாரங்களுடன் வெளிநாடு செல்லும் எம்.பி., குழுக்கள் ஆப்பரேஷன் சிந்துார்' மற்றும் பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவை உலகிற்கு ...

ராணுவ வீரர்களை அறுவை சிகிச்சை ந ...

ராணுவ வீரர்களை அறுவை சிகிச்சை நிபுணர்களுடன் ஒப்பிட்டு ராஜ்நாத் சிங் பாராட்டு ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது இந்திய பாதுகாப்பு படையினர் ...

மக்கள் நலனுக்காக இந்தியாவின் த� ...

மக்கள் நலனுக்காக இந்தியாவின் திட்டங்கள்: பிரதமர் மோடி பெருமிதம் உலக சுகாதார நிறுவனத்தின் 78 வது கூட்டத்தில் பேசிய ...

முதலீட்டாளர்களின் நம்பிக்கையை ...

முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பாதிக்கும்: ஒழுங்குமுறை அனுமதியில் தாமதம் குறித்து நிர்மலா சீதாராமன் ஒழுங்குமுறை அனுமதியில் ஏற்படும் தாமதம் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பாதிக்கும்'' ...

அம்ரித் பாரத் சீரமைக்கப்பட்ட ர� ...

அம்ரித் பாரத் சீரமைக்கப்பட்ட ரயில் நிலையங்களை மோடி மே 22-ல் திறந்து வைக்கிறார் 'அம்ரித் பாரத்' திட்டத்தில் சீரமைக்கப்பட்ட பரங்கிமலை, ஸ்ரீரங்கம் ...

மருத்துவ செய்திகள்

வயிற்றுப்புண் மற்றும் வாயுக் கோளாறுகள் நீங்க உணவுப் பொருட்கள்

ஜீரணமாகாத காரணத்தால் புளிச்ச ஏப்பம், சாப்பிட்ட உணவு மேல் கிளம்பி விடுதல், வாயில் ...

பட்டினிச் சிகிச்சை

இயற்கையின் மிகச் சிறந்த ஆயுதம் பட்டினி. நோயை எதிர்க்கவும், குணமாக்கவும் இயற்கையாகவே உடல் ...

கரு கூடாமல் போவதற்கு யார் காரணம்?

கரு கூடுவதற்கு 40% ஆண்களும், 40% பெண்களும், 20% இருவரும் காரணம். இதில் ...