எத்தரப்புக்கும் பாதகமின்றி அமைந்த தீர்ப்பு

முன்னாள் மத்திய நிதி மற்றும் கப்பல் துறை இணையமைச்சர் திரு.பொன். இராதாகிருஷ்ணன் அவர்களின் பத்திரிக்கைச் செய்தி.

அயோத்தி ராமஜென்ம பூமி பிரச்சனையில் மாண்புமிகு உச்சநீதிமன்றத்தின் இன்றைய தீர்ப்பு இந்திய நீதித்துறையின் நீதி பரிபாலனத்தில் மிக முக்கிய முத்திரை பதித்ததாக அமைந்துள்ளது.

பல நூறு ஆண்டுகளாக இருந்து வந்த ஒரு பிரச்சனைக்கு அனைவராலும் ஏற்றுக் கொள்ளத்தக்க ஒரு தீர்ப்பை நமது உச்சநீதிமன்றத்தால் வழங்க முடியும் என்று இத்தீர்ப்பின் மூலம் நிரூபணம் ஆகியுள்ளது.

இப்பிரச்சனை தோன்றிய நாள் முதல் எந்தெந்த விஷயங்கள் கவலை தருவதாக அமைந்தனவோ, அவை அனைத்தையும் அணு அணுவாக அலசி ஆராய்ந்து, அது குறித்து தங்கள் கருத்துக்களை தெளிவுற கூறி, அவற்றில் மாண்புமிகு உச்சநீதிமன்றம் எந்த நிலையை கொண்டுள்ளது என்று தெளிவாக்கியுள்ளது மிக சிறப்பான ஒன்று.

மாண்புமிகு உச்சநீதிமன்றம் தன் முன் வரும் வழக்குகளை உள்ளது உள்ளபடியான உண்மைகளின் அடிப்படையில் தான் கருத்துக்களை கவனத்தில் கொள்ள முடியுமே ஒழிய, மற்ற காரணங்களின் அடிப்படையில் சிந்திக்க இயலாது என்றும் தெளிவுபடுத்தியுள்ளது.

இராமன் பிறந்த பூமி அவருக்கே சொந்தம் என்று தெளிவுபடுத்தியதோடு நிற்காமல், எதிர்காலத்தில் எக்காரணம் கொண்டும் இது தொடர்பான வேறு பிரச்சனைகள் தோன்றிவிடக் கூடாது என்று அதற்கும் தீர்வு கண்டிருக்கிறார்கள்.

இராமனின் இடத்தை அவருக்கே கொடுத்ததோடு நில்லாமல், அங்கே கோவில் அமைக்கும் பணியை கவனிக்க மத்திய அரசு ஒரு அறக்கட்டளையை 3 மாதத்திற்குள் அமைக்க வேண்டும் என்றதோடு, ஆலய கட்டுமானப் பணிகளையும் உடனடியாக துவங்க வேண்டும் என்று மிகத் தெளிவாக கூறியிருப்பது மகிழ்ச்சிக்குரியது.

சுருங்கச் சொன்னால், பல நூறு ஆண்டு காலமாக நடந்த வழக்கினை 40 நாட்களில் விசாரித்து தீர்வு தந்ததோடு, இன்னும் பல நூறு ஆண்டுகள் ஆயினும் இவ்விஷயத்தில் வேறு பிரச்சினைகள் வந்து விடக்கூடாதவாறு மிக கவனமாக சரியான தீர்ப்பை அளித்துள்ளார்கள்.

எத்தரப்புக்கும் பாதகமின்றி அமைந்துள்ள இத்தீர்ப்பு அனைவராலும் ஏற்கப்பட்டு வரவேற்கப்படும் காட்சியை பார்க்கும் போது மனதுக்கு நிறைவாக உள்ளது. ஒவ்வொரு இந்தியரும் இத்தீர்ப்பால் மன நிறைவு கொள்வார்கள் என நம்புகிறேன்.

அற்புதமான இத்தீர்ப்பை வழங்கிய மாண்புமிகு உச்சநீதிமன்றத்திற்கும், வாதாடிய வழக்கறிஞர்களுக்கும் தலை வணங்கி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

– பொன். இராதாகிருஷ்ணன்

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நா ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நாடு கடத்த மோடி பிரிட்டன் பிரதமரிடம் வலியுறுத்தல் பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசி ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசில் அதிபருக்கு மோடி நன்றி பிரேசிலில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக ...

மருத்துவ செய்திகள்

பப்பாளியின் மருத்துவக் குணம்

கல்லீரல் கோளாறுகளுக்கு பப்பாளி மருத்துவரீதியாக உதவி செய்யும். முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு பப்பாளி ...

வெண் தாமரைப் பூ

இதய நோய் இந்த இதழ்களைச் சாப்பிடுவதால் இருதய நோய்கள் நீங்கும். தொடர்ந்து சாப்பிட ஆண்மை ...

காக்கை வலிப்பு குணமாக

சிவப்பு சித்ர மூல வேர்ப்பட்டையை நன்கு உலர்த்தி பொடித்து தேன் அல்லது பாலில் ...