அயோத்தி வழக்கின் தீர்ப்பு, பிரதமர் மோடிக்கு கிடைத்த பெரியவெற்றி என வெளிநாட்டு பத்திரிகைகள் பாராட்டு தெரிவித்துள்ளன.
வரலாற்று சிறப்பு மிக்க அயோத்திய தீர்ப்பு, நவ.,9ம் தேதி வெளியானது. இதுகுறித்து உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன. அதில், இந்த தீர்ப்பு மோடிக்கு கிடைத்த பெரிய வெற்றி என பாராட்டியுள்ளன.
அமெரிக்க முன்னணி பத்திரிகையான ‘நியூயார்க் டைம்ஸ்’ வெளியிட்ட செய்தியில், பலநூற்றாண்டுகளாக நீடித்த அயோத்தி விவகாரத்தில் ஹிந்துக்களுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இதன்மூலம் இந்தியாவை மறுசீரமைப்பதில் மோடிக்கு வெற்றிகிடைத்திருக்கிறது.
மற்றொரு அமெரிக்க நாளிதழான ‘வாஷிங்டன் போஸ்ட்’, மோடியின் பெரியவெற்றியான அயோத்தி தீர்ப்பின் மூலம், பாஜ.,வின் முக்கிய லட்சியம் நிறைவேறியுள்ளது, என பாராட்டியது.
பிரிட்டனின் ‘கார்டியன்’ நாளிதழில், கடந்த 6 மாதங்களுக்குமுன்பு நடைபெற்ற மக்களவை தேர்தலில் பிரதமர் மோடி அமோக வெற்றிபெற்றார். அயோத்தி தீர்ப்பு மூலம் மீண்டும் மகத்தான வெற்றி கிடைத்துள்ளது, என வெளியிட்டது. ஆனால், பாகிஸ்தானின் நாளிதழ்களில் மட்டும், எதிர்மறையாக, அயோத்தி தீர்ப்பால் ஹிந்துக்கள், முஸ்லீம்கள் இடையிலான உறவுபாதிக்கப்படும் என செய்தி வெளியிட்டுள்ளது.
உணவு உண்ணும் முன்பாக 60 – 110 மில்லிகிராம்% (வெறும் வயிற்றில் எடுக்க ... |
நெல்லி இலைகளினால் விஷ்ணுவை அர்ச்சிப்பது மிகவும் விஷேசமானது .தேவலோகத்தில் இந்திரன் அமுதத்தை ... |
அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டியவை: இனிப்பு சேர்க்கப்பட்ட பழ ரசங்கள்; பால் சம்பந்தப்பட்ட உணவுகள்; ... |