அடுத்த ஆண்டு துவக்கத்தில் அயோத்தியில் ராமர்கோயில் கட்டும் பணி துவங்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
அயோத்தி விவகாரத்தில் பல ஆண்டுகளாக நீடித்து வந்த சர்ச்சைக்கு முற்றிப்புள்ளி வைப்பதாக சமீபத்தில் இவ்வழக்கில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்புவழங்கியது. இதனையடுத்து கோர்ட் வழிகாட்டுதலின் பேரில் டிரஸ்ட் அமைக்கும்பணியை மத்திய அரசு துவக்கி உள்ளதாக கூறப்படுகிறது. ராமர் கோயில்கட்டும் பணிகளையும் விரைவாக துவக்கவும், தாங்கள் வாக்குறுதி அளித்தபடி பிரம்மாண்ட ராமர்கோயில் அமைக்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அடுத்த ஆண்டு மகரசங்கராந்தி அன்று ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்ட அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
2022ம் ஆண்டு உ.பி., தேர்தல் சமயத்தில் கோயில்பணிகளை முழுமையாக முடிக்க உ.பி., திட்டமிட்டுள்ளது. இதனால் ராமர்கோயில் அமைப்பதற்கு உள்ள அனைத்து தடைகளையும் உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் நீக்கி வருவதாக கூறப்படுகிறது. 1989 ம் ஆண்டு முதல் விஷ்வ இந்து பரிஷித் அமைப்பு வடிவமைத்த வடிவிலேயே கோயிலைகட்டவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
தண்ணீர் இல்லாமல் இந்த உலகில் மரம், செடி, விலங்கு எதுவும்மே இல்லை. மேலும் தண்ணீர் ... |
நம்முடைய சிறுகுடலும் , பெருங்குடலும் சேர்கிற பகுதியில் இருக்கும் ஒரு சிறிய வால் ... |
30 வயதிற்குட்பட்ட தம்பதியினர் முறையே தாம்பத்திய உறவு வைத்திருந்தால், 6 மாதம் முதல் ... |