நடந்து முடிந்த இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சேயின் பொதுஜன பெரமுனா கட்சி, 13 லட்சத்து 60 ஆயிரத்து 16 ஓட்டுக்கள் வித்தியாசத்தில்வெற்றி பெற்றுள்ளார் இதன்படி கோத்தபயா இலங்கையின் 7 வது அதிபராக பொறுப்பேற்கவுள்ளார்.
தேர்தல் நேற்று ( 16 ம் தேதி ) நடந்தது. இத்தேர்தலில்,கோத்தபயா ராஜபக்சேயின் இலங்கை பொதுஜன பெரமுனா கட்சிக்கும் , சஜித் பிரேம தாசாவின் தேசிய ஜனநாயக முன்னணி வேட்பாளர் ஐக்கிய தேசிய கட்சிக்கும் இடையே இரு முனை போட்டி நிலவியது. தற்போதைய அதிபர் சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரம சிங்கே ஆகியோர் இந்த தேர்தலில் போட்டியிடவில்லை.
இதில் , கோத்தபய ( 69 லட்சத்து 24 ஆயிரத்து 255 ) ஓட்டுகளும், சஜித் பிரேமதாச ( 55 லட்சத்து 64 ஆயிரத்து 239 ) ஓட்டுகளும் பெற்றுள்ளனர். இதன்படி 13 லட்சத்து 60 ஆயிரத்து 16 ஓட்டுக்கள் கோத்தபயா கட்சி கூடுதலாக பெற்றுள்ளது.
கடந்த 1949 ஜூன் 20ல் அம்பாந்தோட்டையில் உள்ள வீரகேட்டியா கிராமத்தில் கோத்த பயா பிறந்தார். எம்.எஸ்சி., (ஐ.டி.,) முடித்தார். இவரதுதந்தை டி.ஏ.ராஜபக்சே மத்திய அமைச்சர், சபாநாயகர் பதவிகளை வகித்தவர். இவருடன் பிறந்தவர்கள் எட்டுபேர். இதில் மகிந்தா ராஜபக்சே அதிபராக இருந்தவர். சமல் ராஜ பக்சே மற்றும் பசில் ராஜபக்சே , எம்.பி.,க்களாக உள்ளனர்.
கோத்தபயா இலங்கை ராணுவத்தில் 1971ல் சேர்ந்தார். 1983 – 84 வரை யாழ்பாணத்தில் விடுதலை புலிகளுக்கு எதிரான சண்டையில் இலங்கை ராணுவப் படையில் பணியாற்றினார். 20 ஆண்டுகள் ராணுவ பணிக்குபின், 1992ல் ஓய்வு பெற்றார். கொழும்பு ஐ.டி., நிறுவனத்தில் மார்க்கெட்டிங் மானேஜரானார்.
1998ல் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தார். அங்கு ஐ.டி., நிறுவனத்தில் பணியாற்றினார். 2005ல் இவரதுசகோதரர் மகிந்தா ராஜபக்சேவுக்கு அதிபர் தேர்தலில் உதவுவதற்காக இலங்கை திரும்பினார். பின் மகிந்தா அமைச்சரவையில் 2005 – 2015 வரை மத்தியபாதுகாப்பு மற்றும் நகர் வளர்ச்சி துறையில் செயலராக பணியாற்றினார். மிகவும் கண்டிப் பானவர். இலங்கையில் தமிழ்விடுதலை புலிகளுக்கு எதிரானபோரை முன்னின்று நடத்தியது, அவர்கள் மீது அத்து மீறல்களை மேற்கொண்டது என்று பல குற்றச் சாட்டுகளுக்கு ஆளானவர்.
தேர்தலில் நிற்கவேண்டும் என்று அவர் தனது அமெரிக்க பாஸ்போர்ட்டை துறந்தார். இவருக்கு எதிராக நிறையபுகார்கள் சர்ச்சைகள் இருக்கிறது. அதேசமயம் இவர் பேசுவதைவிட அதிகமாக செயலில் ஈடுபடுவார் என்று ஒருபெயர் இருக்கிறது. அதேபோல் இலங்கை பொருளாதார ரீதியாக வளர இவரும் ஒருகாரணம் என்று அந்நாட்டு பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்
அதேசமயம் இவர் தமிழர்களுக்கு எதிரானவர் என்ற புகார் இருக்கிறது. இவர் ஆட்சிக்கு வந்தபின் தமிழர்களுக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுப்பார். அல்லது அவர்களை அரவணைத்து செல்வாரா என்றகேள்வி எழுந்துள்ளது. தேர்தல் பிரச்சாரத்தின் போது தமிழர்களுடன் நெருக்கமாக இருப்பேன் என்று இவர் கூறியது குறிப்பிடத் தக்கது.இவருக்கு எதிராக ஊழல்புகார்களும் இருக்கிறது.
இவர் வந்தால் இந்தியாவிற்கு எதிராக செயல்படுவர் , சீனாவை ஆரத்தழுவுவார் என்கிற குற்றச் கேட்டு உண்டு. இவர்கள் முன்பு ஆட்சி சித்த பொழுது சீனாவுக்கு ஆதரவாக ஆட்சி செய்தது என்னவோ உண்மைதான். ஆனால் அதற்கு பின்பு நடந்த தேர்தலில் படு தோல்வியை அடைந்தனர். அதற்கு நரேந்திர மோடி தலைமையிலான இந்திய அரசின் உளவு அமைப்பான ராவின் கைவண்ணம் இருந்ததாக தகவல்கள் வெளியாகின.
அதற்கு வலு சேர்ப்பதை போன்று ராஜபக்சேவும் சுப்பிரமணிய சாமியின் மூலம் தூது விட்டு சமாதானம் பேசியதாகவும் ஒரு தகவல் உலவுகிறது. எனவே முன்பு போல் இவர்கள் இந்தியாவை பகைத்து கொள்ள மாட்டார்கள் என்றும், இந்தியாவுடன் நட்புறவை நாடும் சீனாவும் இலங்கையை கொஞ்சம் தூரத்திலேயே வைத்திருக்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரதமர் மோடி, டுவிட்டரில் வாழ்த்து தெரிவித் துளளார். இதற்கு கோத்தபயா நன்றி தெரிவித்துள்ளார்.மோடியின் டுவிட்டரில் வெ ளியிட்ட அறிக்கை:
இலங்கை அதிபர்தேர்தலில் வெற்றி பெற்ற கோத்தபயா ராஜபக்சேவிற்கு வாழ்த்துகள். இருநாடுகளுக்கு இடையிலான ஆழ்ந்த உறவு, சகோதரத்துவ நட்பை வலுப்படுத்தவும், மக்களுக்காகவும், அமைதி, வளர்ச்சி, இந்தபிராந்தியத்தில், அமைதிக்காகவும், உங்களுடன் இணைந்து பணியாற்ற ஆர்வமாக உள்ளேன். தேர்தலை வெற்றிகரமாக நடத்திகாட்டிய மக்களுக்கும் பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அந்த பதிவில் மோடி கூறியுள்ளார்.
கலோரி : காய்ச்சல் நேரத்தில் ஓய்வு மிகவும் அவசியம். ஓய்வு எடுப்பதால் அதிக சக்தி ... |
தினமும் எட்டுமுறை 8 அவுன்ஸ் டம்ளரில் தண்ணீர்குடியுங்கள். தண்ணீர் அதிகமாக குடிப்பது கொழுப்பைகரைத்திட ... |
சிவப்பு சித்ர மூல வேர்ப்பட்டையை நன்கு உலர்த்தி பொடித்து தேன் அல்லது பாலில் ... |