”இலங்கை தமிழர்களை கொன்றுகுவித்த, அப்போதைய அதிபர் ராஜபக்சேயிடம் பரிசு வாங்கியவர்கள் தி.மு.க., வினர்,” என, மதுரை திருமங்கலம் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில், அதிமுக., மற்றும் கூட்டணிகட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம்செய்த அமைச்சர் உதயகுமார் குற்றம் சாட்டினார்.
அமைச்சர் பேசியதாவது: இலங்கை தமிழர்களுக்கு, இரட்டை குடியுரிமை வழங்க, முதன்முதலாக, மறைந்த முதல்வர் ஜெயலலிதா, மத்திய அரசிடம் வலியுறுத்திய போது, எதிர்க் கட்சிகள் ஏளனம் செய்தன. இன்றைக்கு தமிழ் இனத்தின் உரிமையை காக்க, முதல்வர் பழனிசாமி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம், இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்ககேட்டுள்ளார்.
இதுகுறித்து பரிசீலித்து சட்டதிருத்தம் கொண்டு வரப்படும் என, அமித் ஷா உறுதி அளித்துள்ளார். மத்திய காங்., கூட்டணி அரசில், 14 ஆண்டுகள் அங்கம்வகித்த திமுக., இதுபோல இலங்கை தமிழர்களுக்காக, ஏதாவது ஒருகோரிக்கையை வைத்ததுண்டா. ஆனால், இலங்கை தமிழர்களை கொன்றுகுவித்த, அப்போதைய அதிபர் ராஜபக்சேயிடம், தி.மு.க., வை சேர்ந்த கனி மொழி, பாலு போன்றோர் பரிசுபொருட்கள் வாங்கினர்.
இதன் வாயிலாக, தமிழ் இனத்திற்கு துரோகம்செய்தனர். குடியுரிமை திருத்த சட்டத்தால், 130 கோடி மக்களுக்கு எந்தபாதிப்பும் இல்லை என, பிரதமர் மோடி, அமித்ஷா உறுதி அளித்துள்ளனர். முஸ்லிம் மாணவர்களுக்கு பாதிப்பில்லை என, கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர். இது போன்ற உண்மை மக்களுக்கு சென்று விடாமல், தி.மு.க., – காங்., உள்ளிட்ட எதிர் கட்சிகள் போராட்டம் நடத்தி திசை திருப்புகின்றன. இவ்வாறு, அவர் பேசினார்.
ஆமணக்கு இலையைக் கொண்டு வந்து இதன் மீது சிற்றாமணக்கு நெய் தடவி நெருப்புத் ... |
தலைவலி, கண்நோய், காதுநோய், கபநோய், ஜுரம், தாது நஷ்டம், தாகம், மேக நோய், ... |