உ.பி., லக்னோவில் மறைந்த முன்னள் பிரதமர் வாஜ்பாயின் சிலையை பிரதமர் மோடி திறந்துவைத்தார்.
பாஜகவின் முகமாக இருந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய், உடல் நலக் குறைவு காரணமாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைபலனின்றி காலமானார். அவரது பிறந்த டிசம்பர் 25ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள தலைமை செயலகமான லோக்பவனில் அவரது பிரம்மாண்ட சிலை அமைக்கப்பட்டுள்ளது. ரூ.89.6 லட்சம் மதிப்பில் வாஜ்பாய்க்கு அமைக்கப்பட்டுள்ள 25 அடி உயர வெண்கலச் சிலையை ஜெய்ப்பூரைச் சேர்ந்த பிரபல சிற்பி ராஜ்குமார் பண்டிட் வடிவமைத்துள்ளார்.
இந்நிலையில் வாஜ்பாயின் 95ஆவது பிறந்த தினத்தையொட்டி லக்னோவில் உள்ள தலைமை செயலகமான லோக்பவனில் அமைக்கப்பட்டுள்ள அவரது சிலையை பிரதமர் மோடி திறந்துவைத்தார். இந்த நிகழ்சியில் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆளுநர் அனந்திபென் பாட்டீல், மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
சிலைதிறப்பு நிகழ்ச்சியை தொடர்ந்து அடல் பிகாரி மருத்துவ பல்கலைக் கழகத்துக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி. “சுகாதாரம், மலிவுவிலையில் சுகாதாரத் திட்டத்தை விரிவுபடுத்துவதே எங்களது நோக்கம்” என்றார்.
மேலும் அவர் பேசுகையில், “ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370ஆவது பிரிவு, ராமர்கோயில் பிரச்சினைகள் சுமூகமாக முடிக்கப்பட்டன. பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான், வங்கதேசத்தில் இருந்துவந்த அகதிகளுக்கு குடியுரிமை வழங்கும் திட்டமும் சரி செய்யப் பட்டுள்ளது. 130 கோடி இந்தியர்களும் நம்பிக்கையுடன் இத்தகைய சவால்களுக்கான தீர்வைகண்டுள்ளனர்” பெருமிதம் தெரிவித்தார்.
அத்துடன் போரட்டம் என்றபெயரில் வன்முறையில் ஈடுபடுட்டு பொதுச் சொத்துகளுக்கு சேதம் விழைவிப் போர் தங்களை சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும் எனவும் பிரதமர் மோடி அப்போது வலியுறுத்தினார்.
வல்லாரை, அம்மான் பச்சரிசி, ஓரிதழ் தாமரை, குப்பை மேனி, சிறியாநங்கை, வில்வம், துளசி, ... |
மனிதனின் உடலில் சிறுகுடல் மற்றும் பெருங்குடல் இணையும் இடத்தில் குடல்வால் எனும் ஒரு ... |