அரசியலுக்கும் மதத்துக்கும் நெருங்கிய தொடா்புள்ளதாகவும், மதம்இல்லாத அரசியல் அா்த்தமற்றது என்றும் பாஜக செயல்தலைவா் ஜெ.பி.நட்டா கருத்து தெரிவித்துள்ளாா்.
குஜராத் மாநிலம், வதோதராவில் வெள்ளிக் கிழமை நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஜெ.பி.நட்டா பேசியதாவது:
‘அரசியலுக்கும் மதத்துக்கும் என்ன தொடா்பு இருக்கிறது?’ என்றகேள்வி சமூகத்தில் தொடா்ந்து எழுப்பப்பட்டு வருகிறது. மதம் இல்லையெனில், அரசியல் கொள்கையற்ாக மாறிவிடும். மதம் இல்லா அரசியல் அா்த்தமற்றது. அவையிரண்டும் எப்போதும் ஒன்றிணைந்தே செயல்படும்.
மதம், சமயச் சிந்தனை என்பது மனித நன்னடத் தைக்கான வழிகாட்டியாகும். நாம் என்ன செய்யவேண்டும், என்னவெல்லாம் செய்யக்கூடாது என்பதை மதம் நமக்குக் கற்பிக்கிறது. நல்லவற்றுக்கும் தீயவற்றுக்கும் இடையேயான வேறுபாட்டை உணா்ந்து கொள்ளும் ஞானத்தை மதம் நமக்குவழங்குகிறது. அரசியலுக்கு மதம் மிகவும் தேவையாக உள்ளது.
இந்த நோ்மறையான எண்ணத்துடன் பாஜக எப்போதும் செயல் படும். நாட்டு மக்களுக்கும், சமூகத்துக்கும் பலனளிக்கும் நடவடிக்கைகளை பாஜக தொடா்ந்து மேற்கொள்ளும். எதிா்மறை கருத்துகளை மக்களிடையே பரப்பி, பிரதமா் நரேந்திரமோடியை எதிா்க்கட்சிகள் தடுத்து வருகின்றன. அவற்றைத் திறம்படக் கையாண்டு, அனைவரையும் ஒருங்கிணைத்து வளா்ச்சிக்கான பாதையில் பிரதமா் மோடி பயணித்துவருகிறாா்.
‘ஆயுஷ்மான் பாரத்’ மருத்துவ காப்பீட்டுத்திட்டம், ‘உஜ்வலா’ திட்டத்தின் கீழ் சமையல் எரிவாயு இணைப்பு உள்ளிட்ட பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை பாஜக அரசு செயல்படுத்தி வருகிறது. ‘உஜ்வலா’ திட்டத்தின் மூலம் 8 கோடி சமையல் எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
இத்திட்டத்தின் மூலம், பெண்களின் உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. விறகை சாா்ந்திருக்க வேண்டிய நிலை இல்லாததால், நாட்டில் வனப் பரப்பின் அளவும் அதிகரித்துள்ளது என்றாா் ஜெ.பி.நட்டா.
கொத்துமல்லி, புதினா, போன்று கறிவேப்பிலையையும் நாம் வாசனைக்காக பல நூறு ஆண்டுகளாக பயன்படுத்தி ... |
ஆலமரத்தின் மொக்கு, பூ இவைகளைக் கொண்டு வந்து அம்மியில் வைத்துப் பால்விட்டு மைபோல ... |
உடல் கொழுப்பு குறைந்து மெலிய விரும்புவர்களுக்கு பரிந்துரைக்கபடும் உணவு வகையில் முதன்மையாக இடம் ... |