பயங்கரவாத எதிர்ப்பில் உறுதி – ஜெய்சங்கர்

”பயங்கரவாதத்தை துளியும் சகித்துக்கொள்ள மாட்டோம் என்ற நிலைப்பாட்டில் இந்தியா எப்போதும் உறுதியாக இருக்கும்,” என, நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.

ஐரோப்பிய நாடான ஸ்விட்சர்லாந்தின் ஜெனிவாவில் நடந்த, ஐ.நா., மனித உரிமைகள் கவுன்சிலின், 58வது கூட்டத் தொடரில், ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று உரையாற்றினார்.

அவர் பேசியதாவது:

உலகின் பல்வேறு நாடுகளில் நிலவும் புவிசார் அரசியல் கொந்தளிப்புகளால் தொடர் மோதல்கள் நிகழ்கின்றன. அதனால் ஏற்படும் புதிய சவால்களை எதிர்கொள்ளும்போது நல்லுறவுகள் உடைந்து, நிலைமை நிச்சயமற்றதாகவும், நிலையற்றதாகவும் மாறி வருகிறது.

மனித உரிமைகளை மேம்படுத்துவதிலும், பாதுகாப்பதிலும் இந்தியா எப்போதும் தீவிரமான பங்களிப்பை வழங்கி வருகிறது.

எங்கள் அணுகுமுறை, நிதி பொறுப்பு, வெளிப்படைத்தன்மை மற்றும் நிலைத்தன்மை ஆகிய கொள்கைகளை எப்போதும் நிலைநிறுத்தி, எங்கள் நட்பு நாடுகளின் முன்னுரிமைகளுக்கு ஏற்ப திறனை வளர்ப்பதிலும், மனித வளங்களையும், உட்கட்டமைப்பையும் வலுப்படுத்துவதிலும் கவனம் செலுத்துகிறது.

அதே நேரம், பயங்கரவாதத்தை எதிர்ப்பதில் உறுதியுடனும், சமரசமின்றியும் இருக்கிறோம். பயங்கரவாதத்தை துளியும் சகித்துக் கொள்ள மாட்டோம் என்ற நிலைப்பாட்டில் எப்போதும் உறுதியாக உள்ளோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நாளை கூடுகிறது அனைத்த்து கட்சி ...

நாளை கூடுகிறது அனைத்த்து கட்சி கூட்டம் – மத்திய அரசு அழைப்பு நாளை (மே 08) அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு மத்திய ...

பரபரப்பான சூழலில் மத்திய அமைச்� ...

பரபரப்பான சூழலில் மத்திய அமைச்சரவை கூட்டம்; பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை பரபரப்பான சூழலில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை ...

பயங்கரவாதி மசூத் அசார் வீடு தரை ...

பயங்கரவாதி மசூத் அசார் வீடு தரைமட்டம்; குடும்பத்தினர் 10 பேர் பலி ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் பயங்கரவாதி மசூத் அசாரின் சகோதரி ...

பஹல்காம் தாக்குதலுக்கு இதுதான� ...

பஹல்காம் தாக்குதலுக்கு இதுதான் பதிலடி; உள்துறை அமைச்சர் அமித்ஷா பஹல்காம் தாக்குதலுக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது என மத்திய ...

இந்தியா வலிமையை நிரூபித்துள்ள� ...

இந்தியா வலிமையை நிரூபித்துள்ளது: அஜ்மீர் தர்கா தலைவர் சையத் நஸ்ருதீன் ''இந்தியா வலிமையை நிரூபித்துள்ளது'' என புகழ்பெற்ற அஜ்மீர் தர்கா ...

பஹல்காம் தாக்குதலால் பாதிக்கப� ...

பஹல்காம் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்கள் பிரதமருக்கு நன்றி ஆபரேஷன் சிந்தூரால் எங்களுக்கு பெருமை, பிரதமர் மோடிக்கு நாங்கள் ...

மருத்துவ செய்திகள்

உடல் எடை குறைய

தினமும் எட்டுமுறை 8 அவுன்ஸ் டம்ளரில் தண்ணீர்குடியுங்கள். தண்ணீர் அதிகமாக குடிப்பது கொழுப்பைகரைத்திட ...

வேப்பையின் மருத்துவ குணம்

நம் தாய் திருநாட்டில் சக்தி என்றும் பராசக்தி என்றும் வேம்பு என்றும் ...

அதிக சப்தத்துடன் குறட்டை ஆரோக்கியத்துக்கு கேடு

அதிக சப்தத்துடன் குறட்டை விட்டு தூங்குபவர்களை பார்க்கும் போது, நிம்மதியாகத் தூங்கிறார் என்று ...