”பண்டையபாரம்பரியத்தை டிஜிட்டல்மயமாக்குவதன்மூலம், பழங்காலத்தை நவீனத்துவத்துடன்இணைப்போம்” என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
புதுடில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் நடந்தநிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: புதிய பார்லிமென்ட் கட்டடத்திலும் சமண மதம் தொடர்பான அடையாளங்கள் இடம்பெற்றுள்ளன. சமண மதம் நம்மை நாமே வெல்ல ஊக்குவிக்கிறது. நான் குஜராத்தில் பிறந்தேன், அங்கு ஒவ்வொரு தெருவிலும் சமண மதத்தின் செல்வாக்கு தெரியும். சிறுவயதிலிருந்தே, நான் சமண ஆச்சார்யர்களுடன் இருந்திருக்கிறேன்.
நவ்கர் மகா மந்திரம் வெறும் மந்திரம் அல்ல. இந்த மந்திரத்தின் ஒவ்வொரு வார்த்தை மட்டுமல்ல, ஒவ்வொரு எழுத்தும் ஒரு மந்திரம். கடந்த ஆண்டுகளில், 20க்கும் மேற்பட்ட சிலைகள் வெளிநாட்டிலிருந்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளன என்பதை அறிந்து நீங்கள் பெருமைப்படுவீர்கள். பண்டைய பாரம்பரியத்தை டிஜிட்டல் மயமாக்குவதன் மூலம், பழங்காலத்தை நவீனத்துவத்துடன் இணைப்போம். இவ்வாறு அவர் பேசினார்.
அறுகம்புல் ஒரு இராஜ மூலிகையாகும் , அறுகம்புல் நோய்களை வேருடன் அறுப்பதால் இதற்குச் ... |
அகத்தை சுத்த படுத்துவதால் அகத்தி என பெயரை வைத்துள்ளனர்..சுமார் 50பது ஆண்டுகளுக்கு முன்பு ... |
பல்வேறு காரணங்களினால் கல்லீரல் பாதிக்கப்பட்டு நோய் ஏற்படும். இவைகளில் முக்கியமானது வைரஸ் கிருமியால் ... |