புராதான பழைய கோயில்களை பராமரிக்கும் முறை

புராதன சின்னங்களான கோவில்களில்செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை :

பண்டைய காலத்து முறையை மதியுங்கள் அக்காலத்து கலைஞர்கள், சிற்பிகள் மிகுந்த பக்தியுடனும், கலை நுணுக்கத்துடனும் கோவில்கள் எழுப்பியுள்ளனர்.

நம்மைவிட குறைந்த பொருளுதவியும், வசதிகளும், தொழில்நுட்பமே இருந்தாலும், நம்மைவிட அதிக கவனம் செலுத்தி அவற்றை எழுப்பியுள்ளனர் அவர்களது உழைப்பை நாம் உதாசீனப்படுத்தக்கூடாது.

எனவே முன்னர் காலத்து சின்னங்களை சீர்செய்ய பிரிக்குமுன், அவர்களதுகஷ்டங்களை உணருங்கள். பண்டை காலத்தில் என்ன பொருட்கள் உபயோகித்தனரோ, அவற்றையேஉபயோகியுங்கள். (வெல்லம், கடுக்காய், வச்சிரம், மூலிகைகள் கலவைகள்கொண்டு கட்டப்படும் கோவில்கள், சுமார் 1000 ஆண்டுகள் நிலைத்துள்ளன.ஆனால், சிமெண்ட் கட்டிடங்கள் அதிகபட்சமாக 100-200 ஆண்டுகளேதாக்குப் பிடிக்கும்.

 

 சுவற்றில், மதில்களில், கோபுரங்களில், எந்த கட்டுமானங்கள் மீதும், சிறிய செடிகள், மரங்கள் கொடிகளை வளரவிடாதீர்கள்.

இவை கோவில்களை ஆட்டம் காண வைக்கும் கொடிய வில்லன்கள்!

மாதம் ஒருமுறை களைகளை கண்டறிந்து, களையுங்கள்!

பழைய கற்களை அகற்றி செடிகளை நீக்குகையில், அதிக கவனம் தேவை.

மழைக்குப் பின் தான், களைகள் அதிகம் வளரும். மழை காலங்களில் பழையசுவர்கள், கோவில்களில் ஏறுகையில், கவனம் தேவை. கவனக் குறைவால்,அவை சரிந்து விடலாம்!

வேரோடு களைய முடியவில்லை என்றால், மரக்கொல்லிகளை உபயோகியுங்கள்.

இடுக்குகள், வேர் அறுத்த குழிகளை நல்ல சுண்ணாம்பு சுதை கரைசலினால் பூசி, மூடிவிடுங்கள்.

 

தொடர்ந்த பராமரிப்பே சிறந்த வழி!

பழங்கால கோவில்களுக்கு தொடர்பு பராமரிப்பு அவசியம்.

எந்த சிறிய கட்டிட பழுது வேலையானாலும் உடனே கவனித்து செப்பனிட வேண்டும்.

கோவிலை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்திருங்கள்.

தவறான பொருட்கள் உபயோகிக்காதீர்கள் :

கல்லால் ஆன கட்டுமானங்களுக்கு (கற்றளிகள்), சுண்ணாம்பு, பெயிண்ட்,எனாமல் உபயோகிக்கக் கூடாது.

சுண்ணாம்புப் பூச்சு நீக்குவது கடினம். தொடர்ந்து ரசாயனங்களால் துடைத்தால், கல்லின் தன்மை மட்டுப்படும்.

பெயிண்ட் நீக்குவது, இன்னும் கடினம் ; ரசாயன பெயிண்ட் அதிகம்கட்டிடத்தை பாதிக்கும்.
றுயவநசதநவ உடநயniபே

காவி நிறத்தை சுவர்களுக்கு உபயோகிக்காதீர்கள் ; அவை கரை படிந்துவிடும்.

சுவர்களில், தூண்களில் காணும் கல்வெட்டுக்களை மாற்றிக் கட்டியோ,மூலம் சுத்தம் செய்யலாம்.

அழித்தோ, உடைத்தோ விடாதீர்கள்! அவற்றில் நம் பண்டை சரித்திரத்தின் பலஅரிய செய்திகள்இருக்கலாம்! அந்த எழுத்துக்கள் எத்தகையவை ஆனாலும்,எத்தனை புராதனமானவையாக இருந்தாலும், படித்துக் காட்ட நம்மிடையேவல்லுநர்கள் உள்ளனர். சுவர்களில் உள்ள கல்வெட்டுக்களைபாதுகாத்திடுங்கள். சுத்தம் செய்கிறேன் பேர்வழி என்று கம்ப்ரெசர் மண்அடித்து எழுத்துக்களை அழித்துவிடாதீர்கள். அவை நம் பாட்டன்,முப்பாட்டனின், சாசனம்! மீண்டும் கிடைக்காது! அதேபோல் சுத்தம் செய்ய அமிலங்களையும் ப்ளீச்சிங் பவுடர் மற்றும் வீடு துடைக்க உபயோகிக்கும் சோப்புகளையும் உபயோகிக்காதீர்கள். அவை சரி செய்ய முடியாத,கண்ணுக்குத் தெரியாத விரிசல்களை ஏற்படுத்திவிடும்!

பழைய ஓவியங்கள் இருந்தால், அவற்றை சுரண்டி எடுத்து விடாதீர்கள்!பழஞ்சாறினாலும், இயற்கை மூலிகை நிறங்களாலும் வரையப்பட்டஅவ்வோவியங்கள், எத்தனை கோடி கொடுத்தாலும் நாம் மீண்டும் வரைய முடியாது.

சிதைந்த, தனித்துவிடப்பட்ட கோவில்களின் பாகங்களை எறிந்து விடாதீர்கள்;அவை முந்தைய அசல் கட்டிடத்தின் ஒரு பகுதியாக இருக்கலாம்; அவற்றைமீண்டும், பழைய இடத்திலேயே பொருத்தலாம். உபயோகிக்கலாம்.

பழைய செங்கல், செங்கல் துகள்கள், பழைய கோவில் சிதிலத்துகள்களைஎறிந்து விடாதீர்கள். அவற்றை முழுவதுமாக அப்படியே உபயோகிக்கலாம்! இன்றைய செங்கற்களைவிட அவற்றின் பலம், கெட்டித்தன்மை, 5 மடங்கு அதிகம்!

பழைய கோவில்களுக்குள் அசிங்கமாக, வயர்களையும், எலக்ட்ரிக் பட்டிகளையும்அடிக்காதீர்கள். கோவில்களில் அகல் விளக்குகளும் தீபங்களுமே அழகு.

க்ரானைட், டைல்களை கர்ப்பக்ருஹத்திற்குள் பதிக்காதீர்கள். பழையகோவில்களில், அளவீடுகள் முக்கியமானவை. கருவறையின் நீள, அகலமே,சிகரத்தின் உயரத்தை முடிவு செய்யும். இதில் சிறிய மாற்றம் ஏற்பட்டால்கூட,ஸ்தபதிகளும், வாஸ்து வல்லுநர்களும் கணக்கிட்ட சிகரம் வராது, கணிதம்தப்பும். புனிதமும் , பலமும் கெடும்.

கல் கோவில்களில் சிமெண்டால், புதிய பாகங்கள், படிகளை சேர்க்காதீர்கள்.பல இடங்களில், துர்க்கைக்கும், தட்சிணாமூர்த்திக்கும் பிரார்த்தனை செய்ய,தொட்டுக் கும்பிட என, பழங்கால சுவர், சுற்று பிரகாரத்துக்கும் இடையே, ஒருஒட்டுப்படி சிமெண்டால் கட்டி விடுகிறார்கள். அது கட்டிடத்தின் பலத்துக்குஎதிரானது. கட்டிட சாஸ்திரத்துக்கு எதிரானது. வருங்காலத்தில் கல் சுவர்அப்படியே நிற்க, இந்த சிமெண்ட் படி விழுந்துவிட்டால், நம் வருங்கால சந்ததியர் நம்மைப் பார்த்து சிரிப்பார்கள்!

சிமெண்டை தவிருங்கள். சுதையே நல்லது. சுண்ணாம்பு அதிகமாகவும்,தரமாகவும் மலிவாகவும் கிடைக்கும்.

சிலைகளில் எண்ணெய், வெண்ணெய் நீண்ட காலமாய் தடவுவதன் மூலம்,சிற்பங்களின் முனைகள் மழுங்கி, அழகு குறைந்துவிடும். இவற்றைத்தவிர்த்தால் நல்லது.

கற்பூரம், ஏற்றாதீர்கள். அதிலிருந்து வெளிப்படும் கரித்துகள்கள் கோவில்முழுதும் அடைந்து, மாசு படிந்துவிடும், காற்றிலும் கலக்கும் நல்ல ஓவியங்கள்போன்றவற்றை பாழ் செய்துவிடும். எண்ணெய் விளக்கு, நெய் தீபாராதனையே நல்லது, அழகு ; மாசு கட்டுப்பாடும் இருக்கும்

புராதான, பழைய, கோயில்களை, பராமரிக்கும் முறை, கோவில் பராமரிக்கும் முறை, கோவில் பராமரிப்பு , கோயில் பராமரிப்பு

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நா ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நாடு கடத்த மோடி பிரிட்டன் பிரதமரிடம் வலியுறுத்தல் பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசி ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசில் அதிபருக்கு மோடி நன்றி பிரேசிலில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக ...

ரஷ்ய அதிபர் புடின் இந்தியா வருக ...

ரஷ்ய அதிபர் புடின் இந்தியா வருகிறார் ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கிடையே போர் தொடங்கிய பின், ...

ஜி -20 மாநாட்டில் பசி மற்றும் வறு ...

ஜி -20 மாநாட்டில் பசி மற்றும் வறுமைக்கு எதிரான தலைப்பில் பிரதமர் மோடி ஆற்றிய உரை பிரேசிலில் நடக்கும் 'ஜி - 20' உச்சி மாநாட்டில், ...

அரசு முறைப்பயணமாக நைஜீரியா சென ...

அரசு முறைப்பயணமாக நைஜீரியா சென்ற மோடிக்கு உற்சாக வரவேற்பு அரசு முறை பயணமாக நைஜீரியா சென்றுள்ள பிரதமர் மோடிக்கு, ...

பிரதமர் மோடிக்கு உயரிய விருதுக ...

பிரதமர் மோடிக்கு உயரிய விருதுகளில் ஒன்றான Gcon விருது நைஜீரியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான “Gcon” விருது பிரதமர் ...

மருத்துவ செய்திகள்

முருங்கை விதை | முருங்கை விதையின் மருத்துவ குணம்

முற்றிய முருங்கைக் காய் விதைகளை தனியாக எடுத்து அதை நன்றாக காய வைத்து ...

சர்க்கரை நோயால் ஏற்ப்படும் பாதிப்புக்கள்

உங்கள் நிரிழிவை கட்டுப்பாட்டில் வைத்திருக்காவிடில் எதிர்காலத்தில் அது பலவிதமான பாதிப்புகளை ஏற்படுத்தும். உதாரணமாக, கண்பார்வை ...

மாம்பூவின் மருத்துவக் குணம்

மாங்காய், மாம்பழம் இவை போன்று மாம்பூவும் மருத்துவத்திற்கு மிகச் சிறந்தது.