காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல், டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் வெளியிடும் அறிக்கைகள் பாக்., பிரதமர் இம்ரான் கானின் அறிக்கையுடன் ஒத்துப் போயுள்ளது என்றும், இதனால் தொடர்பு இருப்பதாக நினைக்கிறேன் எனவும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளார்
டில்லியில் சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் பிப்.,08 ம் தேதி நடக்கிறது. இதற்காக ஆளும்கட்சியான ஆம் ஆத்மி, பாஜ., மற்றும் காங்., கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர். மேற்கு டில்லியில் உள்ள மட்டியாலா பகுதியில் பாஜ., வேட்பாளரை ஆதரித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பிரசாரம் மேற்கொண்டார்.
அவர் பேசியதாவது: பலமுறை ராகுல், கெஜ்ரிவால் அறிக்கை வெளியிடுகின்றனர். உடனடியாக பாக்., பிரதமர் இம்ரானும் அறிக்கை வெளி யிடுகிறார். நீங்கள் யூடியூப் தளத்தில் அவர்களின் அறிக்கைகளை பார்த்தால், அதில் ஒற்றுமைஇருப்பதை காணலாம்.
இவர்களுக்குள் என்ன தொடர்பு இருக்கிறது என இப்போதும் நினைக்கிறேன். ராகுல், கெஜ்ரிவால் என்ன சொல்கிறார்களோ, அதையே இம்ரானும் சொல்கிறார். இவர்கள் ஆட்சி அதிகாரத்திற்குவந்தால், டில்லி பாதுகாப்பாய் இருக்காது. கலவரங்களை விரும்புபவர்கள் அதிகாரத்திற்கு வர உரிமை இல்லை. நாட்டில் தவறான வாக்குறுதிகள் அளிப்பதில் போட்டி வைத்தால், கெஜ்ரிவால் முதல்பரிசை பெறுவார். நீங்கள் (ஆம்ஆத்மி) அளித்த வாக்குறுதிகளை மறந்துவிட்டீர்கள்; அதை நினைவூட்டதான் இங்கு வந்துள்ளேன். மோடி போன்ற அரசு அமைய வேண்டுமா அல்லது தொடர்ந்து போராட்டங்களை நடத்துபவர்கள் வேண்டுமா என மக்கள் அளிக்கும் ஓட்டுகளே தீர்மானிக்க இருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.
சங்கிலை, வேர்ப்பட்டை சமஅளவு அரைத்து சுண்டைக்காயளவு எடுத்து காலை மாலை வெந்நீரில் 20 ... |
30 வயதிற்குட்பட்ட தம்பதியினர் முறையே தாம்பத்திய உறவு வைத்திருந்தால், 6 மாதம் முதல் ... |
பிறவிப் பெருங்கடலைக் கடந்து அழியாத பேரின்ப நிலையைப் பெற, வழிகள் உள்ளன. இறை ... |