நாடாளுமன்றத்தில் நடப்பு நிதியாண்டுகான பொருளாதார ஆய்வறிக்கை சமர்பிக்கப் பட்டது. நடப்பு நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 5 சதவீதமாக இருக்கும் எனவும் அடுத்த நிதியாண்டில் 6 முதல் 6.5 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப் பட்டுள்ளது.
தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன் தலைமையிலான குழு தயார்செய்த இந்த பொருளாதார ஆய்வறிக்கை, நாளை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், இன்று தாக்கல் செய்யப் பட்டுள்ளது.
தலைமை பொருளாதார ஆலோசகர் சுப்பிரமணியன் பொருளாதார ஆய்வறிக்கை பற்றி கூறியதாவது ; – “உலகளவில் பொருளாதார மந்தநிலை நிலவுவதால், இந்திய பொருளாதாரத்திலும் மந்தநிலை நிலவுகிறது. செல்வத்தை உருவாக்குவோம்’என்ற கருத்தை மையமாககொண்டு, இந்த ஆண்டின் பொருளாதார ஆய்வு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது .
2008- 12 ஆம் ஆண்டுகளில் அதிகளவு கடன்பெற்ற நிறுவனங்கள் 2013-17 ஆம் ஆண்டு காலகட்டங்களில் குறைந்த அளவே முதலீடு செய்துள்ளன. 2013- ஆம் ஆண்டில் இருந்தே முதலீடுகள் குறைந்ததால், பொருளாதார மந்தநிலை 2017 ஆம் ஆண்டில் இருந்து ஏற்பட்டது.
வேண்டுமென்றே கடனை திருப்பிச்செலுத்தாமல் இருப்பவர்கள் இல்லாமல் இருந்தால் மற்ற சமூக துறைகளுக்கு இரு மடங்கு தொகை செலவிட்டிருக்க முடியும்” என்றார்.
நோய்களுக்கு பிரதான காரணங்கள் இரண்டு. சரீரத்தில் ஏற்படும் மிதமிஞ்சிய வெப்பம் அல்லது மிதமிஞ்சிய ... |
*கரோனா இரண்டாம் அலையில் நாம் அடித்துசெல்லப்பட்டு கொண்டு இருக்கும் நிலையில் கோவிட் 19 ... |
பாகற்காய் எளிதில் செரிமானமாகும். மலத்தைத் தூண்டும். பசியைத் தூண்டும். இருமல், வயிற்று உப்புசம், ... |