நாடுதழுவிய மொழி சமஸ்கிருதம்

நாடுதழுவிய மொழி சமஸ்கிருதம். ஆனால் தமிழ்மொழியை தமிழர்கள் மட்டுமே பேசுகிறார்கள் என்று இல.கணேசன் தெரிவித்துள்ளார்.
தமிழ் தாத்தா உ.வே.சாமிநாத ஐயரின் 166-வது பிறந்த நாள் விழாவை யொட்டி சென்னை மாநிலகல்லூரி வளாகத்தில் உள்ள அவரதுசிலைக்கு பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் மரியாதை செலுத்தினார்.
பின்னர், தமிழ் வளர்ச்சியை காட்டிலும் சமஸ்கிருதத்திற்கு அதிகநிதி ஒதுக்கப் பட்டிருப்பது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்தவர் சமஸ்கிருதம் நாடுதழுவிய மொழி. தமிழ் தமிழர்களால் மட்டும் பேசப்படும்மொழி எனவே தமிழை காட்டிலும் சமஸ்கிருதத்திற்கு அதிகநிதி ஒதுக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார். மேலும் தமிழ் வளர்ச்சிக்காக மாநில அரசும் நிதி ஒதுக்குகிறது எனவும் அவர் கூறினார்.
குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து இஸ்லாமிய அமைப்புகள் போராட்டம் நடத்துவது குறித்த கேள்விக்கு நீதிமன்றத்தின் உத்தரவை மதிப்பதாகவும், போராட்டங்களை எதிர்கொள்ள தமிழகஅரசு குறிப்பாக காவல்துறை சிறப்பான ஏற்பாடுகளை செய்துள்ளது. இதனால் மிக பெரிய அளவிலான கலவரங்கள் தடுக்கப்பட்டுள்ளது பாராட்டிற்குரியது என்று தெரிவித்துள்ளார்.
குடியுரிமை திருத்த சட்டத்தால் ஒருஇந்தியன்  பாதிக்கப்பட்டால் ஒருகோடி தருவேன் என நாமக்கல் மாவட்ட பாஜக சார்பில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது குறித்த கேள்விக்கு குடியுரிமை திருத்த சட்டத்தின் உண்மைதன்மையை எடுத்துரைப்பதாகவும், தமிழக முதல்வரும் இதை தான் நேற்று சட்டப்பேரவையில் கூறியுள்ளார் என்றும் அவர் தெரிவித்தார்.
திமுக பதவி ஆசைகாரணமாக பொய் குற்றச்சாட்டு கூறுபவர்களை ஆதரித்து வருகின்றனர், குடியுரிமை திருத்தசட்டத்தை கண்டு யாரும் பயப்படவேண்டாம் என்றும் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பெண்களுக்கு எதிரான குற்றம்; மறை ...

பெண்களுக்கு எதிரான குற்றம்; மறைக்க தமிழக அரசு முயற்சி தி.மு.க., ஆட்சியில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளன. ...

தமிழகத்தில் தொழில் துவங்க தி.மு ...

தமிழகத்தில் தொழில் துவங்க தி.மு.க.,வினருக்கு கப்பம்: அண்ணாமலை குற்றச்சாட்டு தி.மு.க.,வினருக்கு கப்பம் கட்டினால்தான், தமிழகத்தில் தொழில் நடத்த முடியும் ...

வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு ...

வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு இந்தியரின் இலக்கு ''வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு இந்தியரின் இலக்கு'' என ...

டில்லியில் நிடி ஆயோக் கூட்டம்; � ...

டில்லியில் நிடி ஆயோக் கூட்டம்; மாநில முதல்வர்கள் பங்கேற்பு டில்லியில் இன்று (மே 24) பிரதமர் மோடி தலைமையில் ...

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை; ...

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை; இந்தியாவுக்கு ரஷ்யா ஆதரவு பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில், பாகிஸ்தானுக்கு ...

பாகிஸ்தான் ராணுவத்தை அம்பலப்ப� ...

பாகிஸ்தான்  ராணுவத்தை அம்பலப்படுத்திய ஆப்பரேஷன் சிந்துார் ஆப்பரேஷன் சிந்துாருக்கு பின் தான், இந்தியாவில் நடைபெறும் அனைத்து ...

மருத்துவ செய்திகள்

அதிமதுரத்தின் மருத்துவக் குணம்

இதன் வேர், இலை, பால், விதை, வெப்பமும் இனிப்பும் கைப்பும் உள்ள சுவகைகளை ...

மஞ்சளின் மருத்துவக் குணம்

பசித் தூண்டியாகவும், நோய் தணித்தல், குடல் வாயு அகற்றியாகவும், தாது அழுகல் நீக்கியாகவும், ...

ஜாதிக்காயின் மருத்துவ குணம்

ஜாதிக்காய், சுக்கு, துளசி விதை, கடுக்காய், இவைகளை ஒரே அளவாக எடுத்து உரலில் ...