ஜம்முகாஷ்மீர் மக்கள் ஜனநாயகக் கட்சியின் முன்னாள் தலைவர் அல்டாஃப் புகாரி ‘அப்னிபார்ட்டி’ என்ற புதியக்கட்சியைத் தொடங்கியதையடுத்து அது பாஜகவின் ‘பி’ டீம்தானே என்ற கேள்வி எழுந்ததையடுத்து பாஜக பொதுச் செயலாளர் ராம் மாதவ் அதனை மறுத்துள்ளார்.
“காஷ்மீரில் இயல்பான அரசியல் நடவடிக்கைகளுக்கான அவர்களின் ஆசையின் விளைவே அப்னிபார்ட்டி கட்சியாகும். பாஜகவைப் பொறுத்தவரை காஷ்மீரில் இயல்பான அரசியல் நடவடிக்கைகள் தொடங்கப்படவேண்டும் என்பதே. ஆனால் எங்கள் காலடித் தடங்களை அங்கு விரிவுபடுத்துவதிலும் எங்கள்கவனம் எப்போதும் இருக்கும். எனவே புகாரியின் புதுக்கட்சியின் எதிர்காலம் குறித்து நாங்கள் கருத்துக் கூற விரும்பவில்லை.
ஆகவே அப்னிபார்ட்டி என்பது பாஜகவின் பி டீம் அல்ல” என்று ராம்மாதவ் மறுத்தார்.
மேலும் மேற்கு வங்கம் அரசியல் நிலவரம் குறித்து பாஜ., தேசிய பொதுச் செயலாளர் ராம் மாதவ், செய்தியாளர்களிடம் கூறியதாவது: 2021ம் ஆண்டு நடக்கும் மேற்கு வங்க சட்ட சபை தேர்தலில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரசை தோற்கடித்து பாஜ., அரசு அமையும். அங்கு, கட்சியைபலப்படுத்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாஜ., மூத்த தலைவர்கள் கூடுதல்நேரத்தை செலவிட உள்ளனர். ஓராண்டில் வெற்றிபெறும் நிலையில் இருப்போம்.
அதேபோல் அசாமில் பாஜ., தலைமையிலான கூட்டணி மீண்டும் ஆட்சிக்குவரும். நாங்கள் (பாஜ.,) சமீபத்தில் திப்ருகரில் ஒருபெரிய பேரணியை ஏற்பாடு செய்தோம். அதில், அசாம்மக்கள் மனதில் குடியுரிமை திருத்தசட்டம் (சிஏஏ) பற்றிய எந்த குழப்பமும் அவர்களிடம் இல்லை. நாட்டில் காங்., தவறான பிரசாரம் செய்ய முயற்சிக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.
பத்மாசனம் தியானத்தில் இருக்கும் போது பத்மாசன நிலையே நல்லது. இது தியானங்களுக்கும், மன ஒருமைப்பாட்டுக்கும் ... |
வேப்பமரத்தின் பூக்கள் உடலுக்கு உரமளிக்கும். வயிற்று வலியைக் குணப்படுத்தும். குடற்புழுக்களைக் கொல்லும். இரத்தத்தைச் ... |
பூக்கும் தாவர இனத்தைச்சேர்ந்த ஓர் பேரினமாகும். தமிழில் இத்தாவரம் கற்றாழை, குமரி, கன்னி. ... |