பாஜக எம்பிக்கள் கொரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள் – பிரதமர் மோடி

சீனாவின் வுகான் நகரில் தோன்றிய கொரோனாவைரஸ் தற்போது 150-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி உயிர்பலி வாங்கிவருகிறது.  கொரோனா தொற்றுநோயால் உலகளாவிய இறப்பு எண்ணிக்கை 7 ஆயிரத்தை தாண்டியுள்ளது.  உலகெங்கிலும் 1 லட்சத்து 69 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப் பட்டுள்ளனர்.
இந்நிலையில், பாஜக. எம்.பி.க்கள் ஒவ்வொருவரும் தங்கள்தொகுதிகளுக்கு சென்று கொரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தவேண்டும் என பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.
தலை நகர் டெல்லியில் பா.ஜ.க.வின் ஆட்சி மன்றக் குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திரமோடி, பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங், நெடுஞ்சாலை துறை மந்திரி நிதின்கட்காரி மற்றும் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா உள்பட பலர் பங்கேற்றனர்.இந்தகூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:
பா.ஜ.க. எம்.பி.க்கள் தங்கள் தொகுதிகளுக்குசென்று மக்களிடம் கொரோனா வைரஸ் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும் என தெரிவித்துள்ளார்.
மேலும், விமான நிலையங்கள், துறைமுகங்களில் பணியாற்றிவரும் மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோருக்கு தன்னுடைய பாராட்டுதல்களை தெரிவித்த பிரதமர் மோடி, கொரோனா பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் ஊடகங்களின் பணியையும் பாராட்டினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக்க பாஜக உறுதிபூண்டுள்ளது மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை திரும்பக் கொண்டு வருவதற்காக ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

மருத்துவ செய்திகள்

ஆடாதொடையின் மருத்துவ குணம்

ஆடாதொடை இலையை தேவையான அளவு எடுத்து ஒரு சட்டிக்கு வேடுகட்டி, ஒரு டம்ளர் ...

வாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர!

1.வாய் , நாக்கு. தொண்டை ரணம் தீர:-பப்பாளிப் பாலைத் தடவி வரத் தீரும். 2.நாக்குப் ...

யோக முறையில் தியானத்திற்குரிய இடம்

பிறவிப் பெருங்கடலைக் கடந்து அழியாத பேரின்ப நிலையைப் பெற, வழிகள் உள்ளன. இறை ...