கேரள மாநிலத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரிக்கதொடங்கிய பின்னர் கடந்த 14-ம் தேதி திருவனந்தபுரத்தில் உள்ள ஸ்ரீ சித்ரா திருநாள் மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு முரளிதரன் சென்றிருந்தார்.
அவர் அங்கு சென்று நிலவரங்களை பார்வையிட்டு வந்தபின்னர் அதே மருத்துவமனையில் பணியாற்றி வரும் ஒருடாக்டர் சமீபத்தில் ஸ்பெயின் நாட்டுக்கு சென்று வந்ததாகவும் அவருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்டுள்ளது உறுதிப்படுத்தப் பட்டுள்ளதாகவும் சமீபத்தில் தகவல் வெளியானது.
பாதிப்புக்குள்ளான டாக்டரை முரளிதரன் நேரடியாக சந்திக்கா விட்டாலும் முன்எச்சரிக்கை மற்றும் பொதுமக்களின் பாதுகாப்புகருதி டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டிருப்பதாக இன்று மாலை தெரிவித்துள்ளார்.
தனக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனைகளில் கொரோனா தொற்று இல்லை என்று தெரிய வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், ஸ்பெயின் நாட்டில் இருந்து கொரோனா வைரஸ்தொற்றுடன் கேரளாவுக்கு வந்த அந்த டாக்டர் தற்போது திருவனந்தபுரம் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதற்கு முன்னர் அவரை சந்தித்த ஸ்ரீ சித்ரா திருநாள் மருத்துவ கல்லூரி மருத்துவமனை பணியாளர்கள் சுமார் 75 பேரும் 20-க்கும் மேற்பட்ட டாக்டர்களும் தனிமை படுத்தப்பட்டு, மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீ சித்ரா திருநாள் மருத்துவ கல்லூரி மருத்துவமனை இயக்குனர் ஆஷாகிஷோர் இன்று தெரிவித்துள்ளார்.
100 எறுக்கம் பூக்களை எடுத்து அதை நன்றாக உலர்த்தி, லவங்கம், சாதிக்காய், சாதிப்பத்திரி ... |
உடல்சூடு தணிக்கவும், பசித்தூண்டியாகவும் செயல்படுகிறது. பழச்சாறு, கரிசலாங்கண்ணிச்சாறு, பால் வகைக்கு அரைலிட்டர் வீதம் எடுத்து ... |
இறைச்சி உணவில் தசையை வளர்க்கிற சத்தும், பி வைட்டமின் என்னும் உயிர்ச்சத்தும் நிறைய ... |