கரோனாவை கட்டுப்படுத்த 21 நாட்கள் முழுஅடைப்பை பிரதமர் நரேந்திரமோடி அறிவித்தார். இதுகுறித்து அவர் தொலைக் காட்சியில் நிகழ்த்திய உரை முதலிடம் பிடித்துள்ளது.
கரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த கடந்த 24-ம்தேதி முதல் நாடு முழுவதும் முழு அடைப்பு (லாக் டவுண்) அமல்படுத்தப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்தார். இது குறித்து அவர் தொலைக்காட்சியில் உரையாற்றினார். அந்த உரையை நாடுமுழுவதும் 19.7 கோடி பேர் பார்த்துள்ளனர். இந்த உரையே தொலைக்காட்சி ‘ரேட்டிங்’கில் முதலிடம் பிடித்துள்ளது.
பிராட்காஸ்ட் ஆடியன்ஸ் ரிசர்ச்கவுன்சில் (பார்க்) இந்தியா என்ற நிறுவனம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் குறித்தும், அவற்றில் எந்தநிகழ்ச்சியை அதிக எண்ணிக்கையில் மக்கள் பார்க்கின்றனர் என்பது குறித்தும் அதிநவீன தொழில்நுட்பத்துடன் ஆய்வுசெய்து தகவல்கள் வெளியிட்டு வருகிறது. இந்நிலையில், 21 நாட்கள் முழு அடைப்பு குறித்து பிரதமர் மோடி ஆற்றிய உரையை அதிக எண்ணிக்கையில் மக்கள் தொலைக் காட்சியில் பார்த்துள்ளதாக ‘பார்க்’ நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதற்குமுன்னர் பிரதமர் மோடி தொலைக்காட்சியில் ஆற்றிய உரைகளை விட, 21 நாட்கள் சமூகவிலகல் குறித்த உரைதான் முதலிடத்தை பிடித்துள்ளது. ‘‘பிரதமர் மோடியின் உரையை 201 சேனல்கள் ஒளிபரப்பின’’
ஐபிஎல் கிரிக்கெட்டின் இறுதிப் போட்டியை 13.3 கோடிபேர், காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப்பிரிவை நீக்கும் அறிவிப்பை 6.5 கோடி பேர், பண மதிப்பிழப்பு குறித்து நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி ஆற்றிய உரையை 5.7கோடி பேர் என பார்த்துள்ளனர்.
சிசுவின் வள்ர்ச்சி குறைபாட்டை இருவகையாக பிரிக்கலாம் - (1) உடல் குறைபாடு ( ... |
வெள்ளரி காய் சிறுநீரகம் தொடர்பான நோய்களை நீக்கும். தாகம் தணிக்கும், நரம்புகளுக்கு வலிமை ... |
பள்ளிக்குச் செல்லுகின்ற குழந்தைகளுக்கு நல்ல சத்தான ஆரோக்கியமான உணவு கிடைத்தால்தான் அந்தக் குழந்தைகள் ... |