தடையை மீறி மதகூட்டம் நடத்தி கொரானாவுக்கு வித்திடும் கூட்டம்

டெல்லி நிஜாமுதீன் பகுதியில் மசூதி ஒன்றில் தங்கிஇருந்த வெளிநாட்டவர் உட்பட 300 பேர் கொரோனா பரிசோதனைகளுக்காக அதிரடியாக மருத்துவ மனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். தற்போது அப்பகுதி போலீசார் கட்டுப்பாட்டில் கொண்டுவரபட்டுள்ளது.

டெல்லி நிஜாமுதீன் பகுதியில் உள்ள மசூதியானது தப்லீகி ஜமாத் எனும் இஸ்லாமிய பிரசார அமைப்புக்கு சொந்தமானது. இங்கு மதகூட்டம் ஒன்று அண்மையில் நடைபெற்றது. இதில் நாடுமுழுவதும் இருந்து நூற்று கணக்கானோர் பங்கேற்றனர்.

மேலும் தமிழகம் உள்ளிட்ட பலமாநிலங்களிலும் இருந்தும் நூற்றுக்கணக்கானோர் இதில் கலந்துகொண்டனர். ஆனால் இதுபற்றி டெல்லி அதிகாரிகளுக்கு எந்த ஒருதகவலும் தெரியாமல் இருந்து வந்தது. இந்நிலையில் ஶ்ரீநகரில் கொரோனாவுக்கு ஒருவர் உயிரிழந்தார்; ஹைதராபாத்தில் 11 இந்தோனேசியர்களுக்கு கொரோனாபாதிப்பு இருப்பது உறுதியானது.

இப்படி அடுத்தடுத்து கொரோனாவால் ஏற்பட்ட உயிரிழப்புகள், பாதிப்புகள் பெரும்பாலும் டெல்லி நிஜாமுதீன் மசூதியில் நடைபெற்றகூட்டத்தில் பங்கேற்றவர்களுக்குத்தான் என தெரியவந்தது. இந்தநிலையில் தமிழ்நாட்டிலும் குறிப்பாக ஈரோடு பகுதிகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் இக்கூட்டத்தில் பங்கேற்றவர்கள் என தெரியவந்தது.

இதனையடுத்து இன்று டெல்லி அதிகாரிகள் இம்மசூதியை முற்றுகையிட்டு அதிரடிசோதனை நடத்தினர். இச்சோதனையின் போது மசூதியில் தங்கி இருந்த 300க்கும் மேற்பட்டோர் அதிரடியாக கொரோனா பரிசோதனைக்காக வெவ்வேறு மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

மேலும் பலர் தனிமைப்படுத்தபட்டு கண்காணிக்கப்பட்டும் வருகின்றனர். தற்போது இந்தபகுதி சீல் வைக்கப்பட்டு போலீசார் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது.

இதனிடையே தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் அதிகமாக இருப்பதற்கும் டெல்லிநிகழ்ச்சியில் பங்கேற்ற பலரும் காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதையடுத்து டெல்லிமசூதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே டெல்லி மாநாட்டில் பங்கேற்றுவிட்டு திரும்பிய 23 பேர் திண்டுக்கல் மாவட்டத்தில் இருப்பதாக கண்டறியபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இவர்கள் அனைவருக்கும் நாளை மருத்துவ பரிசோதனை நடத்தப்பட உள்ளது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

செங்கோல் என்ன செய்யும்?

செங்கோல் என்ன செய்யும்? கொடுங்கோன்மை' என்ற சொல்லுக்கு மாற்றாக 'செங்கோன்மை' என்ற சொல்லை ...

ஆனந்த் பவனில் ‘வாக்கிங் ஸ்டிக ...

ஆனந்த் பவனில் ‘வாக்கிங் ஸ்டிக்’காக இருந்ததை வெளிக்கொண்டு வந்துள்ளோம் புதிய பார்லிமென்டில் நிறுவப்பட உள்ள செங்கோல் பிரதமர் நரேந்திர ...

மோடி கைபட்டால் குற்றம், கால்பட் ...

மோடி கைபட்டால் குற்றம், கால்பட்டால் குற்றம் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டங்களில் ஒன்று ...

கர்நாடக தேர்தல் முடிவு தேசத்தி ...

கர்நாடக தேர்தல் முடிவு தேசத்தின் மனோநிலை ஆகாது நடந்து முடிந்த கர்நாடக மாநில சட்டமன்ற   தேர்தலில் காங்கிரஸ் ...

ரூ.1.31 லட்சம் கோடி: திமுகவின் சொத் ...

ரூ.1.31 லட்சம் கோடி: திமுகவின் சொத்து பட்டியலை வெளியிட்டார் அண்ணாமலை! தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை இன்று ஆளும் தி.மு.க., ...

நமது ஆட்சிமுறையும் சுவாமி விவே ...

நமது ஆட்சிமுறையும் சுவாமி விவேகானந்தரால் ஈர்க்கப்பட்டதுதான் ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சா, மாதா ஸ்ரீ சாரதா தேவி ...

மருத்துவ செய்திகள்

மாதுளையின் மருத்துவ குணம்

புளிப்பு மாதுளை, இனிப்பு மாதுளை, இனிப்பும், புளிப்பும் கலந்த மாதுளை என்று மொத்தம் ...

பாகற்காயின் மருத்துவக் குணம்

பாகற்காய் எளிதில் செரிமானமாகும். மலத்தைத் தூண்டும். பசியைத் தூண்டும். இருமல், வயிற்று உப்புசம், ...

சர்க்கரை நோயாளிகளின் காயங்களை ஆற்றக்கூடிய மருந்து தேன்

சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ப்படும் காயங்கள் சீக்கிரத்தில் ஆறுவதில்லை. ஆனால் தற்ச்சமயம் விஞ்ஞானிகள் வெளியிட்டிருக்கும் ...