பிரதமர் நரேந்திரமோடி அறிவித்த 21 நாள் ஊரடங்கு வருகிற 14-ம் தேதியுடன் முடிவுக்குவருகிறது. கொரோனா பரவலை தடுப்பதற்காக ஊரடங்கை மேலும் நீட்டிக்குமாறு சிலமாநில அரசுகள் பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளனர். பஞ்சாப் மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்கள் ஏற்கனவே, ஏப்ரல் 30 வரை ஊரடங்கு நீட்டிக்கும் என்று அறிவித்துள்ளன.
இந்நிலையில், பிரதமர் மோடி இன்று காணொளிகாட்சி மூலம் மாநில முதல்வர்களுடன் மீண்டும் ஆலோசனை நடத்தினார்.
நாட்டில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துவருவது பற்றியும், ஊரடங்கு கட்டுப்பாடுகளால் ஏற்பட்டுள்ள பிரச்னைகள் குறித்தும், அடுத்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் முதல்வர்களுடன் ஆலோசித்தார்.
வருகிற 14-ம் தேதி முதல் ஒட்டுமொத்தமாக ஊரடங்கை நீக்கிவிட முடியாது என பிரதமர் மோடி ஏற்கனவே கூறி இருப்பதால், ஒருசில பகுதிகளில் அல்லது குறிப்பிட்ட சிலமணி நேரம் ஊரடங்கு நீக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கருதப்படுகிறது.
இதற்கு முந்தைய ஆலோசனைக் கூட்டங்களில் மாஸ்க் எதுவும் அணியாமல் பிரதமர் மோடி பங்கேற்ற நிலையில், இம்முறை அவர் மாஸ்க் அணிந்துள்ளார். உத்தவ்தாக்கரே உள்ளிட்ட சில மாநில முதல்வர்களும் மாஸ்க் அணிந்திருந்தனர்.
எனினும், பிரதமர் மோடி சாதாரண துணியினால் ஆன மாஸ்க்-ஐயே அணிந்திருந்தார். சிலநாட்களுக்கு முன்னர், நாட்டு மக்களுக்கு உரையாற்றிய அவர், வீட்டில் கிடைக்கும் துணிகளைக் கொண்டு மாஸ்க்தயாரித்து மக்கள் அணிய வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தார்.
இதனை அடுத்து, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி உள்ளிட்ட பாஜக பிரமுகர்கள், வீட்டிலேயே மாஸ்க் தயாரிக்கும் புகைப் படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டனர்.
எனினும், N 95 மற்றும் மருத்துவ மாஸ்க்களுக்கு அதிகதட்டுப்பாடு நிலவுகிறது. இதனை மறைக்கவே, பிரதமர் இப்படி ஒருவேண்டுகோளை விடுக்கிறார் என்று எதிர்க் கட்சிகள் தரப்பில் விமர்சிக் கப்பட்டது.
மக்களிடம் தான் விடுத்த கோரிக்கைக்கு எடுத்துக்காட்டாக பிரதமர் மோடி, இன்றைய கூட்டத்தில் சாதாரண துணியினால் ஆன மாஸ்க்-ஐ அணிந்து கலந்துகொண்டு மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார்.
அருகன்புல்லின் வேர் ஒரு கைபிடியளவும், கானாம் வாழையிலை கைப்பிடியளவு, இதே அளவு அசோக ... |
கோழையகற்றியாகவும், சிறுநீர் பெருக்கியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது. |
தலைவலி குணமாக தேவையான பூக்களைக் கொண்டு ஆலிவ் எண்ணெய் சேர்த்து அரைத்து, அரைத்த விழுதை ... |