காங்கிரஸ் எம்எல்ஏ இம்ரானுக்கு கொரோனா உறுதியானதையடுத்து 7 நாள் தன்னைதானே தனிமைப்படுத்திக்கொள்ள குஜராத் முதல்வர் விஜய்ரூபானி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குஜராத் மாநிலத்தில் தற்போது வரை கொரோனா வைரஸால் 617 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 55 பேர் மீண்டு வந்திருக்கிறார்கள், 28 பேர் உயிரிழந்துள்ளனர். அம்மாநிலத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், காதியா-ஜமால்பூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இம்ரான் கெடவாலா.
இந்நிலையில் நேற்று முதல்வர் விஜய் ரூபானியை காங்கிரஸ் கட்சியைச்சேர்ந்த மூன்று எம்.எல்.ஏக்கள் சந்தித்து ஆலோசனை நடத்தினர். இந்தகூட்டத்தில் சில அமைச்சர்களும் அதிகாரிகளும் கலந்துகொண்டனர். பின்னர், அடுத்த சிலமணி நேரங்களிலேயே அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. கடந்த சில நாட்களாக காய்ச்சல் இருந்து வந்த நிலையில் கொரோனா சோதனைசெய்த அவர் முடிவு தெரியும் முன்னரே முதல்வருடனான ஆலோசனை மற்றும் செய்தியாளர்கள் சந்திப்புகளில் கலந்து கொண்டுள்ளார்.
இந்த கூட்டத்தில் தனிமனித விலகல் கடைப்பிடிக்கப்பட்டாலும் பலருக்கு கொரோனா பரவி இருக்கலாம் என அச்சம் எழுந்துள்ளது. இதனையடுத்து, 7 நாள் தன்னைதானே தனிமைப்படுத்திக் கொள்ள குஜராத் முதல்வர் விஜய் ரூபானி முடிவு செய்துள்ளார்