யோகி ஆதித்யநாத்தின் தந்தை காலமானார்

உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் தந்தை ஆனந்தசிங் பிஸ்ட் திங்கட்கிழமை (20-4-2020) காலை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார்.

71 வயதான ஆனந்தசிங் சிறுநீரக கோளாறுகளுக்கு சிகிச்சைபெற எய்ம்ஸ் மருத்துவமனையில் ஒருமாதத்திற்கு முன் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி இன்று காலை அவர் உயிரிழந்தார்.

ஆனந்த் சிங் பிஸ்டின் உடல் உத்தரகாண்ட் மாநிலம் பவுரி மாவட்டத்திலுள்ள அவரது சொந்தகிராமத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது.

உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யா நாத் கரோனா வைரஸ்தொற்று பரவுவதை தடுப்பதற்கான ஆலோசனை கூட்டம் ஒன்றில் இன்று பேசிக்கொண்டிருக்கும் பொழுது அவரிடம் அவரது தந்தை ஆனந்த்சிங் மறைந்த செய்தி தெரிவிக்கப்பட்டது. தந்தை இறந்தசெய்தி கிடைத்தும் தனது உணர்வுகளை வெளிப்படுத்தாமல் முதலமைச்சர் யோகி ஆலோசனைக் கூட்டத்தை தொடர்ந்து நடத்திமுடித்தார்.

அதன்பிறகுதான் தன்னுடைய தந்தை மறைவுக்கு குறித்து தன்னுடைய துக்கத்தை தெரிவித்தார்.

என்னுடைய தந்தையின் இறுதிநேரத்தில் அவர்கூட இருக்க வேண்டும் என்று நான் விரும்பினேன். ஆனால் அதுமுடியாமல் போய்விட்டது என் தந்தையின் மறைவு எனக்கு பெரிதும் வருத்தமளிக்கிறது. அவர் எனக்கு எப்பொழுதும் இறைவனிடம் மாறாத விசுவாசத்துடன் இருக்க கற்றுக்கொடுத்தார். தன்னலமற்ற கடினமான உழைப்பு எப்பொழுதும் அவசியம் என்று வலியுறுத்தினார்.

அவரது இறுதிநேரத்தில் கூட அவருடன் என்னால் இருக்க முடியாமல் போனது. உத்தரப் பிரதேசத்தின் 23 கோடி மக்களை காக்கவேண்டிய பொறுப்பு என்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதனால் அவருடைய இறுதிச்சடங்கில் கூட நான் நாளை கலந்துகொள்ள முடியாது. முழு ஊரடங்கு காரணமாக உத்தரகாண்ட் மாநிலத்திற்கு நான் செல்வதற்கும் வாய்ப்பில்லை.

முழு ஊரடங்கு முடிந்த பிறகு நான் அங்குசென்று எனது அம்மாவையும் உறவினர்களையும் சந்தித்து பேசுவேன். இப்பொழுது ஊரடங்கு உத்தரவை மீறாமல் என்னுடைய அம்மாவும் உறவினர்களும் நடந்து கொள்வார்கள் என்று நம்புகிறேன் என யோகி ஆதித்ய நாத் தெரிவித்தார்

முதலமைச்சரின் தந்தை ஆனந்தசிங் பிஸ்ட் மறைந்ததுகுறித்து மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி. காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி. மத்திய பிரதேச முன்னாள் முதலமைச்சர் கமல்நாத் .உத்தரப்பிரதேச முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் ஆகியோர் தங்கள் இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

முட்டைக்கோசுவின் மருத்துவக் குணம்

முட்டைக்கோசில் அஸ்கார்பிக் (வைட்டமின் 'சி') உள்ளது. ஒரு கிளாஸ் முட்டைக்கோசு சாறு குடித்தாலே ...

“தாழ்நிலை சர்க்கரை” – சில செய்திகள் (HYPOGLYCEMIA)

நீரிழிவுநோய் உடையவர்களுக்குப் பல்வேறு காரணங்களால் திடீரென இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு குறைந்து விடும். ...

பெரும்பாடு குணமாக

நாகப்பட்டை, அத்திப்பட்டை, ஆவாரம்பட்டை மூன்றையும் ஒரு பிடி வீதம் எடுத்து மண் சட்டியிலிட்டு ...