சிறு குறு நிறுவனங்களுக்கு தாராள நிதி

பிரதமர் நரேந்திரமோடி நேற்று இரவு நாட்டு மக்களிடம் உரையாற்றும் போது, பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் ரூ. 20 லட்சம்கோடிக்கு சிறப்பு பொருளாதார தொகுப்பை அறிவித்தார். இந்தநிதியில் இருந்து சிறு, குறு நடுத்தர தொழில்களை மேம்படுத்தவும் அனைத்து தரப்பினரின் நலனுக்காகவும் சிறப்புதிட்டங்கள் அமல்படுத்தப்படும் என்றும் அறிவித்தார்.

பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ள 20 லட்சம் கோடி ரூபாய்க்கான திட்டங்கள் யாருக்கு சென்றடையும் என்பது குறித்து விளக்குவதற்காக நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

*விரிவான தொலை நோக்கு திட்டத்தை பிரதமர் நேற்று அறிவித்திருக்கிறார்.
* சுய சார்பு பாரதம் என்றபெயரில் திட்டங்கள் செயல்படுத்தப்படும்
*இந்தியா தற்சார்பு நிலையை எட்டுவதற்கான நோக்கத்துடன் திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.
*தன்னிறைவு பெற்ற இந்தியாவை உருவாக்குவதே இந்தத்திட்டத்தின் நோக்கம்.

*பல்வேறு தரப்பினரும் கலந்து ஆலோசித்து இந்தசிறப்பு பொருளாதார தொகுப்பு திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
*வளர்ச்சியை ஏற்படுத்தவும் தன்னிறைவு உருவாக்கவும் இந்த சுயசார்பு பாரததிட்டம் உருவாக்க பட்டுள்ளது.
*பொருளாதார கட்டமைப்பு, தொழில் நுட்பம் போன்ற 5 தூண்களை உருவாக்குவோம்.
*மருத்துவ உபகரணங்கள் உற்பத்தியில் இந்தியா தன்னிறைவை எட்டியிருக்கிறது.

71,700 மெட்ரிக் டன் உணவு தானியங்கள் பல்வேறு மாநில அரசுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
* மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட உடனேயே இந்த கொரோனா என்கிற பேரிடர் வந்திருக்கிறது.

* 41 கோடி ஜன் தன் வங்கி கணக்குகளில் பிரதம மந்திரியின் கல்யாண் யோஜனா திட்டத்தின் கீழ் நேரடியாக பணம் வரவு வைக்கப்பட்டுள்ளது.
*வாராக்கடன் பட்டியலில் உள்ள சிறு தொழில் நிறுவனங்களுக்கு புதிய கடனாக ரூ.50,000 கோடி வழங்கப்படும்
*ரூ.200 கோடிக்கு குறைவான அரசு டெண்டர்கள் இனி சர்வதேச அளவில் வெளியிடப்படாது.
*நடுத்தர தொழில்நிறுவனங்களுக்கான முதலீட்டு வரம்பு உயர்வு
*நடுத்தர தொழில்நிறுவனங்களுக்கான முதலீட்டு வரம்பு ரூ.10 கோடியில் இருந்து ரூ.20 கோடியாக உயர்வு

*பி.எப் தொகைக்காக ரூ.2,500 கோடி ஒதுக்கீடு. இதன் மூலம் 72.25 லட்சம் ஊழியர்கள் பயனடைவர்.
* அடுத்த காலாண்டில் பிஎப் சந்தாவை தொழிலாளர்கள், நிறுவனங்கள் 10 சதவிகிதம் செலுத்தினால் போதும்.
* ஜுன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மேலும் 3 மாதங்களுக்கும் பிஎஃப் தொகையை மத்திய அரசே செலுத்தும்.
*பிஎஃப் சந்தா தொகையை அரசு செலுத்துவதன் மூலம் 3.67 லட்சம் நிறுவனங்கள் பயன்பெறும்.

*குறுந்தொழில்களுக்கான முதலீட்டு வரம்பு ரூ.25 லட்சத்தில் இருந்து ரூ.1 கோடியாக உயர்த்தப்படுகிறது.
*நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான வரம்பு ரூ.10 கோடியில் இருந்து ரூ.20 கோடியாக உயர்த்தப்படுகிறது.

*மின்வாரியங்ளுக்கு 90 ஆயிரம் கோடி ரூபாய் நிதி வழங்கப்படும்
* தேசிய நிதி மேம்பாடு கழகத்திற்கு சுமார் 40 ஆயிரம் கோடி ரூபாய் செலுத்தப்படும்.
*வங்கி சேவை இல்லாத நிதி நிறுவனங்களுக்கு சுமார் 30,000 கோடி ரூபாய் நிதி

*வளர்ச்சியை ஏற்படுத்தவும் தன்னிறைவு உருவாக்கவும் இந்தசுயசார்பு பாரத திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
*பொருளாதார கட்டமைப்பு, தொழில்நுட்பம் போன்ற 5 தூண்களை உருவாக்குவோம்.
*மருத்துவ உபகரணங்கள் உற்பத்தியில் இந்தியா தன்னிறைவை எட்டியிருக்கிறது.

*சிறப்புதிட்டங்கள் மூலம் இந்தியா தன்னிறைவு பெற்று உலகிற்கு உதவும்
*மின்உற்பத்தி துறையில் இந்தியா தன்னிறைவு பெற்றிருக்கிறது.
*தன்னிறைவு இந்தியா என்பது உலகத்திடம் இருந்து துண்டித்துக் கொள்வது இல்லை. தன்னம்பிக்கையை அதிகரிப்பதே ஆகும்.
* நேரடிமானிய திட்டம் மக்களுக்கு மிகவும் உதவிகரமானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
* அதிகளவில் உள்ளூர் பொருட்களை உற்பத்தி செய்வதே தன்னிறைவு திட்டத்தின் நோக்கம்.

*உள்ளூர் வர்த்தக சின்னங்களை சர்வதேசளவில் கொண்டுசேர்க்க இத்திட்டம் பயன்படும்.
* மக்கள் சொல்வதை கேட்டு, அதற்கு ஏற்ப நடவடிக்கை எடுக்கும் அரசு
*தூய்மை இந்தியா, ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீடு, இலவச கேஸ் சிலிண்டர் போன்றவை இந்த காலத்தில் கைகொடுத்துள்ளன

* பிரதான் மந்திரி கிசான் திட்டம், நேரடியாக ஏழைகளுக்கு பணம் செலுத்துதல் போன்றவை முழு முடக்க காலத்தில் மிகவும் உதவிகரமாக இருந்து வருகிறது
*ரூ.20 லட்சம் கோடிக்காண திட்டங்களை அடுத்த சில நாட்களில் தொடர்ச்சியாக அறிவிப்போம்.
* இன்று 15 அறிவிப்புகள் வெளியிடப்படும்.
* மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உடனேயே இந்த கொரோனா பேரிடர் வந்திருக்கிறது.
*சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கு 6 அறிவிப்புகள் இன்று வெளியிடப்படும்.

*சிறு குறு தொழில் துறைக்கு பிணைஇல்லாமல் ரூ.3 லட்சம் கடனுதவி வழங்கப்படும்.
45 லட்சம் சிறு குறு தொழில் நிறுவனங்கள் பயன்பெறும்.
*இந்தத் திட்டத்தின் கீழ் அக்டோபர் 31 வரை சிறு குறு நிறுவனங்கள் கடன் பெறலாம்.
*கடன் பெறும் நிறுவனங்கள் முதல் ஒரு ஆண்டுக்கு கடனை திருப்பி செலுத்த வேண்டிய அவசியம் இல்லை.
* கடன் வசதியை பெற ஆவணங்கள் எதுவும் தேவையில்லை.

* வருமான வரித் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு அக்டோபர் மாதத்திலிருந்து நவம்பர் வரை நீட்டிப்பு
*நாளை முதல் அடுத்த ஆண்டு மார்ச் வரை டிடிஎஸ் வரி விதிப்பு 25% குறைப்பு
*இதன் மூலம் மக்கள் கைகளில் சுமார் ரூ.50000 கோடி அளவிற்கு பணப்புழக்கம் இருக்கும்.

* அரசு ஒப்பந்ததாரர்களுக்கு பணிகளை முடிக்க 6 மாத காலம் கூடுதல் அவகாசம்.
*சில குறிப்பிட்ட ஒப்பந்ததாரர்களுக்கு வங்கி உத்தரவாத தொகையை அரசு நிறுவனங்கள் விடுவிக்கலாம்
*தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியை அரசே செலுத்துவது அடுத்த 3 மாதங்களுக்கு மேல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

கோவில்கள் மீதான தாக்குதல் ஆஸி., ...

கோவில்கள் மீதான தாக்குதல் ஆஸி., பிரதமரிடம் நரேந்திர மோடி வருத்தம். ஆஸ்திரேலியாவில் இந்து கோயில்கள்மீது அடுத்தடுத்து தாக்குதல் நடத்தப்படுவது தொடர்பாக ...

தி.மு.க. என்றால் குடும்ப அரசியல், ...

தி.மு.க. என்றால் குடும்ப அரசியல், பணம், கட்டப்பஞ்சாயத்து கிருஷ்ணகிரி மாவட்டம் குந்தாரப் பள்ளியில் பா.ஜனதா கட்சியின் மாவட்ட ...

அவசரக்குடுக்கை ஆர் எஸ் பாரதி

அவசரக்குடுக்கை ஆர் எஸ் பாரதி நான் இரட்டை வேடம் போடுவதாக, அவசரக்குடுக்கை ஆர் எஸ் ...

திறனற்ற திமுகவுக்கு திராணி இரு ...

திறனற்ற திமுகவுக்கு திராணி இருந்தால் என்னை கைதுசெய்யுங்கள் வடமாநில தொழிலாளர் குறித்து முதல்வர் ஸ்டாலின் பேசிய வீடியோவை ...

திரிபுரா, நாகலாந்து , மேகாலயா மா ...

திரிபுரா, நாகலாந்து , மேகாலயா மாநில முதல்வர்கள் பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு திரிபுரா, நாகலாந்து மற்றும் மேகாலயா மாநில முதல்வர்கள் பதவியேற்பு ...

வடமாநிலதவர்கள் மீதான வெறுப்பு ...

வடமாநிலதவர்கள் மீதான  வெறுப்புப் பிரச்சாரத்தை அனுமதிக்கமாட்டோம் தமிழகத்தில் வட இந்தியத் தொழிலாளர்கள் மீது தாக்குதல்கள் நடப்பதாக, ...

மருத்துவ செய்திகள்

சித்த மருத்துவம்

சித்தர்களுக்கு சாதி, மதம், இனம், மொழி, தேசம் என்ற பாகுபாடு இல்லை. அகத்தியர், ...

கறிவேப்பிலை | கறிவேப்பிலையின் மருத்துவ குணம்

கொத்துமல்லி, புதினா, போன்று கறிவேப்பிலையையும் நாம் வாசனைக்காக பல நூறு ஆண்டுகளாக பயன்படுத்தி ...

அல்லிப் பூவின் மருத்துவக் குணம்

அல்லிப் பூ குளிர்ச்சி உள்ளது. உடலுக்கும் குளிர்ச்சியைத் தரவல்லது. எனவே உடலில் காணும் ...