சிறு,குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட மேக் இன் இந்தியா திட்டத்தை ரஷ்ய அதிபர் புடின் பாராட்டியுள்ளார்.
மாஸ்கோவில் நடந்த முதலீட்டாளர் மாநாட்டில், புடின் பேசியதாவது: இந்தியாவில் சிறு, குறு நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளிப்பதில் கவனம் செலுத்தப்படுகிறது. எங்கள் உற்பத்தித்தளத்தை இந்தியாவில் நிறுவ தயாராக உள்ளோம். இந்திய பிரதமரும், இந்திய அரசும், நிலையான சூழ்நிலையை உருவாக்கி வருகின்றனர்.
இந்தியாவில் முதலீடு செய்வது லாபகரமானது என்று நாங்கள் நம்புகிறோம். ரஷ்யாவில் விவசாயம் உட்பட அனைத்து துறைகளிலும் உற்பத்தியாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கு வாய்ப்புகளை விரிவு படுத்துவதற்கான தேவை உள்ளது.
கடந்த ஆண்டு நாங்கள் 66 பில்லியன் டாலர் அளவுக்கு தானியங்களை ஏற்றுமதி செய்தோம். பிரதமர் மோடியின் ‘மேக் இன் இந்தியா திட்டம்’ பாராட்டக் கூடியது. இவ்வாறு அவர் பேசினார்.
பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி விடுத்த அழைப்பை ஏற்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இந்தியா வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆரஞ்சு பசியைத் தூண்டவும், ரத்தத்தை சுத்திகரிக்கவும் பித்தத்தைப் போக்கவும், வயிற்று உப்புசத்தை நீக்கவும் ... |
உடல்சூடு தணிக்கவும், பசித்தூண்டியாகவும் செயல்படுகிறது. பழச்சாறு, கரிசலாங்கண்ணிச்சாறு, பால் வகைக்கு அரைலிட்டர் வீதம் எடுத்து ... |
மகிழம் பூ குடி தண்ணீர் மகிழம் பூவைச் சுத்தம் பார்த்து எந்தக் கிருமியும் இல்லாமல் ... |