பிரதமர் மோடி தலைமையிலான அரசு 2-வது முறையாக ஆட்சியை கைப்பற்றி, பதவி ஏற்று முதலாம் ஆண்டு விழா வருவதையொட்டி, ஆன்-லைன் மூலம் ஆயிரம் மாநாடுகளையும், மெய்நிகர் பேரணிகளையும் நடத்தவும் பாஜக திட்டமிட்டுள்ளது.
பிரதமர் மோடி தலைமையிலான பாஜகஅரசு மத்தியில் 2-வது முறையாக ஆட்சியை பிடித்துவரும் 30-ம் தேதியோடு ஓர் ஆண்டு நிறைவடைகிறது. மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயககூட்டணி அரசு 2-வது முறையாக ஆட்சியைப்பிடித்து முதலாம் ஆண்டு விழாவை சிறப்பாகக் கொண்டாட பாஜக முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக பாஜகவின் பொதுச்செயலாளர் அருண் சிங் அனைத்து மாநிலங்களுக்கும், மூத்த நிர்வாகிகளுக்கும் கடிதம் எழுதியுள்ளார். அதில் “ மாநிலங்களில் மிகப் பெரிய அமைப்பை கொண்ட பாஜக நிர்வாகிகள் அனைவரும் பாஜக அரசு 2-வது முறையாக பதவிஏற்ற முதலாம் ஆண்டு விழாவில் குறைந்த பட்சம் இரு விர்சுவல் ரேலி(மெய்நிகர் பேரணி) நடத்தவேண்டும், சிறிய அமைப்புகள் ஒருபேரணி நடத்த வேண்டும், இதில்750 –க்கும் மேற்பட்டோர் பங்கேற்க வேண்டும். இணையதளம் வாயிலாக ஆயிரம் மாநாடுகள் நடத்தவேண்டும்.
இந்த ஆண்டு முழுவதும் மோடி அரசு செய்த வரலாற்று சாதனைகளை எடுத்துக் கூறுவதாக இருக்க வேண்டும். ஜம்மு காஷ்மீரில் 370 பிரிவை ரத்துசெய்தது, முத்தலாக்கை ரத்துசெய்தது, அயோத்தியில் ராமர் கோயில்கட்ட வழிவகுத்தது போன்ற வரலாற்று சாதனைகளை மக்களுக்கு கூறும்வகையில் செயல்பட வேண்டும். இந்த அனைத்து சாதனைகளும் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் எழுத்தப்பட வேண்டியவை
உலகளவில் மிகவும் புகழ் வாய்ந்த, அனைவரும் அறியப்படும் தலைவராக பிரதமர் மோடி இருந்துவருகிறார். 2-வது முறையாக பிரதமர் மோடி அரசு பதவி ஏற்று மக்களின் நீண்ட கால ஆசைகளை நிறைவேற்றியுள்ளார்.”எனத் தெரிவித்துள்ளார்
வரும் 30-ம்தேதி நிகழ்ச்சிகள் தொடங்கி அடுத்த ஒருமாதத்துக்கு தொடர்ந்து நடைபெறும் என்று பாஜக தலைமை வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும், பாஜக தலைவர் ஜேபி. நட்டா ஃபேஸ்புக் வழியாக தொண்டர்களுக்கும், மக்களுக்கும் உரையாற்ற உள்ளார்.
பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் வாட்ஸ்அப் வழியாக பிரதமர் மோடி அரசுசெய்த சாதனைகளை மக்களுக்கு வாட்ஸ் அப் வழியாக பரப்பவேண்டும், கரோனா காலத்தில் பாஜகவினர் செய்த தொண்டுபணிகள் குறித்தும் தெரியப்படுத்த வேண்டும் என பாஜக தலைமையகம் கேட்டுக்கொண்டுள்ளது.
பிரதமர் மோடி 2.0 அரசின் முதலாண்டு ஆண்டுவிழாவில் மத்திய அமைச்சர்கள், கட்சியின் மூத்த நிர்வாகிகள் 150-க்கும் மேற்பட்ட ஊடக சந்திப்புகளை நடத்தி சாதனைகளை விளக்க உள்ளார்கள்.
தற்சார்பு பொருளாதாரத்தை மேம்படுத்தவும், உள்நாட்டில் உற்பத்தி செய்யப் பட்ட பொருட்களை பயன்படுத்தவும் தொண்டர்களுக்கு பாஜக தலைமை கேட்டுக் கொண்டுள்ளது. கரோனா காலத்தில் சமூக விலகலின் அவசியம் குறித்து விழிப்புணர்வு செய்தல், கரோனாவில் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தை மேம்படுத்த பிரதமர் மோடி அறிவித்த ரூ.20 லட்சம்கோடி திட்டம் ஆகியவை குறித்து மக்களுக்கு தெரியப்படுத்தவும் தொண்டர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் பாஜக கேட்டுக்கொண்டுள்ளது
வேலியோரங்களில் வளர்ந்து பக்கத்திலுள்ள செடி கொடிகளின் மீது படர்ந்து காணப்படும் சுசுக்கையை வைத்துக் ... |
பிறந்த குழந்தைக்கு தலையில் நல்லெண்ணை தேய்க்கக் கூடாது. தேங்காயெண்ணையைக் காய்ச்சித்; தேய்க்கணும். குழந்தை ... |
இதன் இலை, வேர் உபயோகப்படுகிறது. இதன் சுவை இனிப்பு, துவர்ப்பு, கார்ப்பு உடையது. ... |