“நெஞ்சை தொட்டுச் சொல்லுங்கள்-”
இன்றைய தினமலரில். வந்த ஒருகட்டுரையில் குறிப்பிடப்பட்டிருந்த 3 விஷயங்கள் நெஞ்சை நெருடியது.
1 பிரதமர் மோடி அறிவித்த 20 லட்சம் கோடி-ஊக்குவிப்பு திட்டம் 10 நாளாகியும் இன்னும் தொடங்க வே இல்லை
2) வங்கிகளை அணுகும் வாடிக்கையாளர்களுக்கு சரியான பதில் இல்லை
3.அரசு அறிவித்த enhanced Limit க்கான Gurantee க்கான பத்திரப்பதிவை insist செய்கிறார்கள்
மேற்கண்ட கட்டுரையில் எழுதப்பட்ட தகவல்கள் தொழில் அமைப்புக்கள் அளித்ததாகவும் அறிகிறேன்.
மாண்புமிகு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் அறிவிப்புக்கள் முடிந்த அடுத்த நாளிலிருந்தே தகுதியுள்ள, தேவையான account holder அனைவரிடமும் கேட்டு அவர்களின் வங்கிக் கணக்கில் அவர்களது கடன் தொகையில் 10% உடனடியாக போடப்பட்டது.
இது association களுக்கு தெரியாதா?
இதனால் பலன் பெற்ற பலர் தொழில் அமைப்புகளின் பொறுப்பாளர்கள் – உறுப்பினர்களாக இருந்தும் இதை ஏன் மறைக்கிறார்கள்?
நான் கோவை மாவட்டத்தில் உள்ள வங்கிக்கள் தாமாகவே முன்வந்து பயனாளிகள் கணக்கில் 10% வரவு வைத்த தொகையை வெளியிடுகிறேன்.
சந்தேகம் இருப்பின் யார் வேண்டுமானாலும் Cross Check செய்து கொள்ளலாம்.
30.5.20 வரை
கோவை மாவட்ட வங்கிகள் கொடுத்த 10% தொகை மட்டும்
1 சென்ட்ரல் பேங்க் -௹53.21 கோடி
2. ஐ.ஓ.பி. -௹ 49.10 கோடி
3. இந்தியன் பாங்க் – ரூ21.54 கோடி
4. ஸ்டேட் பாங்க் – ரூ21.15 கோடி.
இதோடு மாவட்டத்திலுள்ள மற்ற 20 பாங்குகள்தொகையை கூட்டினால் ரூ 450 கோடிக்கு மேல் வருகிறது.
தமிழ்நாட்டின் மற்ற மாவட்டங்கள் எல்லாம் கூட்டினால் எவ்வளவு வரும் என நீங்களே கணக்கு போட்டுக்கொள்ளுங்கள்.
தயாரிப்பு sector க்கான 20% கடன் தொகை உயர்த்த ஆர்டர் வந்துவிட்டதாகவும் அதை வங்கிகள் செய்யத் தொடங்கிவிட்டதாகவும் என்னிடம் பல வங்கி மேலாளர்கள் கூறினார்கள். இது உங்களுக்கும் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை.
ஏனெனில் உங்களிடமும் இத்தகவலை அவர்கள் தெரிவித்ததாகவும் என்னிடம் கூறினார்கள்.
கொரோனா முழு அடைப்பு காலத்தில் உங்களோடு பல முறை பேசி உங்கள் கவலைகள், கஷ்டங்களை, கேட்டு, உங்கள் தேவைகள் முழுவதையும் மத்திய அரசின் நேரடி பார்வைக்கு கொண்டு சென்றது நாங்கள்.
அக்கோரிக்கைகள் அத்தனையும் இன்று செயல்படுத்திக்கொண்டிருக்கிறது பிரதமர் மோடியின் அரசு.
இந்நிலையில் குற்றஞ் சொல்லும் மனப்பான்மையிலான உங்கள் அறிக்கைகள் பேட்டிகள் சரிதானா? என்பதை உங்கள் மனதிடம் கேளுங்கள்.
20% உயர்த்திக்கொடுக்கப்பட்ட கடன்களுக்கான பிணை சொத்துபதிவிற்கான பத்திர செலவுகளை வஜா செய்ய வேண்டுமென வங்கிகள் மாநில அரசுக்கு கடிதம் எழுதி Pro Active ஆக இருக்கிறது என்றால் அதற்கு யார் காரணம்? மத்திய அரசு தானே |
சிறுகுறு தொழில் மற்றும் நடைபாதை வியாபாரிகள் போன்றவர்களுக்கான முத்ரா. வங்கி கடன் திட்டத்தில் இந்தியாவிலேயே அதிகமாக கடன் தொகையும்- கடன் பெற்றவர்கள் எண்ணிக்கையும் தமிழ்நாடு முதலிடம் என்பதும் உங்களுக்கு தெரியுமா?
இம்மாபெரும் இயற்கை பேரழிவை மோடி அரசு சீர்செய்து வருவதில் உங்கள் பங்களிப்பும் இருக்க வேண்டும் என்பதை உணருங்கள்.
எதிர்கட்சியினர் போல் அறிக்கை விடுவதை தவிர்த்து ஆக்கபூர்வ அறிக்கைகளை முன்வையுங்கள்.
நாம் ஒன்றுசேர்ந்து பாரதத்தை உலகின் முதன்நிலை நாடாக்குவோம்
SR சேகர்
மாநிலப் பொருளாளர்
பாஜக
முருங்கை இலை காம்புகளை சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் சீரகம்,கறிவேப்பிலை,பூண்டு, சோம்பு, சின்ன ... |
நான்கு இலைகளையும் ஒரு காலையும் கொண்டு நன்கு நீருள்ள இடங்களில் சிறப்பாக வளர்ந்து ... |
இதன் வேர், இலை, பால், விதை, வெப்பமும் இனிப்பும் கைப்பும் உள்ள சுவகைகளை ... |