தமிழக பாஜக முன்னாள் தலைவர் கே.என். லட்சுமணன் உடல் நலக்குறைவால் காலமானார்.
சேலம் செவ்வாய் பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் உயிர்பிரிந்தது. முதுமை மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக கே.என். லட்சுமணன் உயிரிழந்தார்.
பாஜக மூத்த தலைவர் கே.என்.லட்சுமணன் சமீபத்தில் உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இந்தநிலையில் இன்று இரவு அவர் மரணமடைந்தார்.
தமிழக பாஜக தலைவராக 2 முறை பொறுப்பு வகித்த கே.என். லட்சுமணன், ஒரு முறை மயிலாப்பூர் தொகுதியில் சட்டப்பேரவை உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்ப்டடார்.
அவரது மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், தமிழக மக்களுக்கு பணியாற்றுவதிலும் தமிழகத்தில் பாஜகவை வளர்ச்சிஅடைய வைத்ததிலும் பெரும் பங்காற்றியவர் லட்சுமணன். அவசர நிலை காலத்தில் அவரது பங்களிப்புகள் நினைவு கூறத்தக்கவை. அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.
உணவைச் சீரணிக்க புளிப்புச்சுவை உதவுகிறது. புளிப்புச் சுவை அரிக்கும் தன்மையுள்ளது. இரத்தத்தில் உள்ள ... |
அருகம்புல்லும் வேரும் உஷ்ண நோய்கள், சிறுநீர் பிரச்சனை, தொந்தி குறைய, காமம் பெருக்கும். அரசு கர்பப்பை கோளாறு, ... |