நமது நாட்டின் வளங்களே, நம்மை வல்லரசாக்கும்

கொரோனாவால் ஏற்பட்ட பாதிப்பை, நல்லவாய்ப்பாக பயன்படுத்தி, இறக்குமதிகளை குறைத்து, தற்சார்புநாடாக இந்தியா உருவெடுக்கும்,” என, பிரதமர், மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

‘இந்தியாவில் நிலக்கரி சுரங்கங்களை, தனியார்நிறுவனங்கள் பயன் படுத்தும் வகையில், ஏலம் விடப்படும்’ என, மத்திய நிதியமைச்சர், நிர்மலா சீதா ராமன் கடந்த மாதம் தெரிவித்தார். அதன்படி, 41 நிலக்கரி சுரங்கங்களை ஏலம்விடும் பணியை, பிரதமர், மோடி, ‘வீடியோ கான்பரன்ஸ்’ வழியாக, நேற்று துவக்கிவைத்தார். அப்போது, அவர் பேசியதாவது:

நிலக்கரி துறையில், இந்தியா தன்னம்பிக்கைகொள்ள, ஒருமுக்கிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நிலக்கரி துறையின் வளர்ச்சிக்கு போடப் பட்டிருந்த பூட்டு, உடைக்கப் பட்டுள்ளது. நிலக்கரி துறையில், இதுவரையிலும், போட்டி ஏதும் இல்லாமல் இருந்தது. இதனால், வெளிப்படை தன்மையிலும், குறைபாடு இருந்தது.

மத்தியில், 2014ல், தே.ஜ., கூட்டணி ஆட்சி பொறுப்பேற்றபின், எடுக்கப்பட்ட பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக, நிலைமை மாறியுள்ளது. இந்த, 41 நிலக்கரி சுரங்கங்களின் ஏலத்தால். ஐந்துமுதல், ஏழு ஆண்டுகளில், 33 ஆயிரம்கோடி ரூபாய் முதலீடு வரும் என, எதிர்பார்க்க படுகிறது.

நாட்டில், மின் உற்பத்தி மீண்டும் அதிகரித்துள்ளது. பெட்ரோலிய பொருட்களின் தேவையும், அதிகரித் துள்ளது. சாலை மற்றும் நெஞ்சாலை வரிவசூல், கடந்த பிப்ரவரியில் இருந்த நிலையை எட்டியுள்ளது. இவை அனைத்தும், நாட்டின் பொருளாதாரம், மீண்டும் இயல்புநிலைக்கு திரும்புவதை காட்டுகிறது.
‘டிஜிட்டல்’ பரிவர்த்தனைகளும் அதிகரித்துள்ளன. இதற்குமுன், பல நெருக்கடிகளிலிருந்து வெற்றிகரமாக வெளிவந்துள்ள இந்தியா, கொரோனா நெருக்கடியையும், வெற்றிகரமாக சமாளிக்கும்.

கிராம பொருளாதார நடவடிக்கைகளும் வேகமெடுத்துள்ளன. கடந்த ஆண்டைவிட, இந்த ஆண்டு, காரீப் பருவ பயிர் சாகுபடி, 13 சதவீதம் அதிகரிக்கும் என, தெரிவிக்க பட்டுள்ளது. விவசாயிகளின் வருமானம் அதிகரிக்கவும், நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தற்சார்பு இந்தியாவாக மாற, நாம் இறக்குமதி செய்யும் பொருட்களை நிறுத்தி, அவற்றை ஏற்றுமதிசெய்யும் நிலையை எட்டவேண்டும்.நிலக்கரி உற்பத்தியில், இந்தியா, உலகளவில், நான்காவது இடத்தில் உள்ளது. ஆனால், நிலக்கரி இறக்குமதி செய்வதில், இரண்டாம் இடத்தில் உள்ளது. நிலக்கரியை நாம் எப்போது ஏற்றுமதி செய்ய போகிறோம்.

உலகளவில், நிலக்கரியை அதிகம் உற்பத்திசெய்யம் நாடாக, 2030ம் ஆண்டுக்குள் இந்தியாவை மாற்ற, இலக்கு நிர்ணயிக்க பட்டுள்ளது. இதற்காக, நான்கு திட்டங்கள் அடையாளம் காணப் பட்டுள்ளன. அவற்றில், 20 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும்.

கொரோனாவால் ஏற்பட்டுள்ள பாதிப்பை, இந்தியா, வாய்ப்பாக மாற்றியுள்ளது. எதிர் காலத்தில் இறக்குமதியைக் குறைத்து. தற்சார்புமிக்க பொருளாதார நாடாக, இந்தியா உருவெடுக்கும்.

கடந்த சிலவாரங்களுக்கு முன் வரையிலும், என் 95 முககவசங்களை நாம் இறக்குமதி செய்து வந்தோம். இப்போது, நம்மிடம், தேவைக்கு அதிகமாகவே, என்95 முககவசங்கள் உள்ளன.

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதிசெய்து, நாம் வளம்பெற வேண்டிய அவசியமில்லை. நமது நாட்டின் வளங்களே, நம்மை வல்லரசாக்கும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தமிழ்நாட்டில் அ.தி.மு.க., கூட்டணி ...

தமிழ்நாட்டில் அ.தி.மு.க., கூட்டணியில்தான் இருக்கிறோம் தமிழ்நாட்டில் அ.தி.மு.க., கூட்டணியில்தான் இருக்கிறோம் என மத்திய அமைச்சர் ...

ஜனநாயகத்தின் தாயாகம் இந்தியா

ஜனநாயகத்தின் தாயாகம்  இந்தியா இந்தியா, ஜனநாயகத்தின் தாயாக உள்ளதாகவும், பலசவால்களுக்கு மத்தியில் அதிவேகமாக ...

எல்விஎம் 3 – எம் 3 ராக்கெட் வெற் ...

எல்விஎம் 3 – எம் 3 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது எல்விஎம் 3 - எம் 3 ராக்கெட் மூலம் ...

விமான நிலையங்களின் எண்ணிக்கை 74 ...

விமான நிலையங்களின் எண்ணிக்கை 74 லிருந்து 140 ஆக உயர்வு தில்லி-தரம்சாலா-தில்லி இடையிலான முதலாவது இண்டிகோ விமானத்தை மத்திய தகவல் ...

பெண்சக்தி தான், வளர்ந்த பாரதத்த ...

பெண்சக்தி தான், வளர்ந்த பாரதத்திற்கான பிராணவாயு எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  மனதின் குரலில் உங்களை மீண்டும் ...

கோவிட் விழிப்புடன் இருக்க வேண் ...

கோவிட் விழிப்புடன்  இருக்க வேண்டும் கோவிட்-19, இன்ஃப்ளூயன்சா தடுப்புக்கான பொதுசுகாதார தயார் நிலை ...

மருத்துவ செய்திகள்

முருங்கைக் காயின் மருத்துவ குணம்

முருங்கைக் காய் மலச்சிக்கலை சரி செய்யும் . வயிற்றுப் புண்ணை போக்கும் மேலும் ...

வசம்பு என்னும் அறிய மருந்து

சுக்கு, மிளகு, திப்பிலி போல இந்த வசம்பு முக்கிய இடத்தைப் பெற்ற மருந்துப் ...

தலைக்கு ஷாம்பு அவசியம் தானா?

இயற்கையே நம் தலையில் ஆயிலை சுரக்க வைக்கிறது. அந்த ஆயில் நம் ...