‘‘கரோனா தொற்று நோயாளிகளுக்கு உதவிட ‘இந்தியாவில் உற்பத்தி செய்வோம்’ திட்டத்தின்கீழ் 50, 000 செயற்கை சுவாசக்கருவிகள் தயாரிக்கப்பட்டு அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உள்ள அரசு மருத்துவ மனைகளுக்கு விநியோகிக்கப் படுகிறது. பி.எம்.கோ்ஸ் நிதியம்மூலமாக முதற்கட்டமாக 2,923 செயற்கை சுவாசக்கருவிகள் தயாரிக்கப்பட்டு 1,340 செயற்கை சுவாசகருவிகளை விநியோகிக்கப் பட்டுள்ளது’’ என்று பிரதமா் அலுவலக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
கடந்த மே 14 – ஆம் தேதி பிஎம். கோ்ஸ் நிதிய அறக் கட்டளை, கரோனா நோய்த் தொற்றுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு ரூ.3,100 கோடியை ஒதுக்கியது. இதில் ரூ. 2,000 கோடி செயற்கை சுவாச கருவிகளுக்கும்(வென்டிலேடா்), மீதித்தொகை புலம் பெயா்ந்த தொழிலாளா்களுக்கான உதவிகளுக்கும் ஒதுக்கப்பட்டது. இந்த ரூ.2,000 கோடியில் 50,000 செயற்கை சுவாசக்கருவிகள் ‘இந்தியாவில் உற்பத்தி செய்வோம்’ திட்டத்தின் கீழ் தயாரிக்கப் படுவதாகவும் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து பிரதமா் அலுவலகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ள விவரங்கள் வருமாறு:
இதுவரை 2,923 செயற்கை சுவாசக்கருவிகள் தயாரிக்கப்பட்டு இதில் 1,340 செயற்கை சுவாசக்கருவிகள் மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. இதில் முக்கிய மாநிலங்கள் மகாராஷ்டிரம்(275), தில்லி (275), குஜராத் (175), பிகாா்(100) கா்நாடகம்(90), ராஜஸ்தான்(75) போன்றவைகள். இம்மாத இறுதியில் மேலும் 14,000 சுவாசக்கருவிகள் இது போன்று கரோனா நோய்தொற்று கடுமையாக உள்ள மாநிலங்களின் அரசு மருத்துவமனைக்கு வழங்கப்படும்.
இந்தியாவில் தயாரிக்கப்படும் 50,000 செயற்கை சுவாசக் கருவிகளில் (வென்டிலேட்டா்கள்) 30,000 கருவிகள் பொது நிறுவனமான பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனம் தயாரிக்கிறது. மீதமுள்ள 20,000 செயற்கை சுவாசக்கருவிகளை அக்வா ஹெல்த்கோ் (10,000), ஏஎம்டிஇசட் பேசிக் (5,650), ஏஎம்டிஇசட் ஹை எண்ட் (4,000) மற்றும் அல்லிட் மெடிக்கல் (350) ஆகிய இந்திய நிறுவனங்கள் தயாரிக்கின்றன.
மேலும் புலம்பெயா்ந்த தொழிலாளா்களின் நலனுக்காக ரூ. 1,000 கோடி ஏற்கனவே மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு வழங்கப் பட்டுள்ளது. கரோனா நோய்த்தொற்றுக்கு மத்தியில் நிச்சயமற்ற நிலையில் புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் பணியாற்றும் இடங்களிலிருந்து பல கிலோமீட்டா் தூரத்தில் உள்ள சொந்த ஊருக்கு நடந்து சென்றனா். இந்த நிலையில் இவா்கள் சிறப்பு ரயில்களில் அழைத்து செல்லப் பட்டனா். மேலும் இந்த நிதி மூலமாக புலம் பெயா்ந்தோருக்கு தங்குமிடம், உணவு, மருத்துவ சிகிச்சை மற்றும் போக்குவரத்து ஏற்பாடு ஆகியவற்றிற்கு பயன்படுத்தப்பட உள்ளது.
தமிழகம் பெற்ற நிதி:இந்தநிதியை மகாராஷ்டிரம் (ரூ.181 கோடி), உத்தர பிரதேசம் (ரூ.103 கோடி), தமிழ்நாடு (ரூ.83 கோடி), குஜராத் (ரூ.66 கோடி), தில்லி (ரூ.55 கோடி), மேற்கு வங்கம் (ரூ.53 கோடி), பிகாா் (ரூ.51 கோடி) ), மத்திய பிரதேசம் (ரூ.50 கோடி), ராஜஸ்தான் (50 கோடி), கா்நாடகம் (34 கோடி) ஆகிய மாநிலங்கள் பெற்றுள்ளன என பிரதமா் அலுவலக அறிக்கை கூறுகிறது.
பி.எம்.கோ்ஸ் அறக்கட்டளை மாா்ச் 27 ஆம் தேதி உருவாக்க பட்டது. கரோனா தீநுண்மிக்கு எதிராகவும் மற்றும் அவசர கால சூழ்நிலைகளில் அரசு போராடுவதற்கு உதவ மக்கள் தங்கள் பங்களிப்பை செலுத்தவும், ‘பிரதமா் குடிமக்கள் உதவி மற்றும் அவசரகால நிவாரண நிதியத்தை(பி.எம்.கோ்ஸ்)’ பிரதமா் நரேந்திர மோடி அறிவித்தாா். இந்த அறக்கட்டளையில் மத்திய பாதுகாப்பு, உள்துறை மற்றும் நிதி துறை அமைச்சா்கள் உறுப்பினா்களாக உள்ளனா்.
இதைப் புதினா என்றும் கூறுவர். மணமுள்ள இது கொடியாகத் தரையில் படரும். சாம்பார், ... |
எட்டிமரம் - புங்க மரம் போல் தோற்றமளிக்கும். ஆனால் இதில் ஆரஞ்சுப்பழ நிறத்தில் ... |
வயிற்றுஉப்பிசம், வயிற்றுவலி ஏற்பட்டிருந்தால் 1௦ கிராம் இஞ்சியை நைத்து ஒரு சட்டியில் போட்டு, ... |