காவல் துறை நடந்துகொண்ட விதம் தவறானது

சாத்தான்குளத்தைச் சேர்ந்த தந்தை, மகன் உயிரிழந்த சம்பவத்தில் காவல் துறை நடந்துகொண்ட விதம் தவறானது. காவல் துறையின் அத்துமீறல் கண்டிக்கத் தக்கது. காவல்துறையினரால் இதுபோன்ற நிகழ்வுகள் இனிமேல் ஏற்படக் கூடாது என பாஜக மாநில துணைத்தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

தென்காசியில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

மத்தியில் பாஜக மீண்டும் ஆட்சிக்குவந்து ஓராண்டு நிறைவு பெற்றுள்ள நிலையில் கடந்த 5 ஆண்டு ஆட்சியிலும், கடந்த ஓராண்டிலும் பாஜக அரசு மகத்தான சாதனைகளை செய்துள்ளது. கரோனா தொற்றால் உலகநாடுகளில் அசாதாரண சூழ்நிலை நிலவுகிறது. உலக நாடுகள் போற்றும்வகையில் ஊரடங்கு அமல்படுத்தப் பட்டு, மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்களுக்கு பெருமைசேர்க்கும் நல்ல திட்டங்களை பிரதமர் மோடி கொடுத்துள்ளார்.

எல்லா மாநிலங்களிலும் வீடு இல்லாதவர்களுக்கு வீடுகட்டும் திட்டம், 10 கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம், 9 கோடிபேருக்கு மேல் இலவக காஸ்இணைப்பு வழங்கும் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களை பாஜக அரசு செயல்படுத்தி வருகிறது. கரோனா காலத்தில் மட்டும் 9 ஆயிரம் மருத்துவமனைகள் கட்டப்பட்டுள்ளன. பல ரயில்கள் கரோனா சிகிச்சைக்காக படுக்கைகளாக மாற்றப்பட்டுள்ளன.

சாத்தான்குளத்தை சேர்ந்த தந்தை, மகன் உயிரிழந்த சம்பவத்தில் காவல் துறை நடந்துகொண்ட விதம் தவறானது. காவல் துறையின் அத்துமீறல் கண்டிக்கத்தக்கது. காவல் துறையினரால் இது போன்ற நிகழ்வுகள் இனிமேல் ஏற்பட கூடாது.

கரோனா ஒழிப்பு நடவடிக்கையில் தமிழக அரசு மத்திய அரசின் ஒப்புதலைப் பெற்று எல்லா நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. மற்றமாநிலங்களை ஒப்பிடும் போது தமிழகத்தில் கரோனா தொற்று அதிகமாக இருப்பது கவலை அளிக்கிறது.

அரசாங்கமே முழு பொறுப்பையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறுவது சரியானதல்ல. பொதுமக்களும் அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

“தாழ்நிலை சர்க்கரை” – சில செய்திகள் (HYPOGLYCEMIA)

நீரிழிவுநோய் உடையவர்களுக்குப் பல்வேறு காரணங்களால் திடீரென இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு குறைந்து விடும். ...

நீரிழிவு நோய்

உங்களுக்கு நீரிழிவு என வைத்தியர் கூறியிருக்கிறார். இது உங்கள் மனத்தில் உங்கள் உடல்நிலை ...

முருங்கை மரம், முருங்கை மரத்தின் மருத்துவ குணம்

மரம் , செடி, கொடி, புல், பூண்டு என்று இயற்கையின் கொடையான அனைத்து ...