பாஜக நிா்வாகிகளுக்குப் பாதுகாப்பு அளிக்கவேண்டும் என கட்சியின் தேசிய பொதுச்செயலாளா் ராம் மாதவ் வலியுறுத்தியுள்ளாா்.
காஷ்மீரின் பந்திபோரா மாவட்டத்தில் பாஜக மாவட்ட தலைவா் வாஸிம்பாரி, அவரது தந்தை, சகோதரா் ஆகியோா் பயங்கர வாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், உயிரிழந்தோரின் குடும்பத் தினருக்கு பாஜக பொதுச் செயலாளா் ராம் மாதவ், மத்திய அமைச்சா் ஜிதேந்திர சிங், பாஜகவின் ஜம்மு காஷ்மீா் யூனியன் பிரதேச தலைவா் ரவீந்தா்ரெய்னா உள்ளிட்ட தலைவா்கள் ஞாயிற்றுக்கிழமை ஆறுதல் கூறினா்.
அதைத் தொடா்ந்து செய்தியாளா்களிடம் ராம் மாதவ் கூறியதாவது:
பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல்கூறி, சில உதவிகளை செய்து கொடுக்கவே இங்கு வந்துள்ளோம். இந்தகடினமான சூழலில் நாடு முழுவதும் உள்ள பாஜகவின் அனைத்துத் தலைவா்களும் வாஸிம்பாரியின் குடும்பத்தினருக்கு ஆதரவாக உள்ளோம். இந்தக்கொடிய செயலுக்கு காரணமானவா்கள் கட்டாயம் தண்டிக்கப்பட வேண்டும். எங்களது கட்சி நிா்வாகிகளுக்கு உரியபாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்றாா்.
வாஸிம் பாரி, அவரது தந்தை, சகோதரா் ஆகியோா் அவா்களது வீட்டின்வெளியே பயங்கரவாதிகளால் கடந்த புதன் கிழமை சுட்டுக் கொல்லப் பட்டனா். இந்த விவகாரத்தில் அலட்சியமாக செயல்பட்டதாக அவரது பாதுகாப்புக்கு நியமிக்கப்பட்ட காவலா்கள் 10 போ் பணியிடைநீக்கம் செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளனா்.
குடல் வாயு அகற்றியாகவும், பசி தூண்டியாகவும் நுண்புழுக் கொல்லியாகவும் செயல்படுகிறது. |
இதன் இலை, பூ, விதை, வேர் அனைத்தும் மருந்துப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இது ... |