கருப்பர் கூட்டம் youtube சேனலை தடைசெய்யக்கோரி பாஜக புகார்

கருப்பர் கூட்டம்” என்ற youtube சேனலை தடைசெய்யக்கோரி, பாஜக சார்பில் சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்க பட்டுள்ளது. அந்த புகாரில், இந்துக்கள் வழிபடும் கடவுளை ஆபாசமாக பேசி,வீடியோ வெளியிட்டுள்ளதாக கூறபட்டுள்ளது. அதனால், அந்த யூடியூப் சேனலை தடை செய்ய வேண்டும் என்றும், சம்மந்தப் பட்டவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தப் பட்டுள்ளது. இதனிடையே, சென்னையில்,அண்ணாசாலை மற்றும் பூந்தமல்லி சாலையில் உள்ள பெரியார் சிலைகளுக்கு, மாநகர காவல்துறையினர் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கருப்பர்கூட்டம் என்ற பெயரிலான யூடியூப் சேனல் நாத்திக கருத்துக்களை பரப்பிவருகிறது. இந்த சேனலில் சமீபத்தில், ‘ஆபாசபுராணம் சீரியஸ்- கந்த சஷ்டி கவசம்- கதாகாலட்சேபம்’ என்ற தலைப்பில் ஒருவீடியோ பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதில் கந்தசஷ்டி கவசம்பாடல், ஆபாசமாக விமர்சனம் செய்யபட்டுள்ளது. கந்த சஷ்டி கவசம் அல்லது ஸ்கந்த சஷ்டி கவசம் என்பது, இறைவன் சிவ பெருமானின் மகனான கடவுள் முருகர் தொடர்பான பாடல் ஆகும். 19ம் நூற்றாண்டில் கந்த சஷ்டிகவசம் இயற்றப்பட்டது. கடவுளைப் புகழ்ந்துபாடி அவரது பேரருளை பெறுவதை நோக்கமாகக் கொண்டது இந்தபாடல்.

தீய சக்திகளிடமிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காக, உலகின் பல்வேறு நாடுகளிலும் வசிக்கக்கூடிய தமிழ் பேசக்கூடியவர்கள் வீடுகளில் தினமும் ஒலிக்கக் கூடிய பாடல் கந்த சஷ்டி கவசம். ஆனால், சமீபத்தில், கருப்பர்கூட்டம் என்ற இந்த யூடியூப் சேனல், ‘ஆபாசபுராணம் சீரியஸ்- கந்த சஷ்டி கவசம்- கதாகாலட்சேபம் என்ற  தலைப்பின் கீழ், கந்தசஷ்டி கவசம் பற்றி மோசமாக விமர்சனம் செய்து வீடியோ வெளியிட்டுள்ளது. இந்துக்களின் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் இந்த வீடியோவில் பேசக்கூடிய நபர் கருத்துக்களை தெரிவிக்கிறார். இந்துக் கடவுள்களின் புனிதத்தை அவமதிக்கும் நோக்கத்தில் பாலியல் சார்ந்த வன்ம பேச்சுக்கள் இதில் இடம்பெற்றுள்ளன.

யூடியூப் சேனலில் இவ்வாறு பேசியவர் ஜாமினில் வெளிவர முடியாத குற்றத்தின் கீழ் கைதுசெய்ய தகுதி உடையவராகிறார். இந்திய அரசியலமைப்பு சட்டம் பிரிவு 19 (1) A பேச்சுரிமையை குடிமக்களுக்கு வழங்கி இருந்தாலும்கூட அது கட்டுப் படுத்தப்பட்ட உரிமைதான். இந்த தண்டனைச்சட்டம், பிரிவு 295a கீழ் யார் ஒருவரும் தங்களுடைய கருத்து சுதந்திரம் அல்லது பேச்சுரிமையை பிற மதத்தினரின் உணர்வுகளை புண் படுத்த பயன்படுத்தக் கூடாது.

அவ்வாறு செய்தால் அது தண்டனைக் குரிய குற்றம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் கருப்பர் கூட்டம் யூடியூப்சேனல் வெவ்வேறு மதத்தினர் இடையே பகைமையை ஏற்படுத்தும் உள்நோக்கத்துடன் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆய ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆயிரம் கோடிக்கான திட்டங்களை  கொண்டுவந்துள்ளோம் தமிழகத்தில் அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி, தமிழகத்தினுடைய ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் ப ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் பணி சார்ந்த ட்ரோன் மத்திய அரசு சார்பில் கடந்த2022-ம் ஆண்டு ‘நமோ ட்ரோன் ...

ரயில்வேயில் ‘மேட் இன் இந்தியா’

ரயில்வேயில் ‘மேட் இன் இந்தியா’ நாட்டில் கடந்த 10 ஆண்டுகள் நடைபெற்ற ஆட்சி வெறும் ...

10 புதிய வந்தே பாரத் ரயில்களை கொட ...

10 புதிய வந்தே பாரத் ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைத்த பிரதமர் ரயில்வே உள்கட்டமைப்பு, இணைப்பு மற்றும் பெட்ரோகெமிக்கல்ஸ் துறைக்கு பெரும் ...

மருத்துவ செய்திகள்

யானைக்கால் நோய் குணமாக

முற்றிய வேப்பிலை, தும்பை இலை, குப்பைமேனி இல்லை, கீழா நெல்லி இலை, முருங்கைக் ...

நெல்லிக்காயின் மருத்துவக் குணம்

இதன் சுவை இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு. இது குளிர்ச்சியை உடலுக்கு உண்டாக்கும். சிறுநீரை ...

மிளகாயின் மருத்துவக் குணம்

பசி தூண்டியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.