திருக்குறள் நீதிநூல் மட்டுமின்றி, வாழ்வியல் நூலாகவும் திகழ்கிறது

பிரதமரின் கருத்துகுறித்து முதல்வர் தனது ட்விட்டர் பக்கத்தில், “உலக பொதுமறையாம் திருக்குறள் நீதிநூல் மட்டுமின்றி, வாழ்வியல் நூலாகவும் திகழ்கிறது. இனம், மொழி, நாடுபோன்ற எல்லைகளை கடந்து அனைத்து தரப்பு மக்களின் வாழ்வை நெறிப் படுத்தும் உயரிய நூலாகும். உலகிலேயே அதிக மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்ட நூல்களில் தெய்வப் புலவர் திருவள்ளுவர் இயற்றிய திருக்குறளும் ஒன்றாகும். இத்தகைய சிறப்புமிக்க திருக்குறளை இந்தியா முழுவதும் உள்ள இளைஞர்கள் படித்து பயன் பெற வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியிருப்பது தமிழுக்கும், தமிழருக்கும் பெருமைசேர்ப்பதாகும்’’ என தெரிவித்துள்ளார்.

பிரதமருக்கு நன்றிதெரிவித்து தமிழக துணை முதல்வர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப் பதாவது:

திருவள்ளுவ பெருமானின் பெருமையை புகழ்ந்துரைத்தும் வள்ளுவநெறியில் இந்தவையகம் வாழ்வுபெற வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி கருத்து தெரிவித்திருப்பதை கண்டு பெருமையும் மகிழ்ச்சியும் அடைந்தேன்.

ஒப்பில்லா கருத்துகளை மொழிந்த வள்ளுவரின் திருக்குறள் உலகப் பொது மறையாகும். அறநெறிகளின் அற்புத சாரம். தமிழ்மொழியின் பெருஞ்சிறப்பு. மக்கள் வாழ்வில் உயர்வு பெற ஒளிகாட்டி வழிகாட்டும் உன்னத நூல். திருக்குறளின் இப்பெருமைகளை எல்லாம் பிரதமரின் வாய் மொழியாக கேட்கும் போது தமிழ் மக்களின் இதயங்கள் பூரிப்பில் பொங்கிவழிகின்றன.

இனம், மொழி, மத பேதங்கள் கடந்து உலகமாந்தர் அனைவருக்கும் பொருந் தும் வகையில் மானிட வாழ்வுக்கான அறம், பொருள், இன்பத்தை விளக்கிக்கூறும் திருக்குறளின் சிறப்பை மேற்கொள் காட்டிய பிரதமருக்கு எனது சார்பிலும், உலகத்தமிழர்கள் அனைவரது சார்பிலும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், இதுதொடர்பாக கடிதம் ஒன்றையும் பிரதமருக்கு துணைமுதல்வர் ஓபிஎஸ் எழுதியுள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

செங்கோல் என்ன செய்யும்?

செங்கோல் என்ன செய்யும்? கொடுங்கோன்மை' என்ற சொல்லுக்கு மாற்றாக 'செங்கோன்மை' என்ற சொல்லை ...

ஆனந்த் பவனில் ‘வாக்கிங் ஸ்டிக ...

ஆனந்த் பவனில் ‘வாக்கிங் ஸ்டிக்’காக இருந்ததை வெளிக்கொண்டு வந்துள்ளோம் புதிய பார்லிமென்டில் நிறுவப்பட உள்ள செங்கோல் பிரதமர் நரேந்திர ...

மோடி கைபட்டால் குற்றம், கால்பட் ...

மோடி கைபட்டால் குற்றம், கால்பட்டால் குற்றம் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டங்களில் ஒன்று ...

கர்நாடக தேர்தல் முடிவு தேசத்தி ...

கர்நாடக தேர்தல் முடிவு தேசத்தின் மனோநிலை ஆகாது நடந்து முடிந்த கர்நாடக மாநில சட்டமன்ற   தேர்தலில் காங்கிரஸ் ...

ரூ.1.31 லட்சம் கோடி: திமுகவின் சொத் ...

ரூ.1.31 லட்சம் கோடி: திமுகவின் சொத்து பட்டியலை வெளியிட்டார் அண்ணாமலை! தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை இன்று ஆளும் தி.மு.க., ...

நமது ஆட்சிமுறையும் சுவாமி விவே ...

நமது ஆட்சிமுறையும் சுவாமி விவேகானந்தரால் ஈர்க்கப்பட்டதுதான் ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சா, மாதா ஸ்ரீ சாரதா தேவி ...

மருத்துவ செய்திகள்

மஞ்சள்காமாலை சித்த மருத்துவ சிகிச்சை

குடிதண்ணீரில் நஞ்சு, சுவாசிக்கும் காற்றில் அசுத்தம், உண்ணும் உணவில் கலப்படம், மது, ...

உளுந்தின் மருத்துவக் குணம்

இதை உண்பதால், வயிற்றுவலி, பேதி, சீதபேதி, அஜீரணபேதி, மூத்திரத் தொடர்புடைய நோய்கள், மூலவியாதி, ...

தியானமும் தற்சோதனையும்

தற்சோதனை இல்லாத தியானம், கைப்பிடி இல்லாத கூர்மையான கத்தி போன்றது. தற்சோதனையின்றி தியானம் ...