அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மதிய, காலை உணவு புதிய கல்விக் கொள்கை

அரசுப் பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மதிய உணவோடு, காலை உணவும் சேர்த்து வழங்கப்பட வேண்டும் என்று புதிய கல்விக் கொள்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை புதிய கல்வி கொள்கைக்கு ஜூலை 29-ம் தேதி ஒப்புதல்அளித்தது. அதில் பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. இதில் முக்கியமானது மாணவர்களுக்கு காலைநேர உணவு வழங்கும் திட்டமாகும்.

அதாவது மாணவர்கள் கல்வி கற்பதற்கு மதிய உணவு மட்டுமல்ல, காலை நேரத்தில் சத்தான உணவும் அவசியம். குழந்தைகளின் மூளை சுறுசுறுப்பாகவும், ஆக்கபூர்வமாகச் சிந்திக்கவும், சத்துள்ள காலை உணவுதேவை என்று கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக புதிய கல்விக் கொள்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

”குழந்தைகள் சத்து குறைபாட்டுடன் இருந்தாலோ அல்லது நல்ல உடல்நிலையில் இல்லாவிட்டாலோ அவர்களால் முழுமையாகக் கல்விகற்க முடியாது. ஆதலால், அவர்களுக்குரிய மனவளத்தையும் மற்றும் சுத்துள்ள உணவையும் வழங்க வேண்டும். பள்ளிமுறையில் சிறந்த பணியாளர்கள், கவுன்சிலர்கள் மூலம் சமூகத்துடன் ஈடுபாட்டை உருவாக்கலாம்.

காலையில் சத்தான உணவுக்குப்பின் மாணவர்கள் படிக்கும்போது ஆக்கபூர்வமாக செயல்பட முடியும், பாடங்களில் அதிகமான ஆர்வமும் ஏற்படும் என பல்வேறு மருத்துவஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆதலால், மதியஉணவு வழங்குவதோடு காலைநேரத்தில் மாணவர்களுக்கு எளிமையான சத்தான உணவும் வழங்கிடவேண்டும்.

காலை உணவு சூடாகத் தயாரிக்க முடியாத சூழலில் இருக்கும் பள்ளிக்கூடங்களில் மாணவர்களுக்குக் காலைநேரத்தில் வேர்க்கடலை, கொண்டைக்கடலை போன்றவற்றை வெல்லத்துடன் வேகவைத்து வழங்கலாம். உள்ளூரில் கிடைக்கும் பழவகைகளை வழங்கலாம்.

அனைத்துக் குழந்தைகளும் குறிப்பிட்டகால இடைவெளியில் முறைப்படி உடல் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். பள்ளிகளில் பயிலும் குழந்தைகள் அனைவரும் 100 சதவீதம் தடுப்பூசி போடப்பட்டு இருப்பதை உறுதிசெய்ய வேண்டும். மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் சுகாதார அட்டை தொடங்கி அதைப் பள்ளி நிர்வாகம் பராமரிக்க வேண்டும்.

5 வயதுக்குமுன் உள்ள அனைத்துக் குழந்தைகளும் தயாரிப்பு வகுப்புக்கு (அங்கன்வாடி) உட்படுத்தவேண்டும். குழந்தைகள் படிக்கும்போது, அவர்களுக்குப் பாடங்களையும் எண்களையும் விளையாட்டின் மூலம் புரியும்வகையில் அடிப்படையில் இருந்தே கற்பித்தால் அவர்களின் அறிவாற்றல், திறன், உளவியல் வளர்ச்சி அடையும்.

தயாரிப்பு நிலையில் இருக்கும் குழந்தைகளுக்கு மதிய உணவுத்திட்டமும் வழங்கிட வேண்டும். அங்கன்வாடி குழந்தைகளுக்கும் குறிப்பிட்டகால இடைவெளியில் உடல்நல பரிசோதனை நடத்தப்பட வேண்டும்”.

இவ்வாறு அதில் தெரிவி்க்கப்பட்டுள்ளது.

தேசிய மதிய உணவுத்திட்டம் என்பது பள்ளிகளில் பயிலும் ஒன்று முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மதியஉணவு இலவசமாக வழங்கும் திட்டமாகும். இதை மத்திய அரசின் நேரடி உதவியில் அரசு பள்ளிகளுக்கும், அரசு உதவிபெறும் பள்ளிகள், சிறப்பு பயிற்சிப்பள்ளிகள், மதரஸாக்களுக்கும் வழங்கப்படுகிறது.

இந்தத்திட்டத்தில் குறைந்தபட்சம் நாடு முழுவதும் 11.59 கோடி குழந்தைகள் பயன் பெற்று வருகின்றனர், இந்தத் திட்டத்தின் மூலம் 26 லட்சம்பேர் வேலை பெற்றுள்ளனர்.

இதுகுறித்து மத்திய மனிதவளத் துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “ தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின்படி 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்புவரை அதாவது 14 வயது வரையில் உள்ள மாணவர்களுக்குப் பள்ளி நாட்களில் ஒருவேளை உணவு அதாவது மதியஉணவு வழங்குவது கட்டாயமாகும். சில மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் தங்களின் சூழலுக்கு ஏற்ப குழந்தைகளுக்கு பால், முட்டை, பழங்கள், பருப்புவகைகளை வழங்குகின்றன” எனத் தெரிவித்தார்

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

சர்க்கரை நோய் குணமாக

முற்றிய வேப்பிலையையும் வில்வ இலையையும் இடித்துச் சாறு எடுத்து காலையும் மாலையும் ஒரு ...

எலுமிச்சையின் மருத்துவக் குணம்

உடல்சூடு தணிக்கவும், பசித்தூண்டியாகவும் செயல்படுகிறது. பழச்சாறு, கரிசலாங்கண்ணிச்சாறு, பால் வகைக்கு அரைலிட்டர் வீதம் எடுத்து ...

முருங்கை வேர் | முருங்கை வேரின் மருத்துவ குணம்

முருங்கை வேரின் சாருடன் பாலை சேர்த்து அதை கொதிக்க வைத்து அளவாக அருந்தினால் ...