அயோத்தி: பலகாலமாக எதிர்பார்த்த நிகழ்வு இன்று நிறைவேறியுள்ளது, இந்தநிகழ்ச்சி மிகவும் உணர்வுப் பூர்மானது என்று, அயோத்தியில் நடைபெற்ற ராமர் கோவில் அடிக்கல் நாட்டுவிழாவில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.
அடிக்கல் நாட்டுவிழா நடைபெற்றதும், அருகே அமைக்கப்பட்ட மேடையில், நிகழ்ச்சியில் பங்கேற்ற விஐபிகள் அமர வைக்கபட்டனர். உ.பி. முதல்வர் யோகி ஆதித்ய நாத், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன்பகவத் ஆகியோர் உரைக்குபிறகு, பிரதமர் மோடி ஜெய் சியா ராம் என்ற கோஷத்துடன் தனது உரையை துவங்கினார்.
ஜெய் ஸ்ரீராம் என்ற கோஷம் அயோத்தியில் மட்டும் இன்று ஒலிக்கவில்லை. இந்த உலகம்முழுக்க இன்று எதிரொலித்து கொண்டிருக்கிறது. உலகம்முழுக்க உள்ள ராமபக்தர்களுக்கு எனது மகிழ்ச்சியை தெரிவித்து கொள்கிறேன். கன்னியாகுமரி முதல் க்ஷர் பவணி வரை, கோட்டேஷ்வர் முதல் காமக்யா வரை, ஜெகந் நாத் முதல் கேதார்நாத் வரை, சோம்நாத் முதல் காஷி விஸ்வநாத் வரை இன்று முழு நாடும் ராமர்நாமத்தில் மூழ்கியுள்ளது.
ராமர் கோவில் எழுப்புவதற்காக பலதலைமுறைகள் தியாகம் செய்துள்ளனர். கோவில் கட்டுமானத்திற்காக உழைத்த ஒவ்வொருவருக்கும் நான் நன்றி தெரிவித்து கொள்கிறேன். பலதசாப்தங்களாக எதிர்பார்த்திருந்த நிகழ்வு இன்று நடந்தேறி உள்ளது. இதுமிகவும் உணர்வு பூர்வமானது. நமது கலாச்சாரத்தின் நவீன சின்னமாக ராமர்கோவில் விளங்கப் போகிறது. அன்பு, உண்மை, அர்ப்பணிப்பு ஆகியவற்றை அயோத்தி ராமர் கோவில் நமக்கு கற்றுத்தரப் போகிறது. இந்தப் பகுதியின் பொருளாதார வளர்ச்சிக்கும் ராமர் கோவில் உதவப்போகிறது. ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை என்னை அழைத்தது எனது அதிர்ஷ்டம், இந்த வரலாற்று தருணத்தை காண எனக்கு ஒருவாய்ப்பை அளித்தது. மனமார்ந்த நன்றி.
ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு தலைவர்களை ராமர் ஈர்த்துள்ளார். காந்தியையும் ராமர்ஈர்த்தார். தமிழில் கம்பராமாயணம் என்றும், தெலுங்கு, ஒடியா, கன்னடம், மலையாளத்திலும் ராமாயண இதிகாசம் இயற்றப் பட்டது. ராமர் கோவில் அடிக்கல் விழாவிற்கு ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை என்னை அழைத்தது எனது அதிருஷ்டம்.
இந்த கோயில் கட்டப்பட்டதன் மூலம், வரலாறு உருவாக்கப் படுவது மட்டுமல்லாமல், மீண்டும் உருவாக்கம் செய்யப் படுகிறது. படகில்செல்ல ராமருக்கு பழங்குடியினர் உதவியதுபோல, ஸ்ரீ கிருஷ்ணர் கோவர்தன மலையை உயர்த்தி பிடிக்க, குழந்தைகள் உதவியதுபோல, இறைவனின் திருவுள்ளத்தால், நமது பங்களிப்புடன், கோவில் கட்டுமானம் நிறைவடையும். இஸ்லாமியர்கள் அதிகம் உள்ள இந்தோனேஷியாவிலும், ராமாயணம் உள்ளது.
ராம ஜென்மபூமிக்கு இன்று சுதந்திரம் கிடைத்துள்ளது. ஆகஸ்ட் 15 நாட்டிற்கான சுதந்திரதினம். அதே போன்றுதான், ராம பக்தர்களுக்கு இன்றைய தினம். தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்த கோடிக்கணக்கான ராம பக்தர்களுக்கு இன்றைய நாள் முக்கியமானது. இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.
சிவப்பு சித்ர மூல வேர்ப்பட்டையை நன்கு உலர்த்தி பொடித்து தேன் அல்லது பாலில் ... |
பன்றிக்காய்ச்சல் இன்புளூயன்சியா எச்1 என் 1 என அழைக்கப்படுகிறது. இதில் மூன்று வகை ... |