ஆண்டுதோறும் சுதந்திரதின விழாவில் பிரதமர் நரேந்திரமோடி பாரம்பரிய தலைப்பாகை அணிந்து பங்கேற்பது வழக்கம். அதேபோல, நேற்றைய சுதந்திரதின விழாவின்போதும் காவி மற்றும் கிரீம் நிறத்தில் தலைப்பாகை அணிந்தபடி தேசியக் கொடியை பிரதமர் ஏற்றி வைத்தார்.
அரைக்கை குர்தாவும் இறுக்கமான சுரிதாரும், உடைக்கு பொருத்தமாக வெள்ளைநிறத்தில் காவி நிறபார்டர் போட்ட நீண்ட துண்டையும் அவர் அணிந்திருந்தார். கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, அந்த துண்டையே மூக்கையும் வாயையும் மறைக்கும் முகக் கவசம்போல சுற்றியிருந்தார்.
வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தில் வடமாநிலங்களில் அணியப்படும் பாரம்பரிய முறையிலான தலைப் பாகையைத்தான் பிரதமர் அணிந்து வருவார். அந்த தலைப்பாகையின் வண்ணங்கள் ஊடகங்களில் பேசு பொருளாகிவிடும்.
2014-ம் ஆண்டில் முதல்முறையாக பிரதமராக பதவியேற்ற மோடி, தேசியக்கொடி ஏற்றியபோது அடர் சிவப்பு நிற தலைப் பாகையையும் 2015-ம் ஆண்டில் பலவண்ண குறுக்குகோடுகள் கொண்ட மஞ்சள் நிற தலைப் பாகையையும் 2016-ம் ஆண்டில் பிங்க் மற்றும் மஞ்சள் தலைப்பாகையையும் பிரதமர் நரேந்திர மோடி அணிந்திருந்தார்.
2017-ல் தங்க நிறக் கோடுகள் கொண்ட மஞ்சளும் சிவப்பும்கலந்த நிற தலைப்பாகையையும், 2018-ல் காவி நிற தலைப்பாகையையும் அணிந்திருந்தார். கடந்த ஆண்டு பல நிறங்களைக் கொண்ட தலைப்பாகையை அணிந்திருந்தார் என்பது குறிப்பிட தக்கது.
உடலுறுப்புகளிலேயே இரண்டாவதாக, அதிகமாக கொடை (தனம்) செய்யப்படுவது எலும்புதான் (Bone Donation). ரத்தம்முதலாவது. ... |
தியானத்திற்கு மன ஒருமைப்பாடு நிலை மிகவும் முதன்மையானது. மனம் அலைபாயாது ஒரு பொருளில் ... |
இயற்கையின் மிகச் சிறந்த ஆயுதம் பட்டினி. நோயை எதிர்க்கவும், குணமாக்கவும் இயற்கையாகவே உடல் ... |