அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச வனத்துறை அமைச்சர்களுடன் பிரகாஷ் ஜவடேகர் காணொலிகாட்சி மூலம் உரையாற்றினார். அப்போது விவசாயிகளுக்கு மரம்தொடர்பான இந்த கோரிக்கையை வைத்தார். தங்கள் விவசாய நிலம் வன நிலமாக மாறி விடுமோ என விவசாயிகள் அஞ்ச வேண்டாம் என்றும் கூறியுள்ளார். நிலம் விவசாயிகளுடையதாகவே இருக்கும் என்றும், அவர்கள் தேவைப்படும்போது மரத்தை விற்றுக் கொள்ளலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஒவ்வொரு மாநிலத்திலும் காடுகளில் நீர் மற்றும் விலங்குகளுக்கான உணவுகளை அதிகரிக்கும் திட்டங்களை முன்னெடுக்கவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் 2,000 பள்ளிகளில் நர்சரிகள் உருவாக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் பேசுகையில், ‘இரண்டு வாரங்களுக்குள் அனைத்து மாநிலங்களும் டால்பின் திட்டத்திற்கான அவுட்லைனை தயார் செய்யவேண்டும். இந்த திட்டத்தின் மூலம் டால்பின்கள் இனம் நீண்ட காலத்திற்கு பாதுகாப்பாக இருக்கும்’ என்றார்.
ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தன்று கொடியேற்றி வைத்து பேசிய பிரதமர் மோடி, டால்பின்திட்டத்தை அறிவித்தார். இந்த திட்டம் நதி மற்றும் கடல் டால்பின்களின் பராமரிப்பில் கவனம் செலுத்தும் என்றும், சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதற்கும் இது வழிவகுக்கும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
நன்னாரி வேரைப் பொடியாக வெட்டிக் கைப்பிடியளவும், கைப்பிடியளவு கொத்து மல்லி விதையையும் ஒரு ... |
கோழிமுட்டை தாது அதிகப்படும். தேகம் தலைக்கும். இரத்தம் உண்டாகும். இதை அதிகநேரம் வேகவைத்தால் கெட்டியாய்விடும்; ... |
இதன் சுவை இனிப்பும்,கொஞ்சம் புளிப்பும் உடையதாய் இருக்கும். இது உடம்பிற்கு குளிரச்சியை உண்டாக்கும். இது ... |