ராணுவத் துறையில் அதிகளவு உற்பத்திக்கு முன்னுரிமை

‘ராணுவத் துறையில் தற்சார்பு நிலையை எட்ட, அதிகளவில் ராணுவ ஆயுதங்கள், தளவாடங்கள் உற்பத்திக்கு முன்னுரிமை தரப்படுகிறது’ என, பிரதமர் நரேந்திரமோடி குறிப்பிட்டார்.

ராணுவத் துறையில் தற்சார்பு என்றதலைப்பில், ‘வீடியோ கான்பரன்ஸ்’ முறையிலான மாநாடு நேற்று நடந்தது. இதில், பிரதமர் நரேந்திரமோடி பேசியதாவது:

நாம் பல ஆண்டுகளாகவே, ராணுவ ஆயுதங்களை இறக்குமதிசெய்யும் நாடாகவே இருந்து வந்துள்ளோம்.நாடு சுதந்திரம் அடைந்தபோதே, உள்நாட்டிலேயே ஆயுதங்களை தயாரிக்கும்திறன் நம்மிடம் இருந்தது. ஆனால், இதில் கவனம் செலுத்தப்பட வில்லை.தற்போது, தற்சார்பு திட்டத்தின்கீழ், ராணுவ ஆயுதங்கள் மற்றும் தளவாடங்கள் தயாரிக்க முன்னுரிமை கொடுக்கப்பட்டு வருகிறது. இந்தத்துறையில், அன்னிய நேரடி முதலீடு வரம்பும், 74 சதவீதமாக உயர்த்தப் பட்டுள்ளது. இதன் மூலம், நம் நாட்டைச்சேர்ந்த நிறுவனங்கள், ஆயுதத் தயாரிப்பில் ஈடுபடுவது அதிகரித்துள்ளது.

உள்நாட்டில் ஆயுதம் தயாரிப்பது, நம்முடைய தேவைக்காக மட்டுமல்ல. இந்ததற்சார்பு, உலக அமைதி மற்றும் உலக பொருளாதாரத்தை வலுப் படுத்தும். இந்தியப் பெருங்கடல் பகுதியின் பாதுகாப்பை உறுதிப்  படுத்தும். தற்சார்பு நிலையை எட்டுவதற்காக, ராணுவத் துறையில் அதிகளவு உற்பத்திக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

ராணுவ அமைச்சர் ராஜ்நாத்சிங் பேசியதாவது: ராணுத் துறையில் தற்சார்பு பெறுவதுடன், உலகின் ஏற்றுமதி நாடாகவும் நாம்விளங்க முடியும். அதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப் பட்டுள்ளன.

உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதிசெய்யும், 101 வகையான ஆயுதங்களுக்கு சமீபத்தில் தடை விதிக்கப் பட்டதும், அந்த நோக்கத்தில்தான்.’மேக் இன் இந்தியா’ என, இந்தியாவுக்காக உருவாக்குவதைவிட, உலக நாடுகளுக்காக உருவாக்கும் நாடாக, நாம் விரைவில் இருப்போம். இவ்வாறு, அவர் பேசினார்

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் ப ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் பணி சார்ந்த ட்ரோன் மத்திய அரசு சார்பில் கடந்த2022-ம் ஆண்டு ‘நமோ ட்ரோன் ...

ரயில்வேயில் ‘மேட் இன் இந்தியா’

ரயில்வேயில் ‘மேட் இன் இந்தியா’ நாட்டில் கடந்த 10 ஆண்டுகள் நடைபெற்ற ஆட்சி வெறும் ...

10 புதிய வந்தே பாரத் ரயில்களை கொட ...

10 புதிய வந்தே பாரத் ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைத்த பிரதமர் ரயில்வே உள்கட்டமைப்பு, இணைப்பு மற்றும் பெட்ரோகெமிக்கல்ஸ் துறைக்கு பெரும் ...

பொக்ரானில் முப்படை போர் பயிற்ச ...

பொக்ரானில் முப்படை போர் பயிற்சி: பிரதமர் நேரில் பார்வை ராஜஸ்தான் பொக்ரானில் இன்று 'பாரத் ஷக்தி' என்ற உள்நாட்டில் ...

இது தான் ஒரு தேசத்தின் கவுரவம்

இது தான் ஒரு தேசத்தின் கவுரவம் '' ஐ.நா., விவாதத்தில் எங்களிடம் இருந்து கச்சாஎண்ணெய் வாங்குவது ...

திமுகவின் வெறுப்புப் பேச்சு

திமுகவின்  வெறுப்புப் பேச்சு திமுக எம்பி. ஆ.ராசா ஒரு பொதுக்கூட்டத்தில் பேசுகையில் ‘இந்தியா ...

மருத்துவ செய்திகள்

புளியின் மருத்துவக் குணம்

இலை கட்டி வீக்கம் கரைப்பதாகவும், நாடி நடை மிகுந்து வெப்பத்தைப் பெருக்குவதாகவும், பூ ...

மூலநோய் குணமாக

தினமும் கடுக்காய்ச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு, உணவுக்குப் பின் திரிகடியளவு சுடுநீரில் கலந்து ...

இலவங்கப் பத்திரி மூலம் நாம் பெறும் மருத்துவம்

இலவங்கப்பத்திரி மூலம் பிரமேகம், கடுமையான காய்ச்சல், குளிர்சுரம், ஆஷ்துமா போன்றவைகளைக் குணப்படுத்தலாம். பெண்களுக்கு ...