ஸ்கிராம்ஜெட் இன்ஜின் பிரதமர் மோடி பாராட்டு

அதிவேக ஏவுகணை தயாரிப்புக்கான ராக்கெட் இன்ஜின் வெற்றிகரமாக விண்ணில் சோதிக்கப்பட்டுள்ளதற்கு பிரதமர்மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

அதிவேக ஏவுகணை தயாரிப்புக்கான ராக்கெட் இன்ஜினை (HSTDV) ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேற்பாட்டு நிறுவனம் வெற்றிகரமாக பரிசோதித்தது.

அதிவேக ஏவுகணை தயாரிப்புக்காக ஸ்கிராம்ஜெட் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட ராக்கெட் இன்ஜின், ஒடிசாவில் உள்ள வீலர்தீவில் அமைக்கப்பட்டுள்ள டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் ஏவுதளத்தில்  வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டது

ஒலியின் வேகத்தை விட 6 மடங்கு வேகத்தில் செல்லும் அதிவேக ஏவுகணைகளைத் தயாரிக்கும் முயற்சியில் ராணுவஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம்(டிஆர்டிஓ) ஈடுபட்டுள்ளது. இந்த ஏவுகணைகளில் பொருத்தக் கூடிய ராக்கெட் மோட்டர்கள் தற்போது பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றன. இந்த ராக்கெட்டில் ஸ்கிராம்ஜெட் இன்ஜின் பொருத்தப் பட்டுள்ளது. இதில் எரிபொருளுடன், காற்றை உள்வாங்கி செயல்படும் தொழில்நுட்பம் பயன்படுத்தப் படுகிறது.

ஸ்கிராம்ஜெட் இன்ஜின் பொருத்தப்பட்ட அதிவேக ராக்கெட் (HSTDV) இன்று விண்ணில் ஏவி பரிசோதிக்கப் பட்டது. ஏவுதளத்தில் இருந்து புறப்பட்ட ராக்கெட், விண்ணில் 30 கி.மீ தூரம்சென்றது. ஸ்கிராம் ஜெட் இன்ஜின் வெற்றிகரமாக செயல்பட்டு, திட்டமிடப்பட்ட பாதையில், வினாடிக்கு 2 கி.மீ வேகத்தில், இந்த ராக்கெட் சென்றது.

ராக்கெட் செல்லும்பாதை ரேடார்கள், எலக்ட்ரோ-ஆப்டிக்கல் கருவிகள் மற்றும் தொலை தூர கண்காணிப்புமையம் மூலம் கண்காணிக்கப்பட்டது. இவற்றை கண்காணிக்க வங்க கடலில், கப்பல் ஒன்றும் அனுப்பப்பட்டிருந்தது.

அதிவேக ஏவுகணை தயாரிப்புக்கு பயன்படும் இந்தராக்கெட்டின் அனைத்து உள்நாட்டு தொழில்நுட்பங்களும் வெற்றிகரமாக செயல்பட்டது உறுதி செய்யப்பட்டது.

இதற்காக டிஆர்டிஓ அமைப்பை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டினார். இந்த முக்கிய சாதனை , பிரதமரின் தற்சார்பு இந்தியா தொலை நோக்கை உணரவைப்பதாகவும் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். இந்தராக்கெட் இன்ஜின் தயாரிப்பில் ஈடுபட்ட விஞ்ஞானிகளுடன் பேசிய அமைச்சர் ராஜ்நாத்சிங், அவர்களுக்கு பாராட்டு தெரிவித்தார். அவர்களை நினைத்து நாடு பெருமைப் படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதிவேக ராக்கெட் திட்டத்தில் பணியாற்றிய அனைத்து விஞ்ஞானிகள், ஆராய்ச்சி யாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு டிஆர்டிஓ தலைவர் சதீஷ்ரெட்டி பாராட்டு தெரிவித்தார். இந்த வெற்றிகர பரிசோதனை மூலம், அதிவேக ராக்கெட் (ஹைபர்சோனிக்) என்ஜின் தயாரிக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் நுழைந்துள்ளது. இந்தராக்கெட் என்ஜின், நவீன அதிவேக  ஏவுகணை தயாரிப்பில் முக்கியபங்கு வகிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் நரேந்திர மோடி இதுகுறித்து கூறியதாவது:

‘‘அதிவேக ஏவுகணை தயாரிப்புக்கான ராக்கெட்இன்ஜினை ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேற்பாட்டு நிறுவனம் வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது. நமதுவிஞ்ஞானிகள் ஸ்கிராம்ஜெட் தொழில்நுட்பத்தின் உதவியடன் உருவாக்கியுள்ள ராக்கெட் இன்ஜின் ஒலியைவிடவும் 6 மடங்கு வேகத்தில் செல்லக்கூடியது. இதுபோன்ற வல்லமை இன்று ஒருசில நாடுகளில் மட்டுமே உள்ளது.’’ எனக் கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக்க பாஜக உறுதிபூண்டுள்ளது மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை திரும்பக் கொண்டு வருவதற்காக ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆய ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆயிரம் கோடிக்கான திட்டங்களை  கொண்டுவந்துள்ளோம் தமிழகத்தில் அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி, தமிழகத்தினுடைய ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் ப ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் பணி சார்ந்த ட்ரோன் மத்திய அரசு சார்பில் கடந்த2022-ம் ஆண்டு ‘நமோ ட்ரோன் ...

மருத்துவ செய்திகள்

வாய் துர்நாற்றம் நீங்க

ஒரு சிலர் வாயை திறந்தாலே நமக்கு தலை சுற்றி மயக்கமே வந்துவிடும் . ...

ஜீரண சக்தி பெற

அதிகமாக உணவை உண்ணுதல், காலம்தவறி உண்ணுதல் ஆகியவற்றை தவிர்க்கவேண்டும் சரியான விருந்தை சாப்பிட்டால், குளிர்ந்த ...

காட்டாமணக்கு இலையின் மருத்துவக் குணம்

இலை தாய்ப்பால், உமிழ்நீர் பெருக்கியாகவும், பல் இரத்தக் கசிவை நிறுத்தவும், வீக்கத்தை குறைப்பதாகவும் ...