ஆர்எஸ்எஸ் அமைப்பின் மூத்தமுழுநேர ஊழியரும், ‘விஜயபாரதம்’ வார இதழ் ஆசிரியருமான ம.வீரபாகு, கரோனாதொற்றால் நேற்று காலமானார். அவருக்கு வயது 71.
திருநெல்வேலியில் பிறந்த ம.வீரபாகு, கல்லூரிப்படிப்பை முடித்ததும் ஆர்எஸ்எஸ் முழுநேரஊழியரானார். கடந்த 50 ஆண்டுகளாக பல்வேறு பொறுப்புகளில் செயல்பட்டுவந்தார். 1975-ல்நெருக்கடி நிலையை எதிர்த்து இளைஞர்களை திரட்டி போராடியதால் சிறையில் அடைக்கப்பட்டார். இந்துமுன்னணி, விஷ்வ இந்து பரிஷத்தில் மாநில அமைப்பாளராக பலஆண்டுகள் பணியாற்றினார். வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோயிலில் மக்கள் வழிபாட்டுக்காக சிவலிங்கத்தை பிரதிஷ்டைசெய்ய மக்களை திரட்டி போராடி வெற்றிகண்டவர்.
கடந்த 10 ஆண்டுகளாக விஜயபாரதம் வாரஇதழின் ஆசிரியராக இருந்து, அதன் நிர்வாகத்தையும் கவனித்துவந்தார். அமைப்பு பணிகளில் தேர்ந்தவரான அவர், ஏராளமான ஆர்எஸ்எஸ் ஊழியர்களை உருவாக்கியுள்ளார்.
இந்நிலையில், கடந்த 2 வாரங்களுக்கு முன்பு கரோனாதொற்றால் பாதிக்கப்பட்ட வீரபாகு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்தார். அங்கு உடல்நிலை மோசமானதால், நேற்று அதிகாலை சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சைபலனின்றி நேற்று காலை 11.40 மணிக்கு உயிரிழந்தார். வில்லிவாக்கம் மயானத்தில் உடல்தகனம் செய்யப்பட்டது.
ம.வீரபாகு மறைவுக்கு பல்வேறு தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர். ‘‘அளப்பரிய ஆற்றல், வயதுக்கு மீறிய இளமை, உலகறியாதியாகம், திட்டமிடும் நேர்த்தி என்று சாதனை படைத்தவர் வீரபாகு” என்று பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.
இறைச்சி உணவில் தசையை வளர்க்கிற சத்தும், பி வைட்டமின் என்னும் உயிர்ச்சத்தும் நிறைய ... |
பொதுவாக மனித தோலை தோலமைப்பு பல தொழில் விற்ப்பன்னர் என அழைக்கலாம் உடலின் ... |
சிறுகுறிஞ்சா இலையை எடுத்துக் கொண்டு, தேவையான அளவு நாவல் கொட்டைகளை வெய்யிலில் காயவைத்து ... |
2quarterly