தேசத்தின் புகழ்பெற்ற தலைவருக்கு வாழ்த்துகள்

நாட்டுக்காகவும், ஏழைகளின் நலனுக்காகவும் அர்ப்பணிப்புடன் சேவையாற்றும்  தேசத்தின் புகழ்பெற்ற தலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் என்று பிரதமர் மோடிக்கு 70-வது பிறந்த நாள் வாழ்த்துகளை உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடிக்கு இன்று 70-வது பிறந்தநாளாகும். இதையடுத்து, பாஜக தலைவர்கள், நிர்வாகிகள், மத்திய அமைச்சர்கள் பலர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், உள்துறை அமைச்சர் அமித்ஷா, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்ட பலரும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

பாஜக சார்பில் மோடியின் பிறந்தநாளையொட்டி நாடுமுழுவதிலும் செப்டம்பர் 14 முதல் 20-ம் தேதி வரை சேவை வாரம் கொண்டாடப்படுகிறது. சேவை வார விழாவை முன்னிட்டு ரத்ததா முகாம்கள், மருத்துவ முகாம்கள், நலத்திட்ட உதவிகள் வழங்குதல், கோவில்களில் சிறப்புவழிபாடுகள் போன்றவற்றுக்கு பாஜக நிர்வாகிகள் ஏற்பாடு செய்துள்ளனர்.

மத்திய உள்துறை அமைச்சர் அமி்த்ஷா ட்விட்டரில் பதிவிட்ட வாழ்த்துச் செய்தியில் “நாட்டுக்காகவும், ஏழைகளின் நலனுக்காகவும் அர்ப்பணிப்புடன் சேவைசெய்யும் தேசத்தின் புகழ்பெற்ற தலைவருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். மோடியின் வடிவத்தில், தாழ்த்தப்பட்ட மக்களை வளர்ச்சியின் பிரதான நீரோட்டத்துடன் இணைத்து, வலுவான இந்தியாவுக்கு அடித்தளம் அமைத்த ஒருதலைவரை நாடு பெற்றுள்ளது.

நீண்டகாலமாக உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையில்வாழும் நாட்டின் ஏழை மக்களுக்கு வீடுகள், மின்சாரம், வங்கிக் கணக்கு, கழிவறை, ஏழை தாய்மார்களுக்கு உஜ்வாலாத் திட்டத்தின் கீழ் இலவச சமையல்  கேஸ் இணைப்பு வழங்கப்பட்டன.

மதிப்புக்குரிய வாழ்க்கையை சமூகத்தில் வாழவே இவை வழங்கப்பட்டன.
பிரதமரின் தீர்க்கமான உறுதியும், வலுவான விருப்பமும் காரணமாக மட்டுமே இவையனைத்தும் சாத்தியமாகியுள்ளன.

ஒருவலுவான, பாதுகாப்பான, தற்சார்பு இந்தியாவை உருவாக்க தனது வாழ்க்கையின் ஒவ்வொரு தருணத்தையும் செலவழிக்கும் ஒருசிறந்த தலைவர் நரேந்திர மோடி தலைமையில் பாரதமாதாவுக்கு சேவை செய்வதற்கான வாய்ப்பு கிடைப்பது ஒருபாக்கியம்.

நானும், கோடிக்கணக்கான மக்களுடன் சேர்ந்து, பிரதமர் மோடி நல்ல ஆரோக்கியத்துடனும், நீண்டகாலம் வாழவும் பிரார்த்திக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தமிழ்நாட்டில் அ.தி.மு.க., கூட்டணி ...

தமிழ்நாட்டில் அ.தி.மு.க., கூட்டணியில்தான் இருக்கிறோம் தமிழ்நாட்டில் அ.தி.மு.க., கூட்டணியில்தான் இருக்கிறோம் என மத்திய அமைச்சர் ...

ஜனநாயகத்தின் தாயாகம் இந்தியா

ஜனநாயகத்தின் தாயாகம்  இந்தியா இந்தியா, ஜனநாயகத்தின் தாயாக உள்ளதாகவும், பலசவால்களுக்கு மத்தியில் அதிவேகமாக ...

எல்விஎம் 3 – எம் 3 ராக்கெட் வெற் ...

எல்விஎம் 3 – எம் 3 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது எல்விஎம் 3 - எம் 3 ராக்கெட் மூலம் ...

விமான நிலையங்களின் எண்ணிக்கை 74 ...

விமான நிலையங்களின் எண்ணிக்கை 74 லிருந்து 140 ஆக உயர்வு தில்லி-தரம்சாலா-தில்லி இடையிலான முதலாவது இண்டிகோ விமானத்தை மத்திய தகவல் ...

பெண்சக்தி தான், வளர்ந்த பாரதத்த ...

பெண்சக்தி தான், வளர்ந்த பாரதத்திற்கான பிராணவாயு எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  மனதின் குரலில் உங்களை மீண்டும் ...

கோவிட் விழிப்புடன் இருக்க வேண் ...

கோவிட் விழிப்புடன்  இருக்க வேண்டும் கோவிட்-19, இன்ஃப்ளூயன்சா தடுப்புக்கான பொதுசுகாதார தயார் நிலை ...

மருத்துவ செய்திகள்

டீ யின் மருத்துவ குணம்

டீ குடிப்பதினால் சில வகை புற்று நோய்களும், இதய நோய்களும் ஏற்படுவதற்க்கான வாய்ப்புகள் ...

பெரும்பாடு குணமாக

நாகப்பட்டை, அத்திப்பட்டை, ஆவாரம்பட்டை மூன்றையும் ஒரு பிடி வீதம் எடுத்து மண் சட்டியிலிட்டு ...

ஆள்வள்ளிக்கிழங்கு

இதன் மற்றொரு பெயர் மரவள்ளிக்கிழங்கு, மரச்சீனிக்கிழங்கு ஆகும். இதை உண்பதால் பித்தவாத தொந்தரவையும் ...