’23 ஆண்டுகால பொது வாழ்வை பிரதமர் மோடி நிறைவு செய்துள்ளார். நாட்டிற்காக அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வரும் தேசபக்தர் பிரதமர் மோடிக்கு வாழ்த்துக்கள்’ என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
இது குறித்து, சமூகவலைதளத்தில் அமித்ஷா வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: இன்று பிரதமர் மோடி முதல்வராகவும், பிரதமராகவும் 23 ஆண்டுகள் பொது வாழ்வில் நிறைவு செய்துள்ளார். ஒரு நபர் தனது முழு வாழ்க்கையையும் தேச நலன் மற்றும் பொது சேவைக்காக எவ்வாறு அர்ப்பணிக்க முடியும். இந்த 23 ஆண்டு கால சாதனை, தனித்துவமான அர்ப்பணிப்பின் அடையாளமாகும். மோடியின் இந்த சாதனைக்கு நான் சாட்சியாக இருப்பது எனக்கு கிடைத்த அதிர்ஷ்டம்.
ஏழைகள் நலன், மேம்பாடு, தேசிய பாதுகாப்பு மற்றும் உலகளாவிய அடையாளத்தை வலுப்படுத்துதல் போன்ற பணிகளை எவ்வாறு செய்ய முடியும் என்பதை மோடி செய்து காட்டினார். பிரச்னைகளை துண்டு துண்டாகப் பார்க்காமல், நாட்டிற்கு ஒரு முழுமையான தீர்வை அளித்தார். தன்னைப் பற்றி கவலைப்படாமல், நாட்டிற்காக அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வரும் தேசபக்தர் மோடிக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அமித்ஷா கூறியுள்ளார்.
பன்றிக்காய்ச்சல் இன்புளூயன்சியா எச்1 என் 1 என அழைக்கப்படுகிறது. இதில் மூன்று வகை ... |
இயற்கையின் மிகச் சிறந்த ஆயுதம் பட்டினி. நோயை எதிர்க்கவும், குணமாக்கவும் இயற்கையாகவே உடல் ... |
இரத்த கொதிப்பு (உயர் இரத்த அழுத்தம்) சமீபகாலமாக நம்நாட்டு மக்களில் பெரும்பாலானவர்களை பாதித்து ... |