இளைஞர்களின் கனவுகளும், உயர்விருப்ப லட்சியங்களும் தான் இந்தியாவின் எதிர்காலம்

அறிவியல் உள்ளிட்ட அனைத்து அறிவுமே பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான உபகரணமே. ஐ.ஐ.டி. போன்ற கல்வி நிலையங்கள் இன்றைய காலகட்டத்தில் முன்னேறிவருவது  பெருமைகூறியது.. சேவையாற்றுவதில் புதுமை சிந்தனையைப் பயன்படுத்துவது என்ற எண்ணம் தான் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நாட்டை துடிப்புடன் வைத்திருக்கிறது .

எதிர்கால சூழல்களுக்கு ஏற்ப  இளைஞர்கள் தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் . இளைஞர்களின் கனவுகளும், உயர்விருப்ப லட்சியங்களும்தான் இந்தியாவின் எதிர்காலத்தை தீர்மானிப்பவையாக இருக்கும் .

நோய்த் தொற்று காலத்தில் வகுப்புகளை நடத்துவதிலும், ஆராய்ச்சிப் பணிகளைத் தொடர்வதிலும் சிரமங்கள் உள்ளநிலையிலும் தற்சார்புகொண்ட இந்தியாவை உருவாக்குவதில் ஐஐடி மேற்கொண்டுள்ள முயற்சிகள் பாராட்டுக்குரியது.

21 ஆம் நூற்றாண்டின் தேவைகளைக் கருத்தில் கொண்டு உருவாக்க பட்டுள்ள தேசிய கல்விக்கொள்கை 2020, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் உலக அளவில் முதன்மையான நாடாக இந்தியாவை உருவாக்குவதாகவும் இருக்கும் . பன்முகக் கல்வி கற்கும்வசதி தேசிய கல்விக் கொள்கை 2020-ல் உள்ளது. வெவ்வேறு பாடங்களை மாணவர்கள் தேர்வுசெய்து கொள்ள வாய்ப்பு கிடைப்பதுடன், எத்தனை முறை வேண்டுமானாலும் கல்விகற்பதில் இருந்து விலகி, மீண்டும் சேரும்வசதி இதில்உள்ளது. .

ஆராய்ச்சிக்கு நிதி அளிப்பது தொடர்பாக நிதி அமைப்புகளுடன் நல்ல ஒருங்கிணைப்பு செய்வதற்காகவும், அறிவியல் அல்லது மானுடவியல் சார்ந்த எல்லா படிப்புகளுக்கும் நிதி அளிப்பதற்காகவும் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை தொடங்குவதற்கு தேசிய கல்விக் கொள்கையில் திட்டங்கள் உள்ளது.

வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் கல்வி நிலையம் தொடங்க இதில் அனுமதிக்கப் படுவதால், இந்திய மாணவர்களுக்கு சர்வதேச கல்விவாய்ப்பு கிடைக்கும் . உலகில் கல்விக்கான தேடலில் முக்கியமையமாக இந்தியாவை உருவாக்க தேசிய கல்விக் கொள்கை உதவிகரமாக இருக்கும்.

கிழக்குப் பிராந்திய நலனுக்கான செயல்பாட்டுக் கொள்கையில் வட கிழக்குப் பிராந்தியம்தான் மையமாக உள்ளது , தென்கிழக்கு ஆசியாவுடன் இந்தியாவின் உறவுகளுக்கான நுழைவாயிலாக உள்ளது . கலாச்சாரம், வணிகம், தொடர்பியல் வசதி, திறன் மேம்பாடு ஆகிய துறைகளில் இந்தநாடுகளுடன் உறவுகள் மேம்படுத்தப்படும் . கல்விதான் மற்றொரு வழிமுறையாக இருக்கும் .

வட கிழக்குப் பிராந்தியத்தில் கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதற்கு, குறிப்பாக ரயில்வே, நெடுஞ்சாலைகள், விமானப் போக்கு வரத்து மற்றும் நீர்வழிப் போக்குவரத்து மேம்பாட்டுக்கு மத்திய அரசு முக்கியத்துவம் தருவதால், அந்தப் பிராந்தியத்தில் புதியவாய்ப்புகள் உருவாகும்.

குவஹாட்டி ஐ.ஐ.டி. பட்டமளிப்பு விழாவில் பிரதமர்  நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் பங்கேற்று உரையாற்றியது .

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தமிழர்களின் நலன் காக்கும் பிரத� ...

தமிழர்களின் நலன் காக்கும் பிரதமர் மோடி: நயினார் : தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் அறிக்கை: ...

ஆதாரங்களுடன் வெளிநாடு செல்லும� ...

ஆதாரங்களுடன் வெளிநாடு செல்லும் எம்.பி., குழுக்கள் ஆப்பரேஷன் சிந்துார்' மற்றும் பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவை உலகிற்கு ...

ராணுவ வீரர்களை அறுவை சிகிச்சை ந ...

ராணுவ வீரர்களை அறுவை சிகிச்சை நிபுணர்களுடன் ஒப்பிட்டு ராஜ்நாத் சிங் பாராட்டு ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது இந்திய பாதுகாப்பு படையினர் ...

மக்கள் நலனுக்காக இந்தியாவின் த� ...

மக்கள் நலனுக்காக இந்தியாவின் திட்டங்கள்: பிரதமர் மோடி பெருமிதம் உலக சுகாதார நிறுவனத்தின் 78 வது கூட்டத்தில் பேசிய ...

முதலீட்டாளர்களின் நம்பிக்கையை ...

முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பாதிக்கும்: ஒழுங்குமுறை அனுமதியில் தாமதம் குறித்து நிர்மலா சீதாராமன் ஒழுங்குமுறை அனுமதியில் ஏற்படும் தாமதம் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பாதிக்கும்'' ...

அம்ரித் பாரத் சீரமைக்கப்பட்ட ர� ...

அம்ரித் பாரத் சீரமைக்கப்பட்ட ரயில் நிலையங்களை மோடி மே 22-ல் திறந்து வைக்கிறார் 'அம்ரித் பாரத்' திட்டத்தில் சீரமைக்கப்பட்ட பரங்கிமலை, ஸ்ரீரங்கம் ...

மருத்துவ செய்திகள்

ஆலமரத்தின் மருத்துவ குணம்

ஆலமரத்தின் மொக்கு, பூ இவைகளைக் கொண்டு வந்து அம்மியில் வைத்துப் பால்விட்டு மைபோல ...

மூலநோய் குணமாக

தினமும் கடுக்காய்ச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு, உணவுக்குப் பின் திரிகடியளவு சுடுநீரில் கலந்து ...

வெள்ளைப்பாடு நிற்பதற்கான வழிமுறைகள்

சோற்றுக்கற்றாழை – மடல்களைக் கொண்டு வந்து, மேல் தோலை நீக்கி, நன்கு கழுவி ...