முன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த்சிங் இன்று காலமானார்

முன்னாள் பிரதமர் அடல்பிஹாரி வாஜ்பாய்க்கு மிக நெருக்கமானவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஜஸ்வந்த்சிங் உடல்நலக் குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 82.

முன்னாள் ராணுவ அதிகாரியான ஜஸ்வந்த் சிங், பாஜகவை தோற்றுவித்தவர்களில் குறிப்பிடத் தக்க தலைவராக விளங்கினார். முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆட்சியில் மத்திய நிதியமைச்சர், வெளியுறவு, பாதுகாப்புத் துறை அமைச்சராகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் ஜஸ்வந்த் சிங்.

நீண்டகாலமாகவே உடல்நலக் குறைவால் அவதிப்பட்டுவந்த ஜஸ்வந்த் இன்று ராணுவ ஆராய்ச்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 2014-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்ட ஜஸ்வந்த் சிங் தொடர்ந்து மருத்துவமனையில் அவ்வப்போது சிகிச்சைபெற்று வந்தார்.

இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் மீண்டும் உடல்நலம் பாதிக்கப்பட்டு ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். உடலில் பல்வேறு உறுப்புகள் செயலிழந்த நிலையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப் பட்டு வந்த நிலையில், ஜஸ்வந்த் சிங் இன்று சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.

ராணுவ ஆராய்ச்சி மருத்துவமனை வெளியிட்ட அறிவிப்பி்ல், “முன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த்சிங் செப்டம்பர் 27-ம் தேதி காலை 6.55 மணிக்கு மாரடைப்பு ஏற்பட்டு காலமானார் என்பதை வருத்தத்துடன் தெரிவிக்கிறோம். கடந்த ஜூன் 25-ம் தேதி பல்வேறு உடல்உறுப்புகள் செயலிழந்தது தொடர்பாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு ஜஸ்வந்த் சிங்கின் உயிர்பிரிந்தது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 1938-ம் ஆண்டு ஜனவரி 3-ம்தேதி ராஜஸ்தானில் உள்ள பார்மர் மாவட்டம், ஜசோல் கிராமத்தில் ராஜ்புத் குடும்பத்தில் பிறந்தவர் ஜஸ்வந்த்சிங். ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றி ஓய்வுபெற்றவரான ஜஸ்வந்த் சிங் தனது 60 வயதுகளில்தான் அரசியலுக்குள் நுழைந்தார்.

ஜன சங்கம் தோற்றுவிக்கப்பட்ட காலத்தில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய், மூத்ததலவைர் அத்வானியோ ஆகியோருடன் பழக்கம் ஏற்பட்டு ஜஸ்வந்த்சிங் கட்சியில் சேர்ந்தார். ஜஸ்வந்த் சிங்கின் திறமைக்குக் குறுகிய காலத்திலேயே பாஜகவில் மரியாதையும், அங்கீகாரமும் கிடைத்தது.

1996-ம் ஆண்டு பாஜக தலைமையில் வாஜ்பாய் ஆட்சியில் நிதியமைச்சராக ஜஸ்வந்த் பொறுப்பேற்றார். அதன்பின் 1998-2002 ஆம் ஆண்டு வரையிலான வாஜ்பாய் தலைமையிலான ஆட்சியில் வெளியுறவுத் துறை, பாதுகாப்புத் துறை, நிதியமைச்சராக ஜஸ்வந்த் சிங் பதவி வகித்தார்.

மேலும், கடந்த 2012-ம் ஆண்டு தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கும் ஜஸ்வந்த் சிங் முன்மொழியப்பட்டார். ஆனால், நடந்த தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஹமீது அன்சாரியிடம் ஜஸ்வந்த சிங் தோல்வி அடைந்தார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

அல்லிப் பூவின் மருத்துவக் குணம்

அல்லிப் பூ குளிர்ச்சி உள்ளது. உடலுக்கும் குளிர்ச்சியைத் தரவல்லது. எனவே உடலில் காணும் ...

சூரியகாந்திப் பூவின் மருத்துவக் குணம்

சூரியகாந்திப் பூக்களிலிலுருந்து பெறப்படும் எண்ணெய் ஆரோக்கியத்திற்கும், நரம்புத் தளர்ச்சி நீங்குவதற்கும் மிகச் சிறந்ததாகப் ...

முட்டைக்கோசுவின் மருத்துவக் குணம்

முட்டைக்கோசில் அஸ்கார்பிக் (வைட்டமின் 'சி') உள்ளது. ஒரு கிளாஸ் முட்டைக்கோசு சாறு குடித்தாலே ...