கூட்டுறவு இயக்கத்தை பொருளாதாரத்துடன் இணைக்க மோடி அழைப்பு

கூட்டுறவு இயக்கத்தை, சுழற்சி பொருளாதாரத்துடன் இணைப்பதன் அவசியத்தை பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார். ஐ.சி.ஏ., எனப்படும், சர்வதேச கூட்டுறவு கூட்டணியின் உலகளாவிய கூட்டுறவு மாநாடு, டில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நேற்று நடந்தது. இதில் பிரதமர் மோடி பேசியதாவது:

இந்தியாவை பொறுத்தவரை கூட்டுறவு என்பது அடிப்படை கலாசாரமாகவும், வாழ்க்கை முறையாகவும் உள்ளது. நாட்டின் எதிர்கால வளர்ச்சியில் கூட்டுறவு நிறுவனங்களுக்கு பெரும் பங்கு உள்ளது. கூட்டுறவு தொடர்பான ஒட்டுமொத்த சூழல், கடந்த 10 ஆண்டுகளில் மாற்றம் கண்டுள்ளது.

கூட்டுறவு சங்கங்களை பல்நோக்கு அமைப்பாக மாற்ற வேண்டும் என்பதற்காகவே, தனியாக கூட்டுறவு அமைச்சகம் உருவாக்கப்பட்டது. வீட்டுவசதித் துறை மற்றும் வங்கிப் பிரிவிலும் கூட்டுறவு நிறுவனங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

நாட்டில், இரண்டு லட்சம் வீட்டு வசதி கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. கூட்டுறவு வங்கித்துறையை வலுப்படுத்த பல்வேறு சீர்திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. கூட்டுறவு நிறுவனங்களுக்கு உலகளவில் பெரிய வாய்ப்புகள் உள்ளன. கூட்டுறவு இயக்கத்தை சுழற்சி பொருளாதாரத்துடன் இணைக்க வேண்டும். இத்துறையில், ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்களை ஊக்குவிக்கும் வழிகளைப் பற்றி விவாதிக்க வேண்டும்.

கூட்டுறவு வங்கிகளில், 12 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகள் உள்ளன. இந்த இயக்கத்தை மேலும் வலுப்படுத்த, கூடுதலாக இரண்டு லட்சம் பல்நோக்கு கூட்டுறவு சங்கங்களை கிராமங்களில் அமைக்க அரசு உறுதி ஏற்றுள்ளது.

கூட்டுறவு அமைப்புகளில், 60 சதவீதம் பெண்கள் உள்ளனர். இதன் வளர்ச்சிக்கு அவர்கள் ஆற்றி வரும் பங்கு பாராட்டுக்குரியது. இவ்வாறு அவர் பேசினார்.இந்த நிகழ்ச்சியில், நம் அண்டை நாடான பூடான் பிரதமர் தாஷோ டிஷெரிங் டோப்கே, பசிபிக் பெருங்கடல் தீவு நாடான பிஜியின் துணை பிரதமர் மனோவா காமிகாமிகா, மத்திய கூட்டுறவுத்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நீதித்துறையின் பணியை, எதிர்க்க ...

நீதித்துறையின் பணியை, எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துள்ளன 'நீதித்துறையின் பணியை, எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துள்ளன' என மக்களவை ...

மக்களின் விருப்பங்களை மதிக்கவ ...

மக்களின் விருப்பங்களை மதிக்கவில்லை எதிர்க்கட்சிகளின் அமளியால் நாடாளுமன்றத்தின் இருஅவைகளும் நேற்று ஒத்திவைக்கப் பட்டன. ...

அரசியலில் தி.மு.க – வின் அரசியல ...

அரசியலில் தி.மு.க – வின் அரசியல் நாடகத்தை கேள்வி கேட்க அனைவருக்கும் உரிமை உண்டு – அண்ணாமலை அரசியலில் தி.மு.க.,வின் இரட்டை வேடத்தை கேள்வி கேட்க அனைவருக்கும் ...

கூட்டுறவு இயக்கத்தை பொருளாதார ...

கூட்டுறவு இயக்கத்தை பொருளாதாரத்துடன் இணைக்க மோடி அழைப்பு கூட்டுறவு இயக்கத்தை, சுழற்சி பொருளாதாரத்துடன் இணைப்பதன் அவசியத்தை பிரதமர் ...

இந்திய அரசியல் சாசன தினத்தையொட ...

இந்திய அரசியல் சாசன தினத்தையொட்டி இன்று மோடி உரை இந்திய அரசியல் சாசன தினத்தையொட்டி இன்று (நவ. 26), ...

மகாயுதி’ கூட்டணி வெற்றிக்கு வ ...

மகாயுதி’ கூட்டணி வெற்றிக்கு வழிகாட்டிய ஆர்.எஸ்.எஸ் சனிக்கிழமை (23-11-2024) அன்று வெளியான மகாராஷ்டிர சட்டப் பேரவைத் ...

மருத்துவ செய்திகள்

அம்மான் பச்சரிசியின் மருத்துவ குணம்

இது கொடி வகையைச் சேர்ந்தது. கீரைவகையைச் சேர்ந்தது இல்லை. எனினும் இதன் இலைகள் ...

சந்தனத்தின் மருத்துவக் குணம்

சிறுநீர் பெருக்கியாகவும், உடல் பலம் பெருக்கியாகவும் செயல்படுகிறது.

இரத்த அழுத்த நோய்

இரத்த அழுத்தம் அதிகமுள்ளவர்கள் கீழ்காணும் உணவுகளைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.