இன்று முதல் ஒரே நாடு ஒரே ரேசன் அட்டை திட்டம்

ஒரே நாடு ஒரே ரேசன் அட்டைதிட்டம் தமிழகத்தில் இன்று முதல், 2020 அக்டோபர் 1 முதல் அமலுக்கு வந்துள்ளது. ஏற்கனவே, இத்திட்டம், ஆந்திரா, கேரளா, மகாராஷ்டிரா, கர்நாடகா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட 25 மாநிலங்களில் செயல்படுத்தபட்டு வருகிறது. நாடுமுழுவதும், ஒரு நாடு ஒரே ரேசன் அட்டை திட்டம் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் நடைமுறைக்கு வந்துவிடும். பெருந்தொற்று பரவலை கருத்தில்கொண்டு, தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் பயனாளிகள், ஒருமாதத்துக்கு நபர் ஒருவருக்கு 5 கிலோ அரிசி/ கோதுமை வீதம் நவம்பர் மாதம் வரை இலவசமாகப் பெற்று கொள்ளலாம் என பிரதமர் அறிவித்தார். தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின்கீழ், பெறும் மாதாந்திர பொருட்களுடன் கூடுதலாக இதனை பெற்றுக்கொள்ளலாம். இத்திட்டத்தின் முக்கிய அம்சமான, ரேசன் அட்டை மாற்றும் திட்டம், ஒருஇடத்திலிருந்து மற்றோர் இடத்துக்கு மாறிச் செல்லும் தொழிலாளர்கள், பணியாளர்களுக்கு பெரிதும் உதவும். தங்களது மாதாந்திர தேவைக்கான பொருட்களை அருகில் உள்ள ரேசன்கடைகளில் இதன் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.

பொதுவிநியோக முறையின் ஒருங்கிணைந்த மேலாண்மை 2018 முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் முக்கிய நோக்கம், நாடுதழுவிய ரேசன் அட்டை மாற்றும் முறையை அறிமுகப்படுத்துவதாகும். ஒரு நாடு ஒரே ரேசன் அட்டை முறை மூலம், தேசிய உணவுப்பாதுகாப்பு சட்டத்தின் கீழ், பயனாளிகளுக்கு இது பயனளிக்கும். சொந்தமாநிலத்தில் வழங்கப்பட்டுள்ள ரேசன் அட்டைகளைப் பயன்படுத்தி, புலம்பெயரும் தொழிலாளர்கள் வேலைக்காக செல்லும் இடங்களில், விரும்புகின்ற கடைகளில் பொருட்களை வாங்கிச்செல்லலாம். நியாய விலை கடைகளில் வைத்திருக்கும் பயோமெட்ரிக் உபகரணத்தில் கைரேகையைப் பதிவுசெய்து பொருட்களைப் பெறலாம்.

தமிழகத்தில், 34,773 நியாய விலைக் கடைகள் உள்ளன. 2.09 கோடி குடும்ப அட்டைகள் தமிழகத்தில் புழக்கத்தில் உள்ளன. இதில் 6.75 கோடிக்கும் மேற்பட்ட பயனாளிகள் பயனடைந்து வருகின்றனர். தமிழகத்தில், அனைத்து ரேசன் கடைகளும், டிஜிடல் ரேசன் ஸ்மார்ட் அட்டைகளை வழங்கியுள்ளன. மாநிலத்தில் ePOS கருவி மூலம் பயோமெட்ரிக் முறை செயல்பட்டு வருகிறது. அனைத்து ePOS கருவிகளும், பயோமெட்ரிக் விரல் ரேகையைச் சரிபார்க்கும் கருவியுடன் மேம்படுத்தப்படும்.

பொதுவிநியோகத் திட்டத்தின் மூலம் ஏற்கனவே அனைத்து நியாய விலைக் கடைகளிலும் இந்த முறை அமலுக்கு வந்துள்ளது. அரசு அதிகாரியான  தருண், ஒரு நாடு ஒரே ரேசன் அட்டை திட்டம், ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்துக்கு இருப்பிடத்தை மாற்றுகின்றவர்களுக்கு, உண்மையிலேயே பயனுள்ளதாக இருக்கும் என்று கூறினார். ஒரு மாநிலத்திலிருந்து மற்றோர் மாநிலத்துக்கும், ஒரு மாவட்டத்திலிருந்து மற்றோர் மாவட்டத்திற்கும் மாறிச் செல்வபவர்களுக்கு இது உதவிகரமாக இருக்கும். முன்பு தற்போது உள்ள ரேசன் அட்டையை ரத்து செய்து, மற்றொரு மாநிலத்தில் புதிய அட்டைக்கு விண்ணப்பித்து பெற்றுக் கொள்ள வேண்டியிருந்தது. திருச்சியில், பொது விநியோக கடை விற்பனையாளர்கள், வழக்கமாக அளிக்கும் அரிசியுடன், செறிவூட்டப்பட்ட அரிசியையும் வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அட்டை ஒன்றுக்கு, 5 கிலோ, 15 கிலோவாகவும், 10, 10 கிலோ விகிதத்திலும் இரு அரிசிகளையும் வழங்க வேண்டும். இந்த நடைமுறை வழக்கமாக அளிக்கப்படும் அரிசிவழங்கும் வரை அக்டோபர் மாத கடைசி வரையில் அமலில் இருக்கும்.

வேலை வாய்ப்பு மற்றும் இதர வேலைகளுக்காக தங்கள் இருப்பிடத்தை மாற்றவேண்டிய அவசியம் உள்ளவர்களுக்கு ஒரு நாடு ஒரே ரேசன் அட்டை திட்டம் நிச்சயமாக உதவிகரமாக இருக்கும். கோவிட்-19 முடக்கத்தால் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். நியாயவிலை கடைகள் மூலம் வழங்கப்படும் அத்தியாவசியப் பொருட்களை பெறுவதில் அவர்களுக்கு சிரமம் இருந்தது. நாடுமுழுவதும் ஒரு நாடு ஒரே ரேசன் அட்டை திட்டம் அமல்படுத்தப்படும் போது, வேலைநிமித்தம் இடத்தை மாற்றிக்கொள்ளும் தொழிலாளர்களுக்கு உண்மையிலேயே பயன் விளைவிக்கும்.

 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

டில்லியில் குடிநீர் இல்லை ஆனால ...

டில்லியில் குடிநீர் இல்லை ஆனால் ஆல்கஹால் கிடைக்கிறது மோடி குற்றம்சாடியுள்ளார் 'டில்லியில் குடிநீர் இல்லை. ஆனால் ஆல்கஹால் கிடைக்கிறது' என ...

பாலியல் கொடுமை, மேடை நகைச்சுவைய ...

பாலியல் கொடுமை, மேடை நகைச்சுவையா சபாநாயகர் அப்பாவுக்கு அண்ணாமலை கேள்வி சபாநாயகர் அப்பாவுக்கு, பாலியல் கொடுமை மேடை நகைச்சுவையா என ...

நெல் ஈரப்பதம் பிரச்சனைக்கு தீர ...

நெல் ஈரப்பதம் பிரச்சனைக்கு தீர்வு காணாத திமுக அரசு – அண்ணாமலை நெற்பயிர்களின் ஈரப்பதம் அதிகரிப்பது வழக்கமான ஒன்று. இதற்கு நிரந்தரத் ...

வளர்ந்த இந்தியா கனவை நனவாக்குவ ...

வளர்ந்த இந்தியா கனவை நனவாக்குவதில் என்சிசி மாணவர்கள் பங்களிப்பு அவசியம் – ராஜ்நாத் சிங் வளர்ந்த இந்தியா கனவை நனவாக்குவதில் என்சிசி மாணவர்கள் பங்களிப்பு ...

ட்ரம்ப் பதவியேற்பு விழாவில் வெ ...

ட்ரம்ப் பதவியேற்பு விழாவில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல் வரிசையில் முதல் இடம் டிரம்ப் பதவியேற்பு விழாவில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல் ...

ரூ 11 லட்சம் கோடி மத்திய அரசு நித ...

ரூ 11 லட்சம் கோடி மத்திய அரசு நிதி – தங்கம் தென்னரசுக்கு அண்ணாமலை பதிலடி “தமிழக திட்டங்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை என ...

மருத்துவ செய்திகள்

கண்டங்கத்திரி இலையின் மருத்துவக் குணம்

கோழையகற்றியாகவும், சிறுநீர் பெருக்கியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.

சர்க்கரை வியாதி

சர்க்கரை வியாதி உடையவர்களுக்குக் கணையத்திலிருந்து குறைந்தளவு "இன்சுலின்" சுரப்பதாலோ அல்லது போதுமான இன்சுலின் ...

மாதுளையின் மருத்துவக் குணம்

மார்புவலியைத் தணித்து, இதயத்திற்கு ஊட்டமளிப்பது மாதுளை. வயிற்று எரிச்சலை உடனடியாக குணப்படுத்துகிறது மாதுளைச் ...