மக்கள் பிரதிநிதியாக 20-ம் வருடத்தில் அடியெடுத்து வைத்திருக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அமித் ஷா, “நமது நாட்டின் வரலாற்றில் அக்டோபர் 7 மிகமுக்கிய நாளாகும். 2001-ஆம் ஆண்டின் இதே நாளில்தான் குஜராத்தின் முதல்வராக நரேந்திரமோடி பொறுப்பேற்றார். அன்றிலிருந்து தொய்வில்லாமல் மக்களுக்காகவும் நாட்டுக்காகவும் தொடர்ந்து பணியாற்றிவருகிறார்,” .
அவரது எண்ணங்களாலும், லட்சியங்களாலும், பண்புகளாலும் கவரப்பட்டு ஒவ்வொருஇந்தியரும் தற்போது இந்தியாவை உலகத்தின் தலைமைபொறுப்பில் நிலைநிறுத்த பணியாற்றி கொண்டிருக்கிறார்கள்.
130 கோடி இந்தியர்களின் எண்ணங்களை பிரதமர் மோடியால் மட்டுமே புரிந்துகொள்ள முடியும் குஜராத்தின் முதல்வராக வளர்ச்சிக்கான புரட்சியை உருவாக்கிய மோடி, தற்போது பிரதமராக மிகவும் சிறப்பாக பணியாற்றி கொண்டிருக்கிறார்.
ஏழைகள், விவசாயிகள், பெண்கள், மற்றும் சமுதாயத்தில் நலிவுற்றபிரிவினருக்கு பல்வேறு வரலாற்று சிறப்புமிக்க திட்டங்களின் மூலம் அதிகாரம் அளித்து, அவர்களின் வாழ்வில் நேர்மறைமாற்றத்தை பிரதமர் உருவாக்கிவருகிறார்.
புஜ்ஜை நிலநடுக்கத்தின் பாதிப்பிலிருந்து மீட்டு வளர்ச்சிப்பாதையில் வழி நடத்தியதில் ஆகட்டும், குஜராத்தை அமைதி மற்றும் நல்லிணக்கத்தின் அடையாளமாக மாற்றியதில் ஆகட்டும், கடுமையான உழைப்பு மற்றும் தொலைநோக்குப் பார்வையோடு குஜராத்தை போன்ற வளர்ச்சியை நாடுமுழுவதும் ஏற்படுத்துவதில் ஆகட்டும், இவை அனைத்துமே மோடி அவர்களின் ஓய்வில்லா உழைப்பின் விளைவுகள்தான் என்று அமித் ஷா கூறினார்.
புரோட்டீன் தினமும் இவர்கள் ஒரு கிலோ எடைக்கு 1கிராம் வீதம் புரோட்டீன் உணவைச் சாப்பிடலாம். |
கோவைக்கொடி இனத்தை சேர்ந்த இந்தமூலிகைக்கு பொதுவாக கருடன் கிழங்கு, பேய் சீந்தில், ... |
அரபு நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் ஒட்டகப் பால் மற்றும் அதன் சிறுநீரில் இருந்து ... |