இப்போது எனது புரிதல் மாறியுள்ளது

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய நடிகை குஷ்பு டெல்லியில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, தேசிய பொதுச் செயலாளர் சி.டி. ரவி முன்னிலையில் கட்சியில் இணைந்தார். அப்போது தமிழக பாஜக தலைவர் எல். முருகனும் உடன் இருந்தார்.

இதையொட்டி பாஜகவின் தேசிய தலைமை அலுவலகத்தில் இன்று பகல் 1.30 மணியளவில் நடந்தநிகழ்வில் குஷ்பு மட்டுமின்றி முன்னாள் ஐஆர்எஸ் அதிகாரி சரவணகுமார், பத்திரிகையாளர் மதன்ரவிச்சந்திரன் ஆகியோரும் கட்சியில் இணைந்தனர்.

மாற்றம் என்பது நிலையானது, இப்போது எனதுபுரிதல் மாறியுள்ளது என்று காங்கிரஸில் இருந்து பாஜகவில் சேர்ந்ததுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய குஷ்பு தெரிவித்தார்.

பாஜக தமக்கு வழங்கப்படும் பொறுப்புகளை நிறைவேற்றவேன். பிரதமர் நரேந்திரமோதி போன்ற ஒருதலைவர் தேவை எனும் புரிதலுக்கு நான் வந்துள்ளேன், இந்தியாவில் பலகோடி பேர், பிரதமர் நரேந்திர மோதி மீது நம்பிக்கை வைத்துள்ளனர். பாஜகவில் உள்ள தொண்டர்களை போலவே நானும் கட்சிக்காக பாடுபடுவேன் என்று குஷ்பு தெரிவித்துள்ளார்.

இழப்பில்லை என்கிறது காங்கிரஸ் ஒருகட்சி தமக்கான தலைமையையே கண்டுபிடிக்க முடியாத சூழலில் எப்படி நாட்டைக்காக்க முடியும் என்று காங்கிரஸை விமர்சித்தார் குஷ்பு.

காங்கிரஸ் கட்சியில் இருந்த போது பாஜகவை கடுமையாக விமர்சித்தது குறித்து பேசியவர் எதிர்க்கட்சியில் இருக்கும் போது அவ்வாறு விமர்சிக்க வேண்டிய கட்டாயம் இருந்தது என்று குறிப்பிட்டார்.

ஒரு கட்சியின் தேசிய செய்தித்தொடர்பாளராக இருந்தபோது கட்சியின் நிலைப்பாடு குறித்து, தனது தனிப்பட்ட நிலைப்பாட்டை மீறிபேச வேண்டியிருந்தது என்று அவர் கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நாட்டுக்காக பாடுபட்ட சுதந்திர ...

நாட்டுக்காக பாடுபட்ட சுதந்திர வீரர்களின் கனவை நனவாக்குவோம் நாட்டுக்காக பாடுபட்ட சுதந்திர வீரர்களின் கனவை நனவாக்குவோம் என ...

பாதுகாப்பற்ற பணிச் சூழல் திறனற ...

பாதுகாப்பற்ற பணிச் சூழல் திறனற்றவர்களின் பரிசு காலநிலை பாராது பொது மக்களுக்காக உழைக்கும் அரசு ஊழியர்களில், ...

இந்தியா வாழும் நாகரீகங்களின் இ ...

இந்தியா வாழும் நாகரீகங்களின் இருப்பிடம் 1. 74ஆவது குடியரசுத் திருநாளை முன்னிட்டு, உள்நாட்டிலும், அயல்நாடுகளிலும் ...

இடைதேர்தலில் பாஜக போட்டியிட வே ...

இடைதேர்தலில்  பாஜக போட்டியிட வேண்டும் என நாடே எதிர்பார்க்கிறது ஈரோடு கிழக்கு இடைதேர்தலில் பாஜக போட்டியிட வேண்டும் என ...

ஆவணபடம் நாட்டின் ஒருமைபாட்டை ச ...

ஆவணபடம் நாட்டின் ஒருமைபாட்டை சீர்குலைக்கும் வேலை பிரதமர் நரேந்திர மோடி குறித்த பிபிசி ஆவணபடத்துக்கு மத்திய ...

திமுகவுக்கு ஆங்கிலேயர் ஆட்சிய ...

திமுகவுக்கு ஆங்கிலேயர் ஆட்சியே பரவா இல்லை.. திமுகவுக்கு ஆங்கிலேயர் ஆட்சியே பரவா இல்லை.. கோவில்களை ஒழுங்கா ...

மருத்துவ செய்திகள்

தொடர்ந்து ஓரிரு முறை கருச் சிதைவு ஏற்பட்டிருந்தால் என்ன செய்ய வேண்டும்?

இயற்கையில் 30% - 40% கருச்சிதைவு முதல் 3 மாதத்திற்குள் ஆகிவிடும். ஒருவருக்கு ...

தியானம் செய்யும் நேரம்

முதன் முதலில் தியானம் கற்பவர்கள், நேரத்தைத் தேர்வு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். ...

முருங்கையின் மருத்துவக் குணம்

மலமிளக்கியாகவும் சிறுநீர் பெருக்கியாகவும் காமம் பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும் செயல்படுகிறது.